Tamil News Today Updates: அதிமுக-வில் ஏற்பட்டிருக்கும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை இன்னும் முடியாததால், தொடர் ஆலோசனை நடைபெறுகிறது. அமெரிக்க அதிபருக்கு மூச்சு திணறல் இருந்ததாகவும், இல்லை எனவும் வெளியான மாறுபட்ட அறிக்கைகளால் குழப்பம் நீடிக்கிறது. சிகிச்சைக்கு இடையே காரில் வெளியில் வந்து தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்து, ட்ரம்ப் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்துகிறது. சென்னையில், ஆளுநர் மாளிகை நோக்கி, திமுக பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. 5 நாள் அறிவிக்கப்படும் பரிசுகளில் முதல்நாளான இன்று மாலை 3 மணிக்கு மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்றுமுதல் தினமும் விசாரணைக்கு நடக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீடு வழக்கில் இன்றுமுதல் தினசரி பிற்பகல் 2.30க்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News Today: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால், முதல்வர் பழனிசாமி தனது ஆதரவு அமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனிடையே, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் அனைவரும் அக்டோபர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் தங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Web Title:Tamil news today live updates coronavirus trump hathras nobel prize 2020
நடிகை தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டு ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் தொற்றில் இருந்து குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
எஸ்ஐ தேர்வு இறுதி பட்டியலை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. பட்டியலை வெளியிடவோ, பணி நியமனம் செய்யவோ கூடாது என நீதிபதிகள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மாநிலங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை வழங்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இன்று இரவே ஜிஎஸ்டி நிலுவை வழங்க உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுவரை வசூலிக்கப்பட்ட இழப்பீட்டு வரியில் ரூ.20 ஆயிரம் கோடியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது. உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தைக் கண்டித்து திமுக எம்.பி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி சார்பில் கிண்டி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளியை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற கனிமொழி கைது செய்யப்பட்டார்.
ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை கொலை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிரணி சார்பில் பேரணி நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 62 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சதித்தார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் முதல்வர் பழனிசாமியுடன் சென்று ஆளுநரை சந்தித்தனர்.
2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த மேலுமுறையீட்டு மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மேல் முறையீடு செய்ய சிபிஐ-க்கு மத்திய அரசு அளித்த அனுமதி கடிதத்தை அளிக்க வேண்டும் என்று எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் வாதம் செய்தார். மேலும், சி.பி.ஐ கையேட்டை சி.பி.ஐ-யே கடைபிடிப்பதில்லை எனவும் எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் வாதம் செய்தார். இதற்கு, சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்தது நிர்வாக ரீதியானது தரப்பில் பதில் வாதம் செய்யப்பட்டது. மேலும், அது நிர்வாக ரீதியான ஆவணம் என்பதால் எதிர்மனுதாரர்களுக்கு தர வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரனை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தனது காதலி சவுந்தர்யாவை இன்று காலை திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்துக்கு சவுந்தர்யாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் மனைவி சவுந்தர்யாவின் தந்தை சாமிநாதன் மீது தற்கொலை முயற்சி செய்ததாக தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ பிரபு, சவுந்தர்யாவை திருமணம் செய்ததால் சாமிநாதன் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
உலகின் உயரிய விருதான நோபல் பரிசு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 2020-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை மூன்று மருத்துவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன் மற்றும் சார்லஸ் எம் ரைஸ் ஆகிய 3 மருத்துவர்கள் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நாளை மறுதினம் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவுள்ளதால், இன்று தேனியில் ஆதரவு நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஓபிஎஸ் சென்னை புறப்பட்டார்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இந்த வழக்கைப் பற்றிய விரிவான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மல்லையாவை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக பிரிட்டன் அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்ற கேள்விக்கு தங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியவில்லை என்றும் இதுதொடர்பாக அந்நாட்டு அரசு ரகசியமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இதன் வழக்கு விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு, அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல் துறை தொடரப்பட்ட வழக்கு விசாரணை, நவம்பர் 12-ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டி.டி.வி தினகரன், மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் இந்த வழக்கில் இல்லை என்று கோரி இதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு இன்று நடைபெற்ற விசாரணையில் கேட்டுக்கொண்டனர். ஆனால், டெல்லி காவல் துறையினர் தரப்பில் தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியதால், இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
வரும் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்
கொரோனா காலத்தில் வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம். விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று மாலை சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ். கடந்த 2-ம் தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓ.பி.எஸ், இன்று சென்னை திரும்புகிறார். நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று சென்னை திரும்புவதாக பேட்டி
முதல்வர் பழனிசாமி அழைப்பை ஏற்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை வர மறுப்பு... ஓபிஎஸ்-ன் பிடிவாதத்தால் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊழல் புகார் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
வரும் 7ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், "தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுவரை முடிவுகளை எடுத்துள்ளேன், இனியும் அவ்வாறே இருக்கும்" என ட்வீட் செய்துள்ளார்.
42 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது. காணொலியில் நடைபெறும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர்.