Advertisment

Tamil News Highlights: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி பெற இணையதள முகவரி வெளியீடு

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
CM Stalin costitute a team headed justice AK rajan, நீட் தேர்வு, நீட் தேர்வின் தாக்கம், தமிழ்நாடு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன், நீட் தேர்வு, impact of NEET exam on tamil nadu, tamil nadu, Rtd justice AK rajan, NEET Exam, neet exam

பெட்ரோல், டீசல் நிலவரம்

Advertisment

சென்னையில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒமிக்ரான் அப்டேட்

மகாராஷ்டிராவில் இன்று 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 37 வயது நபர்  மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த அவரது நண்பர் என 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 23 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரஷ்யாவின் கண்டுபிடிப்புகள் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படும் என அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

TNPSC தேர்வு தேதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான TNPSC தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணை டிசம்பர் 7 (செவ்வாய்கிழமை) அன்று வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, TNPSC ஆண்டு திட்டம், குரூப்-1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வு தேதி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) வெளியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:14 (IST) 07 Dec 2021
    மீன் விற்பனை செய்த தாயை நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சி அடைய வைத்தது - முதல்வர் ஸ்டாலின்

    குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 22:12 (IST) 07 Dec 2021
    கன்னியாகுமரி மீன் விற்பனை செய்த மூதாட்டியை இறக்கி விட்ட சம்பவம் - பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் விற்பனை செய்த மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக் காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்



  • 21:56 (IST) 07 Dec 2021
    தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி இணையதள முகவரி வெளியீடு

    தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி எளிமையாக பெற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

    tn.gov.in என்னும் இணையதளத்தில் “வாட்ஸ் நியூ“ பகுதியில் “Ex-Gratia for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து விண்ணப்பிக்கலாம்



  • 21:55 (IST) 07 Dec 2021
    தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி இணையதள முகவரி வெளியீடு

    தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி எளிமையாக பெற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

    tn.gov.in என்னும் இணையதளத்தில் “வாட்ஸ் நியூ“ பகுதியில் “Ex-Gratia for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து விண்ணப்பிக்கலாம்



  • 21:29 (IST) 07 Dec 2021
    மீன் விற்பனை செய்த தாயை நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சி அடைய வைத்தது - முதல்வர் ஸ்டாலின்

    குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 21:29 (IST) 07 Dec 2021
    மீன் விற்பனை செய்த தாயை நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சி அடைய வைத்தது - முதல்வர் ஸ்டாலின்

    குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 21:29 (IST) 07 Dec 2021
    மீன் விற்பனை செய்த தாயை நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சி அடைய வைத்தது - முதல்வர் ஸ்டாலின்

    குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 21:27 (IST) 07 Dec 2021
    மீன் விற்பனை செய்த தாயை நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அதிர்ச்சி அடைய வைத்தது - முதல்வர் ஸ்டாலின்

    குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 20:43 (IST) 07 Dec 2021
    8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோவில் ஒருவர் கைது

    திருப்பூர், பல்லடம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குமார்(65) என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 20:41 (IST) 07 Dec 2021
    தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

    தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்



  • 20:19 (IST) 07 Dec 2021
    6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கு; குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

    நாமக்கல் அருகே 6 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த பழனிசாமி (67) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 20:07 (IST) 07 Dec 2021
    சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

    சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான ரேபிட் பரிசோதனைக் கட்டணம் ரூ. 3400லிருந்து ரூ.2900 ஆகவும், ஆர்டி பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் ரூ.700லிருந்து ரூ.500 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.



  • 19:07 (IST) 07 Dec 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 710 பேருக்கு கொரோனா தொற்று; 10 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,31,945 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்



  • 18:53 (IST) 07 Dec 2021
    பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா, குட்கா வியாபாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை - டிஜிபி உத்தரவு

    பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே நடக்கும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.



  • 18:48 (IST) 07 Dec 2021
    மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

    மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.



  • 18:14 (IST) 07 Dec 2021
    தேவாங்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு ஐகொர்ட் உத்தரவு

    அய்யலூர், கடவூர் வனப்பகுதியை தேவாங்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக 3 மாதத்திற்குள் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு



  • 17:54 (IST) 07 Dec 2021
    நீதித்துறையில் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது - லோக்சபாவில் தயாநிதி மாறன் பேச்சு

    நீதிபதிகள் சம்பள மசோதா குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்.பி தயாநிதி மாறன், “நீதித்துறையில் குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. உச்ச நீதிமன்றத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயதை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டும். அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள் ஆளுநராகவும் எம்.பி ஆகவும் பதவி வகிக்கிறார்கள். அவர்கள் எந்த பதவியின் கீழ் ஓய்வூதியம் பெறுவார்கள்?” என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.



  • 16:51 (IST) 07 Dec 2021
    ஒழுங்கா கூட்டத்தொடருக்கு வாங்க.. பாஜக எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை!

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத மற்றும் அரிதாக கூட்டத்திற்கு வரும் பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்.பி.க்கள் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மாற்றங்கள் நிகழும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



  • 16:28 (IST) 07 Dec 2021
    பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் சன்மானம்!

    ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் சில தொழிற்சாலைகள் தொடர்ந்து இந்த பிளாஸ்டி பொருட்களை தயாரித்து வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சுற்றுச்சூழல்த் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.



  • 16:10 (IST) 07 Dec 2021
    போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன், சசிகலா திடீர் சந்திப்பு!

    அதிமுக முன்னாள் தலைவர் வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு சசிகலா வாழ்த்துக்களை தெரிவித்தார்!



  • 15:54 (IST) 07 Dec 2021
    சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி கோவை குறிச்சியில் ஒரு ஏக்கர் மனை 9 கோடியிலிருந்து 4.8 கோடி குறைத்து, 4.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் எளிதில் தொழில் துவங்க ஏதுவாக விலை குறைக்கப்பட்டதாக ஸ்டாலின் கூறினார்.



  • 15:54 (IST) 07 Dec 2021
    உ.பி-இல் ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட புதிய எய்ம்ஸ் மருத்துவமனை: நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி!

    உத்தரபிரதேசம் கோரக்பூரில் 1000 கோடி நிதியில் கட்டப்பட்ட புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். 750 படுக்கைகளுடன் தொற்று நோய் மற்றும் தொற்றாநோய் குறித்து ஆராய்ச்சிக்கு உதவும் வகையில், இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    watch | PM Narendra Modi greets the crowd at the event in Gorakhpur where he inaugurated several development projects today. CM Yogi Adityanath was also present with him at the occasion. pic.twitter.com/RETQtrbaGl

    — ANI UP (@ANINewsUP) December 7, 2021



  • 15:49 (IST) 07 Dec 2021
    சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி கோவை குறிச்சியில் ஒரு ஏக்கர் மனை 9 கோடியிலிருந்து 4.8 கோடி குறைத்து, 4.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் எளிதில் தொழில் துவங்க ஏதுவாக விலை குறைக்கப்பட்டதாக ஸ்டாலின் கூறினார்.



  • 15:05 (IST) 07 Dec 2021
    பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆய்வு

    பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு செய்தார். வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3-வது முறையாக ஆய்வு செய்கிறார்.



  • 14:24 (IST) 07 Dec 2021
    ஜனநாயக முறையில் போராடி வருகிறோம் - வைகோ

    நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் வேளாண் சட்டத்தை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனநாயக முறையில் போராடி வருகிறோம் என்றும் மதிமுக எம்.பி., வைகோ தெரிவித்துள்ளார்.



  • 14:23 (IST) 07 Dec 2021
    மழை வெள்ள பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

    செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், தாம்பரம் பகுதியில் வெள்ளத் தடுப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.



  • 14:20 (IST) 07 Dec 2021
    மாநிலங்களவை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறு வருகிறது. எதிர்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • 13:32 (IST) 07 Dec 2021
    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் - ராமநாதபுரம் எம்.பி. கோரிக்கை

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கோரிக்கை வைத்துள்ளார்



  • 13:31 (IST) 07 Dec 2021
    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் - ராமநாதபுரம் எம்.பி. கோரிக்கை

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கோரிக்கை வைத்துள்ளார்



  • 13:10 (IST) 07 Dec 2021
    ஒரே ஜூம் காலில் 900 பேரை பணியில் இருந்து நீக்கிய பெட்டர் டாட் காம்

    ஊழியர்களின் செயல்திறன் குறைவு காரணமாக பெட்டர் டாட் காம் நிறுவனத்தின் சி.இ.ஒ. விஷால் கார்க் தன்னுடைய நிறுவன ஊழியர்கள் 900 பேரை ஜூம் மீட்டிங்கில் பணி நீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



  • 13:07 (IST) 07 Dec 2021
    வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் டி.டி.கே. நகரில் வெள்ள தடுப்புப் பணிகள் குறித்து முதல் அமைச்சர் நேரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.



  • 12:54 (IST) 07 Dec 2021
    வெந்து தணிந்தது காடு - படபிடிப்பு துவக்கம்

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிலம்பரசன் அறிவித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்



  • 12:23 (IST) 07 Dec 2021
    டெல்டா மாவட்டங்களில் கனமழை

    வடகிழக்கு பருவக்காற்று காரணாமாக கடலூர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:20 (IST) 07 Dec 2021
    பேரறிவாளன் விடுதலை : ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விஷயம் - உச்சநீதிமன்றம்

    முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம். வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு



  • 12:05 (IST) 07 Dec 2021
    சுதா பரத்வாஜ் ஜாமினுக்கு எதிரான மனு தள்ளுபடி

    பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் சுதா பரத்வாஜுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து தேசிய விசாரணை முகமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது



  • 12:02 (IST) 07 Dec 2021
    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கு

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கை வருகின்ற 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம். முன்னாள் டி.ஜி.பி தாக்கல் செய்த 4 மனுக்களையும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு



  • 11:23 (IST) 07 Dec 2021
    பிப்ரவரியில் குரூப்-2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    2022 பிப்ரவரியில் குரூப்-2 தேர்வும், மார்ச்சில் ருரூப்-4 தேர்வும் நடைபெறவுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.



  • 10:39 (IST) 07 Dec 2021
    ஐஐடி மாணவி தற்கொலை - விசாரணைக்கு தந்தை ஆஜர்

    சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில், அவரது தந்தை அப்துல் லத்தீப் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த 2019ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்



  • 09:48 (IST) 07 Dec 2021
    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ஒரு கிராம் ரூ.4500-க்கும், சவரன் ரூ.36,000க்கும் விற்பனையாகிறது.



  • 09:29 (IST) 07 Dec 2021
    கடந்த 24 மணி நேரத்தில் 6,822 பேருக்கு கொரோனா

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 10,004 பேர் குணமடைந்தனர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 220 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 08:37 (IST) 07 Dec 2021
    குளிர்கால ஒலிம்பிக் தொடர் - அமெரிக்கா புறக்கணிப்பு

    சீனாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment