Advertisment

Tamil News today updates : கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு ஜன.21க்குள் தொடக்கம் - அமைச்சர் பாண்டியராஜன்

Petrol diesel price today : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.78.77. டீசல் விலை ரூ.72.85.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News today updates

Tamil News today updates

Tamil News today live updates Pongal 2020 special bus :  பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று துவங்கியது. அதனை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முன்பதிவு மையங்களிலும் ஆன்லைனிலும் சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல்கள் பெறவும் புகார்களை அனுப்பவும் 94450-14450, 94450-14436 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

தொழிற்சங்கத்தினர் போராட்டம்

நேற்று நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர் தொழிற்சங்கத்தினர்.  13 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்குபெற்றவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

தர்பார் கொண்டாட்டம்

இன்று காலை ரஜினி நடிப்பில் உருவான தர்பார் வெளியானது. இந்த படத்தின் முதல்நாள் முதல் ஷோவை பார்க்கச் சென்ற ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரையரங்குகளை மூழ்கடித்துள்ளனர். படம் எப்படி உள்ளது? முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பது குறித்து முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

 

Live Blog

Tamil News today updates Pongal 2020 special buses, tn politics, tn weather : இன்று தமிழகம் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!



























Highlights

    21:49 (IST)09 Jan 2020

    தகவல் தருபவர்களுக்கு பரிசு

    கன்னியாகுமரி : களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்படும் இளைஞர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் - கேரள டிஜிபி அறிவிப்பு.

    21:38 (IST)09 Jan 2020

    பாஜகவின் பழிதீர்க்கும் நடவடிக்கை

    திமுக தலைவர் ஸ்டாலினுக்கான சிஆர்பிஎப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது, பாஜகவின் பழிதீர்க்கும் நடவடிக்கை

    - துரைமுருகன்

    21:37 (IST)09 Jan 2020

    6ஆம் கட்ட அகழாய்வு

    கீழடி 6ஆம் கட்ட அகழாய்வை ஜன.19 முதல்  21ஆம் தேதிக்குள் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார்

    - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

    20:54 (IST)09 Jan 2020

    14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாணவர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் நீட் விலக்கு, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு, ஜேஎன்யூ தாக்குதலுக்கு கண்டனம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

    19:46 (IST)09 Jan 2020

    'Y' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 'Y' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது

    'Y' பிரிவில் பாதுகாப்பு வழங்கி வந்த 8 சிஆர்பிஎப் வீரர்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், வழக்கமான தமிழக காவல்துறை பாதுகாப்பு தொடரும் என அறிவிப்பு

    19:45 (IST)09 Jan 2020

    மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

    ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். பொது விநியோகத்துறை ஆணையருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

    17:37 (IST)09 Jan 2020

    திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது ? ஸ்மிர்தி ராணி கேள்வி

    குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, இன்று (09-01-2020) மதுரையில் பாஜக சார்பில்  பேரணி நடைபெற்றது.   இந்த பேரணியில் கலந்து கொண்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரான  ஸ்ம்ரிதி ராணி கலந்து கொண்டார்.  பேரணியில் பேசிய ஸ்ம்ரிதி ராணி,"வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் வகையில் தான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றார். திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது?  என்ற கேள்வியையும் எழுப்பினார். 

    16:23 (IST)09 Jan 2020

    நாடு கடினமான காலங்களில் சென்று கொண்டிருக்கிறது - உச்சநீதிமன்ற தலைமை தளபதி

    தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு  எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டமாக அறிவிக்கக் கோரும் மனு மீதான விசாரணையின் போது, உச்சநீதிமன்றம்  தலைமை நீதிபதி, “பலவிதங்களில் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாடு கடினமான காலங்களில் சென்று கொண்டிருக்கிறது, நமது முயற்சி அமைதிக்காக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.  

    மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் மறுத்துவிட்டார்.   

    15:21 (IST)09 Jan 2020

    பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு தொடங்கியது:

    பொங்கல் சிறப்புபேருந்துகள் முன்பதிவுமையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் MR.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார் கோயம்பேடு தாம்பரம் பூந்தமல்லி முன்பதிவு மையங்களிலும் ஆன்லைனிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.  

    9445014450, 9445014436  என்ற எண்களில்  சிறப்பு பேருந்துகள் குறித்த தகவல்களையும் , புகார்களைகளையும் தெரிவிக்கலாம்

    15:19 (IST)09 Jan 2020

    தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை - தமிழக முதல்வர்

    பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.  

    15:13 (IST)09 Jan 2020

    யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    திருவள்ளூரில் ஷேர் ஆட்டோவில் கடத்தப்பட்ட  பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர் இழந்த  யாகேஷ் என்ற இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் இன்று அறிவித்தார்.   

    14:12 (IST)09 Jan 2020

    மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும்

    மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த தகவல் இன்றே அனுப்பப்படும் என்றும் உறுதி.

    14:07 (IST)09 Jan 2020

    தாலிக்குத் தங்கம்

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகத்தில் 838 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    14:05 (IST)09 Jan 2020

    சி.ஏ.ஏவுக்கு எதிராக பேரணி

    மும்பையில் அமைந்திருக்கும் இந்தியா கேட் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் துவங்கி வைத்துள்ளார். இந்த பிரச்சார பேரணி மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்கள் வழியாக செல்கிறது.

    14:02 (IST)09 Jan 2020

    சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு அரணாக விளங்குகிறது - முதலமைச்சர் பழனிசாமி

    தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக அரசு அரணாக விளங்குகிறது என்று சட்டமன்றத்தில் பழனிசாமி பேச்சு.

    14:01 (IST)09 Jan 2020

    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை

    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்றும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் 2% கூடுதலாக தமிழகத்தில் மழை பெய்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    12:44 (IST)09 Jan 2020

    ரூ. 2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன - முதலவர்

    ரூ. 407 கோடி செலவில் 11 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கழிவு நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் முதல் நகரமாக சென்னை விளங்குகிறது என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ரூ. 2582 கோடியில் 34,871 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    12:29 (IST)09 Jan 2020

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

    சம்பா அறுவடை பணிகளில் தீவிரமாக இருக்கும் விவசாயிகள், நெற்பயிர்களை நேரடியாக கொள்முதல் செய்துகொள்ள நிலையங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    11:53 (IST)09 Jan 2020

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மனுக்கள்

    நாடு முழுவதும் சி.ஏ.ஏவுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் கைவிடப்பட்டால்மட்டுமே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    11:46 (IST)09 Jan 2020

    நிர்பயா வழக்கு :உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள்

    நிர்பயா வழக்கு - 22ம் தேதி குற்றாவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் குற்றவாளிகள். வினய் சர்மா சார்பில் இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    11:38 (IST)09 Jan 2020

    மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் கொல்லப்பட்ட விவகாரம்

    கேரளாவை சேர்ட்ந்ஹ முகமது சமி, ஹௌசிக் ஆகிய பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    11:36 (IST)09 Jan 2020

    முழுமையான புதைவட மின்கம்பிகள்

    மாநகராட்சி பகுதிகளில் முழுமையான புதைவர மின் கேபிள்கள் புதைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி இன்று சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

    11:14 (IST)09 Jan 2020

    மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய திமுக கோரிக்கை

    உள்ளாட்சி தேர்தலின் மறைமுக தேர்தல்களை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளது. 11ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக இந்த கோரிக்கையை வைத்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் பதில்

    11:12 (IST)09 Jan 2020

    தங்கத்தின் விலை குறைவு

    தங்கத்தில் விலை நேற்றைப் போன்றே இன்றும் குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 536 குறைந்து ரூ. 30,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    10:48 (IST)09 Jan 2020

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை

    சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் அதன் தாக்கம் இந்தியாவிலும் தெரிய துவங்கியுள்ளது. சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் 8 காசுகள் அதிகரித்து ரூ. 78.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 16 காசுகள் அதிகரித்து ரூ. 72.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    10:45 (IST)09 Jan 2020

    சட்டப்பேரவை நிகழ்வுகள்

    கடந்த 3 ஆண்டுகளில் 295 நடுநிலைப்பள்ளிகள் மட்டும் உயர்நிலைப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளாது என்று அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

    10:39 (IST)09 Jan 2020

    அந்தமானில் கருணாநிதிக்கு சிலை திறப்பு

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு அந்தமானில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை திறப்பதற்காக இன்று அதிகாலை அந்தமான் புறப்பட்டுச் சென்றார் முக ஸ்டாலின். அவருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் பயணித்தார்.

    10:34 (IST)09 Jan 2020

    கொடைக்கானலில் துவங்கியது உறைபனிக்காலம்

    கொடைக்கானலில் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் வெப்பநிலை கிட்டத்தட்ட 10 டிகிரிக்கும் குறைவாக செல்வது வழக்கமான ஒன்றாகும். தற்போது 7 டிகிரி செல்சியாக அங்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

    10:34 (IST)09 Jan 2020

    டெல்லியில் தீ விபத்து - ஒருவர் பலி

    டெல்லியில் உள்ள பட்பார்கஞ்ச் என்ற தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீயணைக்கும் பணியில் 35 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    அணைகளின் நீர்மட்டம்

    Tamil News today updates :  மேட்டூர் அணையினர் நீர்மட்டம் 114.3 அடியாக உள்ளது. நீர் இருப்பு 84.7 டி.எம்.சியாகும். நீர் வரத்து 1168 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 10,600 கன அடியாக உள்ளது.

    பவானிசாகர் அணையின் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. 30ம் தேதி வரை திறக்கப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உள்ளது, நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும், நீர்வரத்து 341 கனஅடியாகவும் உள்ளது, நீர் வெளியேற்றம் 300 கனஅடி ஆகும்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment