Advertisment

Tamil News Highlights: கள்ளக்குறிச்சி சம்பவம்.. 69 பேருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil News , Petrol price today, UU Lalit, Jagdeep Dhankhar, Covid 19 india cases, AIADMK case – 11 August 2022 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Kallakurichi

Tamil news Updates

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரத்தில் கைதாகி சிறையில் உள்ள 174 பேரில் 69 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

publive-image

&t=66s

தலைமை நீதிபதி நியமனம்

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டார். அந்த நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கையொப்பமிட்டார். தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் 26-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்பார்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு

சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணையின் போது, காவல் துறையினருக்கு மனரீதியான ஆலோசனைகளை வழங்கும் பயிற்சி அளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மன அழுத்தத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 4,484 போலீலாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:53 (IST) 11 Aug 2022
    பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடரும் - அமைச்சர் காந்தி

    பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கைத்தறி துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்



  • 21:04 (IST) 11 Aug 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்; 69 பேருக்கு நிபந்தனை ஜாமின்

    கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரத்தில் கைதாகி சிறையில் உள்ள 69 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 174 பேரில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 20:28 (IST) 11 Aug 2022
    சுதந்திர தின விழா போட்டி; வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுகள் அறிவிப்பு

    சுதந்திர தின விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவர்களில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு 1 லட்சம், 2-வது பரிசு- 75 ஆயிரம், 3-வது பரிசு 50 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:19 (IST) 11 Aug 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்; மாணவர்களின் சான்றுகளை எரித்ததாக ஒருவர் கைது

    கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரத்தில் மாணவர்களின் சான்றுகளை எரித்ததாக லட்சாதிபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்



  • 19:43 (IST) 11 Aug 2022
    மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை

    போதையின் பாதையில் இருந்து தமிழகத்தை முற்றிலுமாக மீட்க வேண்டும். தமிழக அரசின் மதுபானக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்



  • 19:29 (IST) 11 Aug 2022
    தமிழக ராணுவ வீரர் வீரமரணம்; முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

    ஜம்மு - காஷ்மீர், ரஜோரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மேலும், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • 18:49 (IST) 11 Aug 2022
    தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

    போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வார்த்தைகள் செயல்வடிவம் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.



  • 18:21 (IST) 11 Aug 2022
    வருமான வரியை செலுத்தும்படி சேகர்ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து

    ₨2,682 கோடி வருமான வரியை செலுத்தும்படி சேகர்ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.



  • 18:19 (IST) 11 Aug 2022
    கட்டாயம் முகக்கவசம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

    தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ₨10,000 அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதிய ஆய்வுகள் எதுவும் இன்றி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



  • 16:53 (IST) 11 Aug 2022
    ரஜினிக்கு ஆதரவாக சீமான் குரல்!

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை; கட்சி தொடங்கினால்தான் அரசியல்வாதி என்றில்லை; தன் உரிமைககக அரசியல் பேசும் அனைவரும் அரசியல்வாதிதான். அந்த உரிமை ரஜினிகாந்த்துக்கும் இருக்கிறது” என்று கூறினார்.



  • 16:50 (IST) 11 Aug 2022
    விசா காலாவதி; சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே

    விசா காலாவதி ஆனதால் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். தற்போது தாய்லாந்து செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தாய்லாந்தில் அவர் அரசியல் அடைக்கலம் கோரவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 90 நாட்கள் வரை கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடுத்து மாலத்தீவுகளுக்கு தப்பிய கோத்தபய, பின்னர் சிங்கப்பூருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 16:49 (IST) 11 Aug 2022
    விசா காலாவதி; சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே

    விசா காலாவதி ஆனதால் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார். தற்போது தாய்லாந்து செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடுத்து மாலத்தீவுகளுக்கு தப்பிய கோத்தபய, பின்னர் சிங்கப்பூருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 15:51 (IST) 11 Aug 2022
    729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை உத்தரவு

    பல அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி என பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு ஓராண்டு அங்கீகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே இறுதிவரை அங்கீகாரம் வழங்கி, மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் ஓராண்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:34 (IST) 11 Aug 2022
    முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு; நீதிமன்றம் உத்தரவு

    முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை கூடாது என உத்தரவிட முடியாது விசாரணைக்கு தடை விதிக்கவும் முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • 15:33 (IST) 11 Aug 2022
    பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்புகளை குறைக்க வேண்டாம் ;நீதிமன்றம்

    அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது . நீதிமன்றம் என்பது சட்ட பரிபாலனை நடைபெறக்கூடிய இடம். பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்புகளை குறைக்க வேண்டாம்



  • 15:32 (IST) 11 Aug 2022
    ஜெய்பீம் பட விவகாரம் : சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

    ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீதான வழக்கு



  • 14:50 (IST) 11 Aug 2022
    "ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை" - சீமான்

    ஆளுநரை சந்தித்து ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் - சீமான்



  • 13:50 (IST) 11 Aug 2022
    அதிமுக பொதுக்குழு வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இரு நாட்களாக நடந்து வந்த வாதம் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு தள்ளிவைப்பு.



  • 13:29 (IST) 11 Aug 2022
    ஓபிஎஸ் தரப்பு வாதம் - சென்னை உயர்நீதிமன்றம்

    பொதுக்குழு குறித்து தொலைகாட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்



  • 13:02 (IST) 11 Aug 2022
    "பெரும்பான்மையானவர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவா?" - நீதிபதி கேள்வி

    பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி

    2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது - ஓ.பி.எஸ்



  • 12:59 (IST) 11 Aug 2022
    பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய குழந்தைகள்

    ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி குழந்தைகள் வாழ்த்து



  • 12:44 (IST) 11 Aug 2022
    குடியரசுத் துணைத் தலைவர் பதவியேற்பு.

    இந்தியாவின் 14ஆவது குடியரசுத் துணைத்

    தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்



  • 12:20 (IST) 11 Aug 2022
    இலவச திட்டங்கள் - உச்சநீதிமன்றத்தில் வாதம்

    தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியமில்லையா? தலைமை நீதிபதி

    இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை - தலைமை நீதிபதி

    இலவசத் திட்ட அறிவிப்புகள் ஒரு சிக்கலான விவகாரம் - இதை ஆராய போதுமான தகவல்கள் தேவை - மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

    கட்டணமில்லா பேருந்து திட்டம் இலவசமா? - மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

    இலவசத் திட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன - ஆம் ஆத்மி கட்சி தரப்பு

    "இலவச அறிவிப்புகள் வாயிலாகத்தான் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றால், நாம் பொருளாதார பேரழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம்" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்



  • 11:53 (IST) 11 Aug 2022
    "ஒரு ஆண்டுக்கு முன்பே பதவி காலாவதியானது எப்படி?" - உயர் நீதிமன்றம் கேள்வி

    "ஒரு ஆண்டுக்கு முன்பே பதவி காலாவதியானது எப்படி?" என ஈபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது?



  • 11:52 (IST) 11 Aug 2022
    போதைப்பொருள் ஒழிப்பு - பெற்றோர், ஆசிரியர்கள் பங்கு முக்கியம்

    போதைப்பொருள் தடுப்பு பணிகளில் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கு மிக முக்கியமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கண்டிப்பு அவசியம்தான், அளவில்லாத கண்டிப்பும் ஆபத்தில்தான் முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 11:40 (IST) 11 Aug 2022
    'நன்றி அண்ணா' - ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் நன்றி

    பீகார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் நன்றி.

    "நன்றி அண்ணா, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதேச்சதிகார அரசை வீழ்த்துவோம்" - தேஜஸ்வி யாதவ் ட்வீட்



  • 11:36 (IST) 11 Aug 2022
    சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு

    தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு பெற்றோர், நண்பர்கள் உற்சாக வரவேற்பு .

    காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் சரத் கமல்



  • 11:36 (IST) 11 Aug 2022
    மோடி அழைப்பு: ட்விட்டர் முகப்பு படத்தை மாற்றிய ரஜினி

    தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்.

    பிரதமர் மோடி சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை தங்கள் சமூகவலைதளங்களில் முகப்பு படமாக வையுங்கள் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்தநிலையில், ரஜினியின் ட்விட்டர் பக்க முகப்பில் தேசிய கொடி படம் மாற்றப்பட்டுள்ளது



  • 11:29 (IST) 11 Aug 2022
    பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

    செஸ் ஒலிம்பியாட் - சிறப்பாக நடத்தியதாக தமிழக அரசை பாராட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

    'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என மு.க.ஸ்டாலின் ட்வீட்

    உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் ட்விட்



  • 11:03 (IST) 11 Aug 2022
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 264 குறைந்து, 38,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



  • 11:00 (IST) 11 Aug 2022
    அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு

    ஸ்ரீவைகுண்டம் அருகே, பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வில் 1 செ.மீ அளவிலான தங்கம் கண்டெடுக்கப்பட்டது.



  • 10:57 (IST) 11 Aug 2022
    தமிழகத்திற்கு பிரதமர் பாராட்டு

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்- பிரதமர் பாராட்டு



  • 10:51 (IST) 11 Aug 2022
    மோடிக்கு ஸ்டாலின் நன்றி

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதாக தமிழக அரசை பாராட்டிய பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.



  • 09:47 (IST) 11 Aug 2022
    தேஜஸ்வி யாதவ் ட்வீட்

    பீகார் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்திய மு.க.ஸ்டாலினுக்கு, நன்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதேச்சதிகார அரசை வீழ்த்துவோம் என தேஜஸ்வி யாதவ் ட்வீட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.



  • 09:01 (IST) 11 Aug 2022
    இந்திய வீரர்கள் உயிரிழப்பு

    காஷ்மீர் ரஜோரி பகுதியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில், 3 இந்திய வீரர்கள், 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.



  • 08:13 (IST) 11 Aug 2022
    நுபுர் சர்மாவுக்கு எதிரான வழக்கு

    நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 08:12 (IST) 11 Aug 2022
    அதிமுக பொதுக்குழு வழக்கு

    அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.



  • 08:12 (IST) 11 Aug 2022
    குடியரசு துணைத் தலைவர் இன்று பதவியேற்பு

    குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்



  • 08:12 (IST) 11 Aug 2022
    ஓபிஎஸ் மீதான வழக்கு இன்று விசாரணை

    அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், ஓபிஎஸ் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.



  • 08:11 (IST) 11 Aug 2022
    தமிழக மீனவர்கள் கைது

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேர், புதன்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment