Advertisment

டோனி, ரெய்னா ஓய்வு: கிரிக்கெட் உலகம் புகழாரம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களின் இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்திருந்தபோதிலும், அவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே, அவர்களை உற்சாகமாக வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Updates : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களின் இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்திருந்தபோதிலும், அவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமுமே, அவர்களை உற்சாகமாக வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் இன்று 74வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இன்று, ஒரே நாடு - ஒரே வரி, நொடிப்பு மற்றும் திவால் விதிகள் & வங்கிகள் இணைப்பு ஆகியவை நாட்டில் நனவாகியுள்ளது. கடந்தாண்டு, இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு, இது வரை இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டது. இது தற்போது, 18% அதிகரித்துள்ளது. இன்று, உலகம் முழுவதும் உள்ள, பல பெரிய நிறுவனங்கள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளன. ‘இந்தியாவில் தயாரிக்க வேண்டும்’, அதேபோல் ‘உலகத்துக்காக தயாரிக்க வேண்டும்’ என்ற மந்திரத்துடன் நாம் முன்னேற வேண்டும். இந்தியாவை நவீனத்துவத்தை நோக்கி வேகமாக நகர்த்த, நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒரு புதிய வழிகாட்டுதலை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேவை தேசிய, சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு திட்டத்திலிருந்து பூர்த்தி செய்யப்படும். நாட்டின் ஒட்டு மொத்த உள்கட்டமைப்பையும் இணைக்க, மிகப் பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி, செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி 4வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்த வழிக்காட்டு நெறிமுறைகளின்படி, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் கலந்துகொள்ளவில்லை.

அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருடைய உடல் நிலை நேற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today Live Updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    23:06 (IST)15 Aug 2020

    உங்கள் ஹெலிகாப்டர் ஷாட்-களை சர்வதேச கிரிக்கெட் மிஸ் பண்ணும்- உள்துறை அமைச்சர் அமித் ஷா

    உங்கள் helicopter ஷாட்-களை சர்வதேச கிரிக்கெட் மிஸ் பண்ணும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டரில் தெரிவித்தார்.  மேலும், ' உங்களுக்கு வாழ்த்துக்களை பறை சாற்றும் கோடிக் கணக்கான ரசிகர்களுடன் நானும் ஒருவனாக உள்ளேன். இந்திய கிரிக்கெட் அணியை வலுப்படுத்துவதில் வரும் நாட்களிலும் தோனியின் பங்கு தொடரும் என  நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.

    22:30 (IST)15 Aug 2020

    உலகம் சாதனைகளைப் பார்த்தது, நான் தோனி என்கிற அந்த நபரைப் பார்த்தேன் - விராட் கோலி

    விராட் கோலி தனது ட்விட்டரில், "ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒரு நாள் தனது பயணத்தை முடிக்க வேண்டும்.  ஆனால், நமக்கு நெருக்கமான ஒருவர் அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகப்படியான உணர்ச்சியை உணர்கிறோம்.  நீங்கள் நாட்டிற்காக செய்த அனைத்தும் மக்கள் இதயத்தில் இருக்கும், ஆனால் உங்களிடமிருந்து நான் பெற்ற பரஸ்பர மரியாதை, அரவணைப்பு எப்போதும் என்னுடையதாகவே இருக்கும். உலகம் சாதனைகளைப் பார்த்தது, நான் தோனி என்கிற அந்த நபரைப் பார்த்தேன். எல்லாவற்றிற்கும் நன்றி" என்று தெரிவித்தார்.   

    21:53 (IST)15 Aug 2020

    மைக்கல் வாகன் ட்வீட்

    21:39 (IST)15 Aug 2020

    இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது - சச்சின் டெண்டுல்கர்

    தோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் , "இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது. ஒன்றாக இனைந்து 2011 உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் " என்று தெரிவித்தார்.  

    20:51 (IST)15 Aug 2020

    தோனி அமைதியான மனிதர் - சேவாக் புகழாரம்

    வீரர்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் அவரைப் போன்ற ஒரு அமைதியான மனிதரை காண்பது அரிதான காரியம் என்று விரேந்திர சேவாக் பதிவிட்டுள்ளார்.  

    20:32 (IST)15 Aug 2020

    சுரேஷ் ரைனா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

    தோனியைத் தொடர்ந்து, சுரேஷ்  ரயினாவும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

     

    20:27 (IST)15 Aug 2020

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ் தோனி

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.

    எம்.எஸ். தோனியின்  தலைமையில் 2007 ஐசிசி உலக 20/20 கோப்பை போட்டி , 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சேம்பியன்ஸ் கோப்பை  ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றது.

    19:25 (IST)15 Aug 2020

    மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு : எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    வரும்18 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை மேட்டூர் அணையிலிருந்து  புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.     

    19:17 (IST)15 Aug 2020

    இந்தியாவை எந்தவொரு நாடாவது தாக்கினால், உரிய பதிலடி தரப்படும் - ராஜ்நாத் சிங்

    இந்தியாவை எந்தவொரு நாடாவது தாக்கினால், உரிய பதிலடி தரப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். வரலாற்றை உற்றுநோக்கும்போது, இந்தியா எந்தவொரு நாட்டின்மீதும் தாக்குதல் நடத்தியதில்லை என்றும் அதேபோல், எந்தவொரு நாட்டின் நிலப்பகுதியையும் கைப்பற்றியதில்லை என்று கூறினார். எதிரியாக இருந்தாலும், அன்பால் இதயத்தை வெல்ல வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நம்பிக்கையே தவிர, அந்த நாட்டின் நிலத்தின்மீது ஆசையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    19:15 (IST)15 Aug 2020

    சென்னையில் 1,179 பேருக்கு  கொரோனா தொற்று

    சென்னையில் மீண்டும் கொரோன பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது. இன்று  1,179 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,321 ஆக உள்ளது.

    18:28 (IST)15 Aug 2020

    இன்று புதிதாக 5,860 பேருக்கு கொரோனா தொற்று; 127 பேர் உயிரிழப்பு

    இன்று தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.  

    18:00 (IST)15 Aug 2020

    புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

    புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். புழல் சிறையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 114 கைதிகளில் 99 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

    16:50 (IST)15 Aug 2020

    சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற பூரண சுந்தரி கொடியேற்றம்

    சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மதுரை மாற்று திறனாளியான பூரண சுந்தரி தான் படித்த பள்ளியில் இன்று தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.

    16:45 (IST)15 Aug 2020

    எஸ்.பி.பி. உடல் நலம் சீராக உள்ளது

    பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் நலம் சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடல் நலம் சீராக கவனிக்கப்பட்டு வருகிறது என்றும் அறிக்கை கூறியுள்ளது.

    16:38 (IST)15 Aug 2020

    தனிப்பட்ட முறையில் கருத்துகளை கூறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்.

    தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கருத்துகளை கூறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவிப்பு.

    14:15 (IST)15 Aug 2020

    முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மீண்டும் ஒ.பி.எஸுடன் ஆலோசனை

    முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் காலையில் இருந்து அமைச்சர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மத்தியில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். முதல்வர் வீட்டில் ஆலோசனை முடிந்த பிறகு தற்போது மீண்டும் 4 அமைச்சர்கள் ஓ.பி.எஸூடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    14:11 (IST)15 Aug 2020

    சென்னையில் சுதந்திர தினம்

    மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சுதந்திர தினத்தன்று  கொடியேற்றி தன்னுடைய சுந்திர வாழ்த்துகளை பதிவு செய்துள்ள காட்சிகள் 

    சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. கோ. பிரகாஷ் இஆப., அவர்கள் தேசிய கொடியேற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார்.#IndependenceDay#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/le1lzRuOrX

    13:56 (IST)15 Aug 2020

    புதுவையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்

    புதுவையில் இன்று ஒரே நாளில் புதிதாக 369 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது புதுவை யூனியன் பிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,355 ஆக உயர்ந்துள்ளது.

    13:36 (IST)15 Aug 2020

    ஒரே நாளில் ரூ. 248 கோடிக்கு மது விற்பனை

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 248 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை பொது ஊரடங்கு இருப்பதால் நேற்று மதுவிற்பனை அதிகரித்திருக்கிறது. திருச்சியில் ரூ. 55.77 கோடி, மதுரையில் ரூ.56.45 கோடி, சேலத்தில் ரூ. 54.60 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனை.

    13:08 (IST)15 Aug 2020

    துணை முதல்வருடன் ஆலோசனை முடித்த பின்னர், முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

    அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்கள், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் துணை முதவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, அமைச்சர்கள் அனைவரும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். துணை முதல்வருடன் நடத்திய ஆலோசனை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

    12:35 (IST)15 Aug 2020

    முதல்வர் வேட்பாளர் விவாதம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

    அதிமுகவில் முதல்வர் வேட்பாளார் யார் என்பது குறித்து விவாதமான நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    12:21 (IST)15 Aug 2020

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    12:17 (IST)15 Aug 2020

    எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து விரைவாக மீண்டு வருவார் -நடிகர் ராகவா லாரன்ஸ் நம்பிக்கை

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து விரைவாக குணமடைந்து வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், “மாபெரும் பாடகர், மாபெரும் மனிதநேயமிக்கவர், 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது அறக்கட்டளைக்கு வந்து அவருடைய கைகளால் என்னுடைய குழந்தைகளுக்கு உணவு பறிமாறினார். அவருடைய சேவையும் நல்ல இதயமும் அவரைக் காப்பாற்றும். நானும் எனது குழந்தைகளும் அவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறோம். அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    12:10 (IST)15 Aug 2020

    பாடகர் எஸ்.பி.பி. குணமடைய பிரார்த்தனை - கிரிக்கெட் வீரர் அஸ்வின்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    11:44 (IST)15 Aug 2020

    முதல்வருடன் ஆலோசனை நடத்த மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்துக்கு விரைவு

    முதல்வர் பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் சற்று நேரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். அதனால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள், ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் முதல்வர் இல்லத்துக்கு செல்கின்றனர்.

    11:29 (IST)15 Aug 2020

    எஸ்.பி.பி மாமா குணமடைய இறைவன் ஆசீர்வாதம் செய்வார் - யுவன்சங்கர் ராஜா ட்வீட்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எஸ்.பி.பி மாமா விரைவாக குணமடைய சர்வவல்லமை கொண்ட இறைவன் தனது ஆசீர்வாதங்களை வழங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.

    11:06 (IST)15 Aug 2020

    அடுத்த சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள் - எல்.முருகன்

    தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “அடுத்த சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் இருப்பார்கள்; சட்டசபையில் நுழையாமல் விடமாட்டோம் என்ற உறுதிமொழியை இந்த சுதந்திர தினத்தில் எடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

    10:28 (IST)15 Aug 2020

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயார் - தமிழக அரசு

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யத் தயாராக உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் எம்.ஜி.எம். மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    10:16 (IST)15 Aug 2020

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் நிச்சயமாக குணமடைந்து வருவார் - பாடகி சித்ரா நம்பிக்கை

    எஸ்.பி.பாலசுப்ரமணியம் உறுதியான நேர்மறையான மனிதர். நிச்சயமாக அவர் தற்போதைய சுழலில் இருந்து வெளியே வருவார். அவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    09:54 (IST)15 Aug 2020

    தேவாலயங்கள், மசூதிகளுக்கான சீரமைப்பு நிதியை உயர்த்தி அறிவித்தார் முதல்வர்

    செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த முதல்வர் பழனிசாமி, சுதந்திர தின உரையில், “தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதியுதவி இந்த ஆண்டு முதல் 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது!” என்று அறிவித்தார்.

    Tamil Nadu News Today Live Updates : குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், “கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
    Tamil Nadu Independence Day
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment