Advertisment

கொரோனா பாதித்தவர்கள் தாமதமாக வருவதால் குணப்படுத்துவது சவாலாக இருக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தாமதமாகவே, சிகிச்சைக்கு வருவதால் அத்தொற்றை கட்டுப்படுத்துவது மிகச்சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கொரோனா பாதித்தவர்கள் தாமதமாக வருவதால் குணப்படுத்துவது சவாலாக இருக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் தாமதமாகவே, சிகிச்சைக்கு வருவதால் அத்தொற்றை கட்டுப்படுத்துவது மிகச்சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

 

 

கொரோனா காலகட்டத்தில் பொதுத்தேர்தல் / இடைத்தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " முதல் முறையாக வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெப்பாசிட் காப்புத்தொகையை ஆன்லைனிலேயே செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளரோடு செல்லக்கூடிய நபர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவின் போது அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது.  வேட்புமனுவையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் ஆன்லைனிலேயே பூர்த்தி செய்த பிறகு பூர்த்தி செய்தவற்றைப் பிரிண்ட் எடுத்து சம்பந்தப்பட்ட ஆர்.ஓ-விடம் சமர்ப்பிக்கும் வாய்ப்பை ஆணையம் உருவாக்கியுள்ளது வேட்பாளருடன் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கு அவருடன் ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் / மாநிலம் ஆகியவை வழங்கியுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த வழிகாட்டுதலின் படி பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். தேர்தலின் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு முகக்கவசம், கிருமிநாசினி, தெர்மல் வெப்பமானி, கையுறைகள், முகக்கவசம், முழு உடல் கவசம் ஆகியன பயன்படுத்தப்பட வேண்டும். வாக்காளர் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்கும் வாக்களிப்பதற்காக மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவதற்கும் வாக்காளர்களுக்குக் கையுறைகள் வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today Updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:54 (IST)22 Aug 2020

    கொரோனா பாதித்தவர்கள் தாமதமாக வருவதால் குணப்படுத்துவது சவலாக உள்ளது - விஜயபாஸ்கர்

    சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா பாதித்தவர்கள் தாமதமாக வருவதால் குணப்படுத்துவது சவலாக உள்ளது; கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறைகளை கேட்டறிந்துள்ளோம் என்று கூறினார்.

    20:37 (IST)22 Aug 2020

    மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் எம்.பி நேரில் ஆறுதல்

    மூணாறு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி நேரில் சென்று ஆறுதல் கூறினார். மூணாறு பொட்டிமுடியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய திருமாவளவன், நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு ஆறுதல் கூறினார்.

    19:51 (IST)22 Aug 2020

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த 5,603 டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் கொரோனாவில் பாதிப்பில் இருந்து இன்று 5,603 குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,13,280 ஆக உயர்ந்துள்ளது.

    19:12 (IST)22 Aug 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா; 80 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,980 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 80 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    18:37 (IST)22 Aug 2020

    எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவானை அறிக்கை

    கொரோனா பாதித்த பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது என்று எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க, பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எக்மோ கருவி உதவுயுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    17:44 (IST)22 Aug 2020

    சென்னையில் நாளை முழு பொதுமுடக்கம்; 193 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

    சென்னையில் நாளை முழு முடக்கம் என்பதால் 193 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று காவலதுறை அறிவித்துள்ளது. நாளை பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வேறு வாகனங்கள் வந்தால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தேவையின்றி வெளியே வருவது, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சந்தேகங்களுக்கு 044-23452330, 23452362, 90031 30103-ல் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

    17:02 (IST)22 Aug 2020

    ஆயுஷ் செயலாளர் இந்தி மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்திருப்பது அட்டூழியம் - மு.க.ஸ்டாலின்

    ஆயுஷ் மருத்துவர்கள் ஆன்லைன் பயிற்சியில், இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று ஆயுஷ் செயலாளர் ராஜேஷ் கோடேட்சா கூறியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்லார். இது குறித்து மு.க.ஸ்டாலின்வ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் வகுப்பிலிருந்து வெளியேறுங்கள் என்று மத்திய பா.ஜ.க. அரசின் 'ஆயுஷ்' செயலாளர் ராஜேஷ் கொட்டேச்சா என்பவர் ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும், மிரட்டல் விடுத்திருப்பது அட்டூழியம்” என்று தெரிவித்துள்ளார்.

    15:51 (IST)22 Aug 2020

    மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

    மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவையில்லை. மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்குள்ளும் போக்குவரத்தை தடை செய்யக் கூடாது. மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுகிறது. வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது” என்று அறிவுறுத்தியுள்ளது.

    15:50 (IST)22 Aug 2020

    மத்திய அரசின் வழிமுறைகளின் அடிப்படையில் திரையரங்குகள் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

    திரையரங்கு திறப்பு குறித்து வரும் 1 ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது.  மத்திய அரசின் வழிமுறைகளின் அடிப்படையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.  

    14:33 (IST)22 Aug 2020

    ராஷ்டிரபதி பவனில் உள்ள மொகல் தோட்டத்தின் பெயர் மாற்றப்படவில்லை

    ராஷ்டிரபதி பவனில் உள்ள மொகல் தோட்டத்தின் பெயர் மாற்றப்படவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது. 

     

    14:31 (IST)22 Aug 2020

    தமிழக முதல்வர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்தார்

    விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்திலுள்ள இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்தார்    

    14:04 (IST)22 Aug 2020

    எஸ்.பி.பி.யின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவு - மருத்துவ அறிக்கை

    பாடகர் எஸ்.பி.பி. யின் உடல் நலம் குறித்த புதிய மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எஸ்.பி.பி.யின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதாகும், எக்மோ சிகிச்சையால் உடல்நிலை சீராக

    இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.     

    13:13 (IST)22 Aug 2020

    விநாயகர் சதுர்த்தி முன்னிட்டி நடிகர் சூர்யா வாழ்த்து

    விநாயகர் சதுர்த்தி முன்னிட்டி நடிகர் சூர்யா தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

     

    13:10 (IST)22 Aug 2020

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி ஆகியோர் வழங்கினர்.

    13:07 (IST)22 Aug 2020

    நீட் தேர்வை மேலும் ஒத்திவைக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மருத்துவக் கவுன்சில் பதில் மனு

    நீட் தேர்வை மேலும் ஒத்திவைக்கும் முடிவு சரியானதாக இருக்காது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்தது. 

      

    12:33 (IST)22 Aug 2020

    வள்ளுவம் அறிவோம் : எச். ராஜா ட்வீட்

    கடிந்து அறிவுரைக் கூறும் பெரியோரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான் என்று எச். ராஜா தனது ட்விட்டரில்  பதிவுசெய்தார்.    

    12:30 (IST)22 Aug 2020

    திருநாவுக்கரசு இரங்கல் தெரிவித்தார்

    12:26 (IST)22 Aug 2020

    ஆன்மீக வழியில்தான் முதல்வர் பயணிக்கிறார்: பிஜேபி மாநில தலைவர் எல் முருகன்

    ஆன்மீக வழியில்தான் முதலமைச்சர் பயணிப்பதாக பிஜேபி மாநில தலைவர் திரு எல் முருகன் கூறியுள்ளார்.

    12:23 (IST)22 Aug 2020

    தேசிய நல்லாசிரியர் விருது : தமிழகத்திலிருந்து இரண்டு ஆசரியர்கள் தேர்வு

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து சத்யமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சரஸ்வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

    12:11 (IST)22 Aug 2020

    தமிழகத்தின் தலைவாசலான நம்ம சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - எஸ். பி வேலுமணி ட்வீட்

    பேரழிவு பேரிடர் பல எதிர்கொண்டாலும் வீழ்வேனென்றுநினைத்தாயோ என்று தன் மக்களின் தன்னம்பிக்கையால் காலமெல்லாம் சரித்திரத்தில் சாகச கலங்கரை விளக்கமாக திகழும் சென்னை வெறும் வார்த்தையல்ல, பல கனவுகளுடன் சிறகடித்து பறந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வை வர்ணஜாலமாக உருமாற்றி,

    வந்தாரை வாழ வைக்கும் என்றைக்கும் வளர்ச்சிப் புகழ் வற்றாத ஜீவநதி! தமிழகத்தின் தலைவாசலான நம்ம சென்னைக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

    என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி  வேலுமணி தெரிவித்தார் 

    12:04 (IST)22 Aug 2020

    பேரவை நடத்த இடம் தேடுகிறார்கள் - டி. ஆர் .பி ராஜா கருத்து

    12:00 (IST)22 Aug 2020

    சட்டப்பேரவைத் தலைவர்  தனபால் கலைவாணர் அரங்கத்தை ஆய்வு செய்து வருகிறார்.

    தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில்  நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயின்ட்  கொரோனா பெருந்தொற்று காலத்தில் சமூக விலகல் வழிமுறைகளை பின்பற்றும் விதமாக இந்த முடிவு எடுக்கப்படலாம்.

    இந்நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் முதற்கட்ட பணிகளை சட்டப்பேரவைத் தலைவர்  தனபால் தற்போது நேரில் ஆய்வு செய்து செய்கிறார்.

    11:51 (IST)22 Aug 2020

    இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் - கமல்ஹாசன் ட்வீட்

    தமிழக அரசில் பணிபுரிந்து வரும் யோகா மற்றும் இயற்கை நல மருத்துவர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள், கேள்வி கேட்டால் தலைமை செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சக்கத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து கருத்து தெரவித்த மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் ," ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு " என்று தெரிவித்தார்.  

    11:40 (IST)22 Aug 2020

    சென்னையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை- 12,708

    இறப்பு எண்ணிக்கை- 2,557 

    60 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாதிப்பு  விகிதம் -  18.01   

    தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை-  12,708  

    11:35 (IST)22 Aug 2020

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

    அம்பத்தூர், வளசரவாக்கம், மாதவரம் போன்ற மண்டலங்களில்  பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. சென்னையில் அனைத்து மண்டலங்களிலும், கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர்  குணமடைந்துள்ளனர் .             

    11:30 (IST)22 Aug 2020

    நவீன தீண்டாமையை ஸ்டாலின் கடைபிடிக்கிறார் - எல்.முருகன் குற்றச்சாட்டு

    அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை மறுக்கப்படுவது நவீன தீண்டாமை. நவீன தீண்டாமையை திமுக தலைவர் ஸ்டாலின் கடைபிடிக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டினார்.  

    10:31 (IST)22 Aug 2020

    மத்திய ஆயுஷ் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி

    மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.இது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.  

    மேலும், இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ? என கேள்வி எழுப்பினார்.  

    10:26 (IST)22 Aug 2020

    சென்னையின் 381வது பிறந்த தினம் - ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து

    சென்னையின் 381வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்வீட் செய்தியில், " ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று!#Chennaiday வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும்" என்று தெரிவித்தார்.  

    10:23 (IST)22 Aug 2020

    சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை! " என்று தெரிவித்தார்.  

    10:19 (IST)22 Aug 2020

    குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு வாழ்த்து

    விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார். மேலும், பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் விநாயகர் சதுர்த்தி விழாவின் அடையாளமாக இருந்த போதிலும், இந்த ஆண்டு, கொரோனா பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, கொண்டாட்டங்களை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். கோவிட்-19 சமூக இடைவெளியையும், விதிமுறைகளையும் பின்பற்றி, விழாவைக் கொண்டாடும் வேளையில், சுகாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்போம் என எனது சக குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.  

    10:16 (IST)22 Aug 2020

    நாட்டு மக்களுக்கு பிரதமர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

    விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்," கணேஷ் சதுர்த்தி வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும்" என்று தெரிவித்தார்.  

    Tamil News Today Updates : ரோஹித் சர்மா, மாரியப்பன் டி (பாரா அத்லெட்டிக்), மாணிக்காபாத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ்(மல்யுத்தம்), ராணி (ஹாக்கி) ஆகிய விளையாட்டு வீரர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

     

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment