Advertisment

Tamil News : இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்வு

Excerpt: Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 21st december 2021 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News : இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 220 ஆக உயர்வு

Tamil Nadu News Updates: நேற்று மட்டும் டெல்லியில் 8 பேர்,கர்நாடகாவில் 5 பேர், கேரளாவில் 4 பேர், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174 ஆக உள்ளது.

Advertisment

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்னும் செப்டிக் டேங்க் குள்ள இறங்கிட்டு தான் இருக்கோம் | Manual Scavengers

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2 ஆவது போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேயிலா முன்னிலை வகிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:40 (IST) 21 Dec 2021
    கொரோனா வைரஸின் தடுப்பூசிகள் ஓமிக்ரான் மாறுபாட்டில் வேலை செய்யுமா?

    இந்தியாவில் தற்போதுவர ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 200 ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்போதுள்ள கொரோனா வைரஸின் தடுப்பூசிகள் ஓமிக்ரான் மாறுபாட்டில் வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனாலும் ஸ்பைக் மரபணுவில் சில பிறழ்வுகள் ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்கலாம் கூறப்பட்டுள்ளது.

    மேலும் "ஒமிக்ரானுக்கான தடுப்பூசியின் செயல்திறன் வரையறுக்கப்பட்ட தரவுகள் உள்ளன, ஆனால் மதிப்பாய்வு செய்யப்பட்ட சான்றுகள் எதுவும் இல்லை" என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.



  • 21:37 (IST) 21 Dec 2021
    ஒமைக்ரான் தொற்று : டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் தலா 54 பேருக்கு பாதிப்பு

    இந்தியாவில் தற்போதுவர ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 200 ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் , மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 பேருக்கும், தெலுங்கானாலில் 20 பேருக்கும், கர்நாடகா 19, ராஷ்தான் 18, கேரளா 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டளளது.



  • 21:29 (IST) 21 Dec 2021
    ராணுவ வீரர்களை புகழ்ந்த யூகேந்திர சாஹல்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக யூகேந்திர சாஹல், நோ சூப்பர் மேன்... நோ ஸ்பைடர் மேன் ராணுவ வீரர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.



  • 20:43 (IST) 21 Dec 2021
    என்னுடைய ஹீரோ மகேஷ்பாபு - புகழ்ந்து தள்ளிய ராஜமௌலி

    இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலியி்ன் ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா படம் கோடை விடுமுறைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜமௌலி, என்னுடைய ஹீரோ மகேஷ்பாபுவிற்கும் படக்குழுவினருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.



  • 20:43 (IST) 21 Dec 2021
    என்னுடைய ஹீரோ மகேஷ்பாபு - புகழ்ந்து தள்ளிய ராஜமௌலி

    இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலியி்ன் ஆர்ஆர்ஆர் படம் வரும் ஜனவரி மாதம் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா படம் கோடை விடுமுறைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜமௌலி, என்னுடைய ஹீரோ மகேஷ்பாபுவிற்கும் படக்குழுவினருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.



  • 20:40 (IST) 21 Dec 2021
    ஜம்மு காஷ்மீரில் புதிதாக 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

    இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் புதிதாக 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 20:22 (IST) 21 Dec 2021
    ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : இந்திய அணி வீழ்ச்சி

    ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி டிராபி போட்டியில், அரையிறுதியில் ஜப்பானுடன் மோதிய இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.



  • 19:37 (IST) 21 Dec 2021
    ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பு : மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுரை

    இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் ஓமிக்ரான் டெல்டா வகையை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது இதனால், பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



  • 19:35 (IST) 21 Dec 2021
    சண்முகநாதன் உடலுக்கு உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி

    திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று மரணமடைந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.



  • 18:45 (IST) 21 Dec 2021
    நடிகர் மம்முட்டி நிலத்தின் மீதான அறிவிப்பு ரத்து

    நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவு ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் புதிதாக உத்தரவு பிறப்பிக்க நில நிர்வாக ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 18:16 (IST) 21 Dec 2021
    சண்முகநாதன் மறைவு - முதலமைச்சர் கண்ணீர்

    கலைஞர் கருணாநிதி உதவியாளராக இருந்த கோ. சண்முகநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபோது முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் விட்டார்.

    சண்முகநாதன் உடலுக்கு அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.



  • 17:54 (IST) 21 Dec 2021
    சண்முகநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - கே.எஸ்.அழகிரி இரங்கல்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் மறைவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “திமு கழக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் அவர்களிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக பாணியாற்றிய கோ. சண்முகநாதன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

    காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக பணியில் சேர்ந்த இவர் கடும் உழைப்பின் மூலமாக கலைஞரின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக செயல்பட்டவர். சண்முகநாதனை நடமாடும் கருவூலமாக அனைவரும் கருதுவார்கள். எந்த கருத்தைப் பற்றியும் அறிய வேண்டுமானாலும் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.

    முத்தமிழறிஞர் கலைஞரின் நேர்முக உதவியாளர் என்பதால் அன்றைய ஆளுங்க்கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட பல அடக்குமுறைகளை துணிவுடன் எதிர்த்து நின்றவர். சோதனையான காலத்திலும் அவருக்கு உற்ற துணையாக இருந்தவர்.

    கோ. சண்முகநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமு கழக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:44 (IST) 21 Dec 2021
    அருமை அண்ணன் சண்முகநாதன் மறைவுச் செய்தியால் திராத மனத் துயரம் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: “அருமை அண்ணன் சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்கு தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது; அன்புள்ளம் கொண்ட சண்முகநாதனை இவ்வளவு சீக்கிரம் இழப்போம் என்று நான் நினைக்கவில்லை. கலைஞரை பிரிந்து சண்முகநாதனாலும் இருக்க முடியாது; அவரை பிரிந்து கலைஞராலும் இருக்க முடியாது” என்று கூறினார்.



  • 17:16 (IST) 21 Dec 2021
    உண்மை, உழைப்பு, விசுவாசம், அர்ப்பணிப்பின் அடையாளம் சண்முகநாதன் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உண்மை, உழைப்பு, விசுவாசம், அர்ப்பணிப்பின் அடையாளம் சண்முகநாதன், அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்றுப் புத்தகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.



  • 16:59 (IST) 21 Dec 2021
    சண்முகநாதன் மறைவு: தலையில் இடி விழுந்தது போன்ற துயரம் - டி.ஆர்.பாலு கண்ணீர் மல்க பேட்டி

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.

    சண்முகநாதன் மறைவு குறித்து திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கலைஞர் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர் சண்முகநாதன்; அவரது மறைவு தலையில் இடி விழுந்தது போன்ற துயரத்தை அளித்துள்ளது என்ரு கண்ணீர் மல்க கூறினார்.



  • 16:21 (IST) 21 Dec 2021
    தமிழக மீனவர்கள் 13 பேருக்கு ஜனவரி 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை ஜனவரி 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும், சிறார் ஒருவரை சிறை வளாகத்தில் பராமரிக்கவும் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.



  • 16:15 (IST) 21 Dec 2021
    தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.



  • 16:01 (IST) 21 Dec 2021
    கலைஞர் கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மரணம்!

    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். இவர் 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.



  • 15:59 (IST) 21 Dec 2021
    தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.



  • 15:25 (IST) 21 Dec 2021
    தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 75 படகுகளை மீட்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 15:21 (IST) 21 Dec 2021
    20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட புகாரில், 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 15:20 (IST) 21 Dec 2021
    தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் 75 படகுகளை மீட்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 15:16 (IST) 21 Dec 2021
    சுயதொழில் திறனை வளர்க்க மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

    சுயதொழில் திறனை வளர்க்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, ரூ.1000 கோடி செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 16 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:51 (IST) 21 Dec 2021
    திமுக எம்எல்ஏ உதயநிதி வேட்புமனு வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

    திமுக எம்எல்ஏ. உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணையம், உதயநிதி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:43 (IST) 21 Dec 2021
    குடிநீரில் கழிவுநீர் கலப்பு: 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மருத்துவமனையில் அனுமதி!

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்தது. இதைக் குடித்த 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 14:43 (IST) 21 Dec 2021
    பூந்தமல்லி தனியார் RTPCR ஆய்வகத்தில் 20 பேருக்கு கொரோனா!

    சென்னை , பூந்தமல்லியில் உள்ள தனியார் RTPCR ஆய்வகத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.



  • 14:33 (IST) 21 Dec 2021
    கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளியது டிஎம்சி!

    கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) தேர்தலில், டிஎம்சி வெற்றி பெற உள்ளது, பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. டிஎம்சி வேட்பாளர்களான தேபாசிஷ் குமார் (வார்டு 85), தாரக் சிங் (வார்டு 118), மாலா ராய் (வார்டு 88) மற்றும் பலர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



  • 14:26 (IST) 21 Dec 2021
    சிவசங்கர் பாபாவுக்கு வரும் 4-ம் தேதி வரை சிறை

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு வரும் 4-ம் தேதி வரை சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:25 (IST) 21 Dec 2021
    ரூ.609 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

    கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ.609 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 14:24 (IST) 21 Dec 2021
    இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான்

    இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது.



  • 13:44 (IST) 21 Dec 2021
    மே மாத‌த்தில் பொதுத்தேர்வு

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் மே மாத‌த்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 13:14 (IST) 21 Dec 2021
    பிறந்து 2 தினங்களே ஆன குழந்தை உயிரிழப்பு

    ஈரோடு அரசு மருத்துவமனையில் பிறந்து 2 தினங்களே ஆன குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல் நடத்தினர். குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.



  • 13:11 (IST) 21 Dec 2021
    குழந்தை திருமணம் - இளைஞர் கைது

    கரூர், கந்தசாரப்பட்டி பகுதியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாக மாணிக்கசுந்தரம் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். மாணிக்கசுந்தரத்திற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 12:33 (IST) 21 Dec 2021
    பிரதமர் படத்தை நீக்க கோரிய நபருக்கு அபராதம்

    கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க கோரிய நபருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றங்களில் தீவிரமான வழக்குகள் இருக்கும் போது இது போன்ற தேவையற்ற வழக்குகளை ஊக்குவிக்க இயலாது என்றும் அதிருப்தி



  • 12:31 (IST) 21 Dec 2021
    நீட்டுக்கு எதிராக முழக்கம்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் முழக்கம் செய்து வருகின்றனர்.



  • 12:30 (IST) 21 Dec 2021
    உதவித் தொகை மோசடி - விசாரணைக்கு ஆஜர்

    எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மோசடி புகாரில் தொடர்புடைய கல்லூரி முதல்வர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளனர். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • 12:30 (IST) 21 Dec 2021
    உதவித் தொகை மோசடி - விசாரணைக்கு ஆஜர்

    எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மோசடி புகாரில் தொடர்புடைய கல்லூரி முதல்வர்கள் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளனர். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • 12:11 (IST) 21 Dec 2021
    வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிறு அன்று விடுமுறை - லட்ச்சத்தீவில் புதிய நடைமுறை

    இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் லட்சத்தீவில் பல ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை விடுமுறை கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஞாயிறு அன்று விடுமுறை அளிக்கப்பட்டு பழைய முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • 12:09 (IST) 21 Dec 2021
    இண்டெர்நெட் வசதியை பெறும் மலைகிராமம்

    காரையாறு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் இன்டர்நெட் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் இல்லாததால் 6 கி.மீ. சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற நிலையில் மாணவர்களுக்கு புதிய வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.



  • 11:22 (IST) 21 Dec 2021
    மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பிற்கு 64,900 பேர் விண்ணப்பம்

    2021-22ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பிற்கு 64,900 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.



  • 11:21 (IST) 21 Dec 2021
    தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை

    தமிழ்நாடு அரசின் பாடநூல்களை தமிழகத்தில் மட்டுமே அச்சிடும் வகையில் முதலமைச்சர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்,



  • 11:19 (IST) 21 Dec 2021
    ஒமிக்ரானில் இருந்து 77 பேர் குணம் அடைந்துள்ளனர்

    ஒமிக்ரான் தொற்று பாதிப்பில் இருந்து 77 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது



  • 11:18 (IST) 21 Dec 2021
    இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

    இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேருக்கும், டெல்லியில் 54 பேருக்கும், தெலங்கானாவிக் 20 நபர்களுக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், குஜராத்தில் 14 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 10:53 (IST) 21 Dec 2021
    தேர்தல் சட்ட திருத்த மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் - திருச்சி சிவா

    மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யும்போது அதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்



  • 09:49 (IST) 21 Dec 2021
    நீட் விலக்கு மசோதா - டி.ஆர்.பாலு நோட்டீஸ்

    தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரி ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி டி. ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்



  • 09:33 (IST) 21 Dec 2021
    கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பால் 453 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 79,097 பேர் சிகிச்சையில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல்



  • 08:54 (IST) 21 Dec 2021
    யூடியூப் பார்த்து பிரசவம் - சட்டரீதியான நடவடிக்கை

    யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறான அணுகுமுறை. இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 08:33 (IST) 21 Dec 2021
    அமெரிக்காவில் ஒமிக்ரானால் முதல் உயிரிழப்பு

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.



Tamil Nadu Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment