Advertisment

News Highlights: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக.28 முதல் மாணவர் சேர்க்கை

விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Tamil News Today Live Updates: தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப் 4-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூச்சியை இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்க, விருப்பம் என ரஷ்யாவில் தடுப்பூசியை கண்டுப்பிடித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டி திரையுலகினரும், ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.

Advertisment

இந்தியாவில் 12 நாட்களில் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ஆகஸ்ட் மாத தொற்று விகிதத்தில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 2-வது தலைநகர் குறித்த சர்ச்சைக்கு அரசு காரணமில்லை எனவும், அது அமைச்சர்களின் கருத்து எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான அரசின் தடைக்கு, தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today Updates

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:34 (IST)21 Aug 2020

    கொரோனா உறுதி

    மத்திய பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சர் கோபால் பார்கவாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    22:24 (IST)21 Aug 2020

    ஆறு நாட்கள் குவாரண்டைன்

    இன்று துபாயில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    21:40 (IST)21 Aug 2020

    தேர்வு முடிவுகள்

    அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் http://coe.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    21:31 (IST)21 Aug 2020

    தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

    * விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் விருது

    21:12 (IST)21 Aug 2020

    18,673 ஆக உயர்வு

    கேரளாவில் இன்று 1,983 பேருக்கு கொரோனா உறுதி; இன்று மட்டும் 12 பேர் உயிரிழப்பு..

    தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,673 ஆக உயர்வு.

    21:12 (IST)21 Aug 2020

    339 பேர் தொற்றால் உயிரிழப்பு

    மகாராஷ்டிராவில் இன்று 14,161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒரே நாளில் 339 பேர் தொற்றால் உயிரிழப்பு..

    மொத்த பாதிப்பு - 6,57,450

    குணமடைந்தவர்கள் - 4,70,873

    சிகிச்சை பெறுவோர் - 1,64,562

    உயிரிழப்பு - 21,698

    21:11 (IST)21 Aug 2020

    4 ஊழியர்களுக்கு கொரோனா

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது;

    சரத்பவாரின் குடும்பத்தினர் யாருக்கும் இதுவரை கொரோனா உறுதியாகவில்லை.

    20:52 (IST)21 Aug 2020

    திட்டமிட்டபடி நீட் மற்றும் JEE தேர்வுகள்

    2020 ம் ஆண்டுக்கான நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜெ.இ.இ. தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதியும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    20:42 (IST)21 Aug 2020

    ‘பாஜக சார்பில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்’

    தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும்

    அரசின் வழிகாட்டுதலின் படி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்

    - பாஜக தமிழக தலைவர் எல்.முருகன்

    20:24 (IST)21 Aug 2020

    லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

    'விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது'

    பொள்ளாச்சி அருகே ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளர் அகஸ்டின் கிறிஸ்டோபர் கைது

    * விவசாய மின் இணைப்புக்கு பெயர் மாற்ற லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்

    20:17 (IST)21 Aug 2020

    தீர்ப்பு ஒத்திவைப்பு

    'சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு'

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையிலுள்ள சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    *நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை மனுக்களை தள்ளுபடி செய்ததை அடுத்து உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு.

    19:59 (IST)21 Aug 2020

    12 பேர் உயிரிழப்பு

    கேரளாவில் இன்று 1,419 பேருக்கு கொரோனா உறுதி; இன்று மட்டும் 12 பேர் உயிரிழப்பு..

    தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை18,673 ஆக உயர்வு.

    19:59 (IST)21 Aug 2020

    7,571 பேருக்கு கொரோனா

    கர்நாடகாவில் ஒரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா பாதிப்பு; மேலும் 93 பேர் உயிரிழப்பு!

    பெங்களூருவில் மட்டும் இன்று 2,948 பேருக்கு கொரோனா உறுதியானது;

    தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,64,546 ஆகவும், பலி எண்ணிக்கை 4,522 ஆகவும் உயர்வு..

    19:36 (IST)21 Aug 2020

    முதல்வர் பாராட்டு

    கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    - முதல்வர் பழனிசாமி

    19:31 (IST)21 Aug 2020

    'டிக்கிலோனா' டிரைலர்

    டைம் டிராவலிங் மையப்படுத்தி சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 'டிக்கிலோனா' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    19:27 (IST)21 Aug 2020

    குடும்பத்துடன் தற்கொலை

    திருச்செங்கோடு அருகே கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    19:02 (IST)21 Aug 2020

    இணையத்தில் பார்க்கலாம்

    மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை கோயிலின் இணையத்தில் பார்க்கலாம்

    கோயிலின் முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு பூஜை, பெரிய கொழுக்கட்டை படைப்பதை இணையத்தில் பார்க்கலாம்

    18:41 (IST)21 Aug 2020

    101 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 101 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,340 ஆக உயர்ந்துள்ளது.

    18:15 (IST)21 Aug 2020

    பிற மாவட்டங்களில் 4,713

    சென்னையில் மேலும் 1,282 பேருக்கு கொரோனா பாதிப்பு

    * சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,713 பேருக்கு கொரோனா

    18:13 (IST)21 Aug 2020

    5,995 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆக 3,67,430 உயர்ந்துள்ளது.

    17:59 (IST)21 Aug 2020

    உடல் நிலை சீராக உள்ளது

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது

    மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

    மருத்துவ நிபுணர் குழுவினர் எஸ்.பி.பி. உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    publive-image

    17:38 (IST)21 Aug 2020

    9,544 பேருக்கு கொரோனா

    ஆந்திராவில் ஒரே நாளில் 9,544 பேருக்கு கொரோனா உறுதி; மேலும் 91 பேர் உயிரிழப்பு!

    தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,34,940 ஆகவும், பலி எண்ணிக்கை 3,092 ஆகவும் உயர்வு

    17:37 (IST)21 Aug 2020

    மணிகா பத்ராவுக்கு கேல் ரத்னா

    ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு

    டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

    17:21 (IST)21 Aug 2020

    ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருது

    தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் ரஞ்சித் குமாருக்கு தயான்சந்த் விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.

    17:17 (IST)21 Aug 2020

    கேல் ரத்னா விருது

    தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

    2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

    அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது

    17:05 (IST)21 Aug 2020

    விநாயகர் சிலை ஊர்வலம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

    பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    16:58 (IST)21 Aug 2020

    தபால் மூலம் வாக்குகள்

    கொரோனா காலத்தில் நடைபெற உள்ள பாெதுத்தேர்தல் உள்ளிட்டவைகளுக்காக தேர்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு முகாம்கள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பணிகளில் உள்ள பணியாளர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம் * 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள்தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி * வாக்கு சேகரிப்பு, பிரசாரத்தின்போது சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    16:32 (IST)21 Aug 2020

    மாணவர் சேர்க்கை

    தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப் 4 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    16:03 (IST)21 Aug 2020

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனோ

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    15:58 (IST)21 Aug 2020

    முதல்வர் ஆய்வு

    நாமக்கல் எர்ணாபுரம் பகுதியில், 200 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். முதல்வர் உடன் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்தனர்.

    15:18 (IST)21 Aug 2020

    சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    தேர்வு கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    15:15 (IST)21 Aug 2020

    இ-பாஸ் முறை ஏன்?

    ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களை இ-பாஸ் இருந்தால்தானே கண்டறிய முடியும். இ-பாஸ் முறையால் தான் கொரோனா யாருக்கெல்லாம் உள்ளது என்பதை கண்டறிய முடிகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பற்கு இ-பாஸ் முறை தான் உதவி புரிந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    14:36 (IST)21 Aug 2020

    முதல்வர் பழனிசாமி பதில்

    தமிழகத்தில் 2வது தலைநகர் விவகாரம் முடிந்துபோன பிரச்னை. தமிழக அரசு, மத்திய அரசிடம் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    14:20 (IST)21 Aug 2020

    முதன்மை மாநிலமாக தமிழகம்

    சட்ட ஒழுங்கை காப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ரவுடித்தனம் செய்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.நாமக்கல், கரூர் மாவட்டங்கள் இடையே 46 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று நாமக்கல்லில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

    14:04 (IST)21 Aug 2020

    ஸ்டாலின் கேள்வி

    மக்களின் பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதல்வர் பழனிசாமி, யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும். மக்களின் குறைகளை எடுத்துரைத்து தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    13:47 (IST)21 Aug 2020

    நெல்லையில் முன்விரோதம் காரணமாக 3 பேர் கொலை

    நெல்லையில் முன்விரோதம் காரணமாக 2 திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே கிணற்றில் இருந்து 3 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    13:26 (IST)21 Aug 2020

    தடை தொடரும் - உயர்நீதிமன்றம்

    பொது இடங்களில் விநாயகர் வைத்து வழிபடுவதற்கான தடை தொடரும். விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை தடுப்பது அரசின் நோக்கமல்ல; கொரோனா பரவலை தடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

    13:15 (IST)21 Aug 2020

    நல்லக்கண்ணுவுக்கு கொரோனா இல்லை

    இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று இல்லை. அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

    12:58 (IST)21 Aug 2020

    முதல்வரின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தி

    12:43 (IST)21 Aug 2020

    சென்னையில் பிரபல ரவுடி கைது

    சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கரை போலீசார் என்கவுன்ட்டர் செய்த நிலையில், ரவுடி திருவேங்கடம் கைது. திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த திருவேங்கடத்தை போலீசார் கைது செய்தனர்

    12:38 (IST)21 Aug 2020

    காலாண்டுத் தேர்வு எப்போது?

    கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். 11-ம் வகுப்பில் தேர்வு ஆகாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    12:10 (IST)21 Aug 2020

    ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

    தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து, எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தொடர்ந்து தங்கம் கடத்தி மோசடி செய்ததாக ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    11:22 (IST)21 Aug 2020

    எஸ்பிபி நலம் பெற வேண்டி சபரிமலையில் பிரார்த்தனை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணம்பெற வேண்டி சபரிமலை கோயிலில் பிரார்த்தனை செய்யப்பட்டது. 

    10:58 (IST)21 Aug 2020

    தங்கம் விலை மீண்டும் உயர்வு

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.40,672-க்கு விற்பனை செய்யப்பட்டு, ஒரு கிராம் தங்கம் ரூ.5,084-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    10:25 (IST)21 Aug 2020

    தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

    10:20 (IST)21 Aug 2020

    26 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14.44 கோடி மதிப்பிலான 26 திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதோடு ரூ.137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

    10:16 (IST)21 Aug 2020

    டிடிவி தினகரன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

    10:12 (IST)21 Aug 2020

    கவுன்சிலிங் ரேண்டம் எண் வேறொரு தேதியில் வெளியிடப்படும்

    பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படவிருந்த வேறொரு தேதியில் வெளியிடப்படும் என அறிவிப்பு!

    09:38 (IST)21 Aug 2020

    ஆளுநர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறப்பான மற்றும் வளமான எதிர்காலம் அமைந்திட தமிழக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். 

    09:28 (IST)21 Aug 2020

    விநாயகர் சதுர்த்தி- தமிழக மக்களுக்கு முதல்வர் வாழ்த்து

    விநாயகர் சதுர்த்திக்கு களி மண்னாலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து மக்கள் வழிபட்டு மகிழ்வார்கள். விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    09:26 (IST)21 Aug 2020

    ரவுடி சங்கர் என்கவுண்டரில் கொலை

    சென்னை அயனாவரத்தில் போலீசை வெட்டியதாக ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார், கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

    Tamil News today: 22.8.2020 அன்று அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Coronavirus Corona Covid 19 Vinayagar Chathurthi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment