Advertisment

Tamil News Updates: 'தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, பாடலை இன்று அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saesa

Tamil News Updates: பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது

Advertisment

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2477 மில்லியன் கன அடியாக உள்ளது.  1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 82 மில்லியன் கன அடியாக உள்ளது/  500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 305 மில்லியன் கன அடியாக உள்ளது!

  • Aug 21, 2024 22:31 IST
    ஆந்திராவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    ஆந்திரப் பிரதேசத்தில் அனகாபள்ளியில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில், பாய்லர் வெடித்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். தீ விபத்திற்கு பிறகு, ஆலையின் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப்பணி தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் உள்ளது.



  • Aug 21, 2024 21:26 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பணப்பரிவர்த்தனையா? - இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா திட்டவட்ட மறுப்பு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் பணப்பரிவர்த்தனை செய்ததாக வெளியான தகவலுக்கு இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணன் உடன் பணப்பரிவர்த்தனை என்பது முற்றிலும் தவறான தகவல் என இயக்குனர் நெல்சன் மனைவி வழக்கறிஞர் மோனிஷா விளக்கம் அளித்துள்ளார். அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை சிலர் பரப்புவதாக இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா குற்றம் சாட்டியுள்ளார். வழக்கறிஞர் கிருஷ்ணன் உடன் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு மோனிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவது தனக்கும் தனது கணவரான நெல்சனின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் என்று மோனிஷா தெரிவித்துள்ளார். மேலும், தவறான செய்திகளை வெளியிட்டவர்கள் அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மோனிஷா, தொடர்ந்து தகவல்களைப் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Aug 21, 2024 21:15 IST
    சென்னையில் அனுமதி இல்லாத விளம்பரப் பலகைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனுமதி இல்லாத விளம்பரப் பலகைகளை 3 நாட்களுக்குள் அகற்ற உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு, உரிமம் பெற்ற விளம்பரப் பலகைகள் தவிர மற்றவற்றை அகற்ற வேண்டும்; அகற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். காவல் நிலையத்தில் புகார் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.



  • Aug 21, 2024 20:46 IST
    குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தவர்கள் தலையில் விழுந்த பாறைகள் - அலறி ஓடிய மக்கள்  

    குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது, அவர்கள் தலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் குலைநடுக்கத்தில் அலறி ஓடினர். 



  • Aug 21, 2024 20:43 IST
    தமிழக - கேரள எல்லை சாலையில் இரு மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்

    தமிழக - கேரள எல்லை சாலையில் இரு மாநில கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். ஆத்திரம் தாங்காமல் கம்புகளால் விரட்டி அடித்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Aug 21, 2024 18:53 IST
    முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது - ஸ்டாலின் பெருமிதம் 

    "முதலீடுகள் மழை பொழியும், நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு சக்தி தரும் நாள்! நமது திராவிட மாடலின் கீழ் உலகளாவிய முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!

    ரூ. 17,616 கோடி முதலீட்டில் 19 திட்டங்களைத் துவக்கிவைத்து, ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன். மொத்தம் 1,06,803 புதிய வேலைகள் உருவாக்கப்படுகின்றன. இது நமது இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது." என்று தமிழக முதலமைச்சர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Aug 21, 2024 18:49 IST
    கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - மகேஸ் பொய்யாமொழி பேட்டி

    “கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு இன்னும் எடுக்கவில்லை” என்று திருச்சி, மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 



  • Aug 21, 2024 18:31 IST
    ஸ்ரீரங்கம் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

    திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவருடைய கணவர் விசாகனுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு திருச்சி ரஜினி ரசிகர்கள் சார்பில் பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.



  • Aug 21, 2024 18:19 IST
    இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போரட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Aug 21, 2024 16:57 IST
    மெட்ரோ பணிகளுக்கு ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

    பூவிருந்தவல்லி - பரந்தூர் மற்றும் கோயம்பேடு - ஆவடி ஆகிய மெட்ரோ ரயில் வழித்தட நீட்டிப்பு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ4.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது



  • Aug 21, 2024 16:26 IST
    நாளை த.வெ.க கொடி அறிமுகம்; விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

    vijay kodi



  • Aug 21, 2024 16:03 IST
    மாணவி விவகாரம் - கிருஷ்ணகிரி செல்லும் ஆய்வு குழு

    கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழு இன்று இரவு கிருஷ்ணகிரி செல்கிறது. நாளை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறது



  • Aug 21, 2024 15:49 IST
    செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் - ஐகோர்ட் உத்தரவு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமலாக்க துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது 



  • Aug 21, 2024 15:32 IST
    த.வெ.க கொடி அறிமுக விழா - ஏற்பாடுகள் தீவிரம்

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை அறிமுகம் செய்கிறார். இதற்காக பனையூர் கட்சி அலுவலகத்தில் 500 நாற்காலிகள் போடப்பட்டு, பிரம்மாண்ட எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் கொடியேற்றும் பகுதியில் கூட்டமாக யாரும் நிற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது 



  • Aug 21, 2024 15:21 IST
    ஆவின் பண்ணையில் பெண் ஊழியர் மரணம்; அமைச்சர் விளக்கம்

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவின் பண்ணையில் பெண் உயிரிழந்தத விவகாரத்தில், நீளமான துப்பட்டா அணிந்திருந்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம். இனி ஊழியர்கள் கோட் அணிவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். ஆவின் ஊழியரின் கவன குறைவே விபத்திற்கு காரணம். பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க திருவள்ளூர் ஆட்சியரிடம் பேசியுள்ளோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்



  • Aug 21, 2024 15:17 IST
    காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? ஐகோர்ட் கேள்வி

    காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதனையடுத்து போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது



  • Aug 21, 2024 14:44 IST
    சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்

    சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு!

    http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.



  • Aug 21, 2024 13:52 IST
    அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

    மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருக்கிறார், மிகப்பெரிய அளவில் தொழில் முதலீடுகள் வந்து சேரும்; தொழில் தொடங்குவதற்கான நல்ல சூழல் மற்றும் அரசாங்கத்தின் இப்படிப்பட்ட வேகத்தை, இந்தியாவில் வேறெங்கும் நாங்கள் பார்த்தது இல்லை என முதலீட்டாளர்களே சொல்கிறார்கள்;
    முதலீடுகளை ஈர்க்கும் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை இன்று உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா



  • Aug 21, 2024 13:21 IST
    கிருஷ்ணகிரியில் மாணவி வன்கொடுமை: எஸ்.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு

    கிருஷ்ணகிரி, கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும்;

    காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், சமூக நலத்துறை செயலாளர் அவர்களின் தலைமையில் பல்நோக்கு குழு அமைக்க வேண்டும்
    மு.க.ஸ்டாலின் உத்தரவு    



  • Aug 21, 2024 13:20 IST
    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Aug 21, 2024 12:56 IST
    த.வெ.க கொடியில் இடம் பெற போவது என்ன?

    விஜய்யின் தவெக கொடியில் வாகை மலர் இடம்பெற போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது லோகோ ஒன்று இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    தவெக அறிக்கைகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், அதை மையமாக வைத்து லோகோ தயாரித்துள்ளதாக தகவல்

    ஏற்கனவே, வெற்றியை குறிக்கும் வகையில் வாகை மலர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியானது

    தற்போது லோகோ இடம்பெற உள்ளதாக வெளியான தகவலால் தவெக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பு

    தவெக கொடியில் இடம்பெற போவது வெற்றியை குறிக்கும் வாகை மலரா? அல்லது சமத்துவத்தை போற்றும் வகையில் லோகோவா?

    நாளை காலையில், தவெக கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்



  • Aug 21, 2024 12:24 IST
    திமுக, பாஜக ரகசிய உடன்பாடு - ஜெயக்குமார்

    "திமுக, பாஜக இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது" "விக்ரமன் படம் போல திமுக, பாஜகவினர் ஒட்டி உறவாடுகின்றனர்" "திமுக, பாஜக இடையே ரகசிய உடன்பாடு தொடர்கிறது" "நாணய வெளியீட்டு விழாவில் சந்தன நிற பேண்ட் அணிந்து முதலமைச்சர் பங்கேற்றார்" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்



  • Aug 21, 2024 12:23 IST
    நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு - அரசு நடவடிக்கை என்ன?

    "தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன?"

    தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • Aug 21, 2024 12:02 IST
    மாதத்திற்கு 20 பள்ளிகள் ஆய்வு

    ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

    5 பள்ளிகள், 6 பள்ளிகளை ஆய்வு செய்த 350 வட்டார கல்வி அலுவலர்களுக்கு மெமோ

    தொடக்கக் கல்வி துறையின் புதிய இயக்குனர் நரேஷ் நடவடிக்கை



  • Aug 21, 2024 11:24 IST
    முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்

    தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024 - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் 



  • Aug 21, 2024 11:00 IST
    சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள்

    வானகரம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு



  • Aug 21, 2024 09:48 IST
    கிருஷ்ணகிரி விவகாரம் - தேதிய மகளிர் ஆணையம் விசாரணை

    கிருஷ்ணகிரியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்; இதுகுறித்து 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு



  • Aug 21, 2024 09:46 IST
    நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்

    சீமான் விளக்க கடித விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு, சீமான் தொடர்பாக தன்னிச்சையாக விளக்கக் கடிதம் கொடுத்ததாக நடவடிக்கை வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸை கட்சியில் இருந்து நீக்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவு தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு, திருச்சி எஸ்.பி. வருண்குமார், சீமானுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் உரிய விளக்கம் இல்லாவிட்டால் ரூ.2 கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்வேன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது சாட்டை துரைமுருகனிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதையே உண்மை என நம்பி சீமான் பேசியதாக வழக்கறிஞர் விளக்கம் அளித்திருந்தார்



  • Aug 21, 2024 08:52 IST
    இன்று நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

    சென்னையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை, தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்



  • Aug 21, 2024 08:32 IST
    ட்சி நிர்வாகி சேற்றில் குளித்து நூதன போராட்டம்

    சாலைகளை சீரமைக்காத ஷேவ்கான் நகர நிர்வாகத்தை கண்டித்து இ.கம்யூ. கட்சி நிர்வாகி சேற்றில் குளித்து நூதன போராட்டம்



  • Aug 21, 2024 08:02 IST
    இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை: மத்திய சுகாதாரத் துறை

    இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் இல்லை என, மத்திய சுகாதாரத் துறை தகவல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.



  • Aug 21, 2024 08:00 IST
    ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் : நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

    யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 



  • Aug 21, 2024 07:58 IST
    நாளை உக்ரைன் செல்கிறார் பிரதமர்

    பிரதமர் மோடி இன்று போலந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார் போலந்தில் இருந்து 10 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து, நாளை மறுநாள் உக்ரைனுக்கு செல்கிறார்



  • Aug 21, 2024 07:54 IST
    17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளனர் : பினரயி விஜயன்

    வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளனர் கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் அதிர்ச்சி தகவல்



  • Aug 21, 2024 07:52 IST
    ஆவின் பால் பண்ணையில், இயந்திரத்தில் முடி சிக்கியதால், தலை துண்டாகி இளம் பெண் உயிரிழப்பு

    திருவள்ளூர் ஆவின் பால் பண்ணையில், இயந்திரத்தில் முடி சிக்கியதால், தலை துண்டாகி இளம் பெண் உயிரிழப்பு பால் பாக்கெட்டுகளை டப்பில் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பரிதாபம்



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment