Advertisment

Tamil News: அமெரிக்க பள்ளியில் 18 குழந்தைகள் சுட்டுக்கொலை

Tamil Nadu News, Tamil News Updates, IPL 2022 Latest News May 24 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: அமெரிக்க பள்ளியில் 18 குழந்தைகள் சுட்டுக்கொலை

Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் சுற்றறிக்கை. குரங்கு அம்மை சந்தேகிக்கும் நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களின் தகவல்களை பெறவும். குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ள நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தவும் உத்தரவு

Advertisment

இன்று மேட்டூர் அணை திறப்பு

குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் அணை இம்மாதம் முன் கூட்டியே திறக்கப்படுகிறது

எம்.பி. தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31 வரை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும், டீசல் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.

CUET தேர்வு: 11.51 லட்சம் பேர் விண்ணப்பம்

CUET தேர்வுக்கு 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் CUET தேர்வு நடைபெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:03 (IST) 24 May 2022
    ஐபிஎல் முதல் பிளே ஆப் : குஜராத் அணிக்கு 189 ரன்கள் இலக்கு

    ஐபிஎல் முதல் பிளே ஆப் போட்டியில் குஜராத் அணிக்கு 189 ரன்களை ராஜஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது



  • 21:38 (IST) 24 May 2022
    சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி ரத்து - மத்திய அரசு

    சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் செஸ் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது



  • 20:15 (IST) 24 May 2022
    ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.3.41 கோடி பறிமுதல்

    தமிழகத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட பொருளாதார குற்றப்பிரிவின் சோதனையில் ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



  • 19:43 (IST) 24 May 2022
    ஐபிஎல் முதல் பிளே ஆப்: டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

    ஐபிஎல் போட்டிகளின் முதல் பிளே ஆப் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது



  • 19:31 (IST) 24 May 2022
    கள்ளக்குறிச்சியில் 208 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 208 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது



  • 19:16 (IST) 24 May 2022
    அரசியல் களம் தேட பாஜகவினர் திமுகவை சீண்டுகிறார்கள் - திருமாவளவன்

    தமிழக பாஜகவினர் அரசியல் களம் தேடுகிறார்கள், அதற்காக திமுகவை சீண்டுகிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி சொற்ப அளவில் குறைத்து மக்களை ஏமாற்றுகிறது பாஜக, என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்



  • 18:52 (IST) 24 May 2022
    10ம் வகுப்பு கணிதத் தேர்வில் 45,618 மாணவர்கள் ஆப்சென்ட்

    தமிழகத்தில் இன்று நடந்த 10ம் வகுப்பு கணிதத் தேர்வில் 45,618 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது



  • 18:36 (IST) 24 May 2022
    உதகையில் 124-வது மலர் கண்காட்சி நிறைவு

    உதகையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த 124-வது மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளது. சிறந்த பூங்கா தோட்டத்திற்கான விருதுகளை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி ஆட்சியர் அம்ரித் ஆகியோர் வழங்கினர்



  • 18:09 (IST) 24 May 2022
    பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர்

    உத்தரகாண்ட் மாநிலத்தில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட அஜய் கோதியால் பாஜகவில் இணைந்துள்ளார்



  • 17:45 (IST) 24 May 2022
    ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

    ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும், வீடு தேடி ரேசன் பொருட்கள் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் அரிசி கடத்தலை தவிர்த்திருக்கலாம் எனவும் விஜயகாந்த் கூறியுள்ளார்



  • 17:28 (IST) 24 May 2022
    எனது தந்தை டி.ராஜேந்தர் நலமுடன் உள்ளார் - சிம்பு

    எனது தந்தை டி.ராஜேந்தர் நலமுடன் உள்ளார். வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உயர் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம் என சிம்பு தெரிவித்துள்ளார்



  • 17:05 (IST) 24 May 2022
    தமிழ்நாட்டை திமுக அரசு தலைநிமிர வைத்திருக்கிறது - மு.க.ஸ்டாலின்

    முதல்வர் மு.க. ஸ்டாலின்: வீழ்ச்சியுற்று இருந்த தமிழ்நாடு, இன்று எழுச்சியுற்றுள்ளது. தமிழ்நாட்டை திமுக அரசு தலைநிமிர வைத்திருக்கிறது. ஊர்ந்து கொண்டிந்த தமிழ்நாட்டை, ஓராண்டு திமுக அரசு நெஞ்சை நிமிர வைத்திருக்கிறது” என்று கூறினார்.



  • 17:03 (IST) 24 May 2022
    ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு - மு.க. ஸ்டாலின்

    முதல்வர் மு.க. ஸ்டாலின்: “திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு” என்று கூறினார்



  • 15:18 (IST) 24 May 2022
    கரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

    கரூர் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் நாளை (25.05.2022) உள்ளூர் விடுமுறை என்று கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 15:01 (IST) 24 May 2022
    2 உயர்மட்டக் குழுக்கள் அமைத்தது காங்கிரஸ்: வியூக வகுப்பாளர் சுனில் இடம்பெற்றார்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2024 ஆம் ஆண்டிற்கான 2 உயர் மட்ட குழுக்களை அமைந்துள்ளார்.

    புதிய அரசியல் விவகாரக் குழுவில் ஜி-23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், 2024 மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளார்.



  • 14:25 (IST) 24 May 2022
    பேரறிவாளன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுக- காங். கூட்டணி தொடரும் - திருநாவுக்கரசர்

    காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்: “பேரறிவாளன் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும். திமுக - காங்கிரஸ் கூட்டணியை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது.” என்று கூறினார்.



  • 13:57 (IST) 24 May 2022
    குரங்கம்மை நோய் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

    தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்: காய்ச்சல், உடம்பில் தழும்பு, கொப்புளங்கள் தோன்றுவதால் மட்டுமே அதை குரங்கம்மை என முடிவு செய்துவிட வேண்டாம்; உரிய பரிசோதனை செய்த பிறகே உறுதிப்படுத்த முடியும். பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அறிவுரையே குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற உலக சுகாதார மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.



  • 13:54 (IST) 24 May 2022
    செஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை செஸ் வீரர் பிரக்ஞானந்தா

    செஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்ஸ் பிர்க்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார். 16 வயதான பிரக்ஞானந்தா காலிறுதியில் சீனாவின் வே-யிஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.



  • 13:21 (IST) 24 May 2022
    கரூர் வாக்காளர்களை இழிவாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - ஜோதிமணி

    காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி: கரூர் வாக்காளர்களை இழிவாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஆபாச தாக்குதல் மூலம் அரசியலை விட்டு பெண்களை விரட்டி விடலாம் என சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள்” என்று விமர்சனம் செய்துள்ளார்.



  • 12:58 (IST) 24 May 2022
    தேர்தலை எதிர்கொள்ள சிறப்புக் குழுக்கள்!

    2024 தேர்தலை எதிர்கொள்ள அரசியல் விவகார குழு, 2024 தேர்தல் பணி குழு என சிறப்பு குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தேர்தல் பணிக் குழுவில் பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.



  • 12:58 (IST) 24 May 2022
    ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு!

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.



  • 12:58 (IST) 24 May 2022
    பைடன் - மோடி ஆலோசனை!

    டோக்கியோவில், இருநாட்டு உறவு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.



  • 12:57 (IST) 24 May 2022
    தேர்தலை எதிர்கொள்ள சிறப்புக் குழுக்கள்!

    2024 தேர்தலை எதிர்கொள்ள அரசியல் விவகார குழு, 2024 தேர்தல் பணி குழு என சிறப்பு குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தேர்தல் பணிக் குழுவில் பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.



  • 12:11 (IST) 24 May 2022
    மு.க ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் கடிதம்!

    தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.



  • 11:46 (IST) 24 May 2022
    இலங்கையில் நெருக்கடி.. 67 பேர் கைது!

    இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேரை, திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் இலங்கை கடற்படை கைது செய்தது.



  • 11:36 (IST) 24 May 2022
    மேட்டூர் அணை திறப்பு!

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும.



  • 11:36 (IST) 24 May 2022
    மேட்டூர் அணை திறப்பு!

    குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும.



  • 11:22 (IST) 24 May 2022
    நகை திருட்டு.. 2 தனிப்படைகள் அமைப்பு!

    வேலூர், காட்பாடி அருகே, அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு, ரூ. 75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன வழக்கில், 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



  • 10:57 (IST) 24 May 2022
    பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக கேரளாவை வலுப்படுத்தவும், தேசத்தின் ஒற்றுமையில் மாநிலங்களின் வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்



  • 10:24 (IST) 24 May 2022
    கடந்த 24 மணி நேரத்தில் 1,675 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,675 பேருக்கு கொரோனா பாதிப்பு. 1,635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 14 ஆயிரத்து 841 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



  • 10:19 (IST) 24 May 2022
    அரையிறுதியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா

    செஸ்ஸபின் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் தமிழ்நாட்டின் இளம் வீரர் பிரக்ஞானந்தா. காலிறுதி போட்டியில் சீனாவின் வெய் மீயை வீழ்த்திய அவர், அரையிறுதி போட்டியில் நெதர்லாண்ட் வீரர் அனிஷ் கிரியுடன் மோத உள்ளார்.



  • 10:13 (IST) 24 May 2022
    அடகு கடையில் ஓட்டை போட்டு நகை கொள்ளை

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரூ75 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளை. அடகு கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளை. காட்பாடி டிஎஸ்பி சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



  • 09:57 (IST) 24 May 2022
    ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் சோதனை

    திருவண்ணாமலையில் ஆரணி, செய்யாறில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சோதனை. 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக வழங்கப்படும் என அறிவித்த நிலையில், நிறுவனம் திறந்த 1 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் டெப்பாசிட். போலி விளம்பரம் என சமூக வலைதளத்தில் செய்தி பரவியதை அடுத்து, ஆரணி வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர் ஆய்வு



  • 09:47 (IST) 24 May 2022
    ஒரே நாளில் தலைக்கவசம் அணியாத 3,926 பேர் மீது வழக்குப்பதிவு

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 3,926 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1903 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இருந்ததாக 2023 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 



  • 09:46 (IST) 24 May 2022
    ஒரே நாளில் தலைக்கவசம் அணியாத 3,926 பேர் மீது வழக்குப்பதிவு

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 3,926 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெல்மேட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1903 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து இருந்ததாக 2023 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 



  • 09:32 (IST) 24 May 2022
    மு.க.ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

    தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.



  • 09:22 (IST) 24 May 2022
    புதுக்கோட்டை தொழிலதிபர் கொலை வழக்கு- 8 பேர் கைது

    புதுக்கோட்டையில் தொழில் அதிபர் முகமது நிஜாமை கொலை செய்து 175 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் இதுவரை 8 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 120 சவரன் நகை பறிமுதல். தலைமறைவாக உள்ள ஒரு நபரை தேடும் பணியில் தனிப்படை ஈடுபட்டுள்ளதாக தகவல்



  • 09:06 (IST) 24 May 2022
    12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்

    இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் ஜுன் 12-ல் திருக்குறள் வெளியாகிறது என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகர் தகவல்



  • 08:17 (IST) 24 May 2022
    வாழ்வாதாரம் அச்சுறுத்தல் - தீட்சிதர்கள் கடிதம்

    வெறுப்பு குழுக்களின் போராட்டங்களால், எங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.



  • 08:16 (IST) 24 May 2022
    கர்நாடகாவில் பேருந்து - லாரி விபத்து: 9 பேர் பலி

    கர்நாடகா ஹுப்ளி மாவட்டத்தில் தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 08:15 (IST) 24 May 2022
    ஐபிஎல்: இறுதிப்போட்டிக்கு முதலில் நுழைவது யார்?

    ஐபிஎல் பிளே-ஆப் : கொல்கத்தாவில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment