Advertisment

Tamil News: உருவாகிறது புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: உருவாகிறது புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திருடர்களை விரட்டிச் சென்ற நவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்தது தனிப்படை.தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் உட்பர 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 18-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கொரோனா அப்டேட்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.78 கோடியைக் கடந்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.277 கோடியைத் தாண்டியது. இதுவரை 51.67 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3 - 0 என வென்றது இந்தியா

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய அணி. நேற்று நடைபெற்ற போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:31 (IST) 22 Nov 2021
    ஒரே மாதத்தில் வங்கக் கடலில் உருவாகும் 3வது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழ்கம் ஒட்டி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.



  • 20:43 (IST) 22 Nov 2021
    நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்; உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறோம்; நீங்கள் உத்தரவிடுங்கள்; அதனை முடிக்க தயாராக உள்ளோம்” என்று கூறினார்.



  • 19:11 (IST) 22 Nov 2021
    கொரோனா தொற்று பாதிப்பு: கமல்ஹாசன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போரூ மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 19:05 (IST) 22 Nov 2021
    அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை - ஸ்டாலின் கேள்வி

    திருப்பூரில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சி என்றாலே உள்ளாட்சியில் நல்லாட்சி என்பதுதான்; ஆனால், கடந்த ஆட்சியில் அது எங்கே போனது என்றே தெரியவில்லை. அதே போல, அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் எங்கே போனது என்றே தெரியவில்லைஅது குறித்தெல்லாம் இந்த மேடையில் பேச விரும்பவில்லை. ஏனெனில் இது அரசு நிகழ்ச்சி; அரசியல் நிகழ்ச்சி அல்ல.” என்று கூறினார்.



  • 17:58 (IST) 22 Nov 2021
    உயர்கல்வி நிறுவனங்களில் வாரம் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம்!

    கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் சமீபத்தில் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு சுழற்சி முறையில், வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வாரத்தில் ஆறு நாட்களும் நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் உயர் கல்வித்துறை தெரிவிக்கிறது.



  • 17:09 (IST) 22 Nov 2021
    குடிபோதையில் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனை கொலை செய்த கும்பல்; டிஐஜி தகவல்!

    சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன்(51), கீரனூர் அருகே ஆடு திருடர்களை விரட்டிப் பிடித்தபோது, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், இரு சிறுவர்கள், 19 வயது இளைஞர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 19 வயது இளைஞரின் பெயர் மணிகண்டன். இவர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதனை தலையின் பின்புறம் தாக்கி கொலை செய்ததும், அப்போது மணிகண்டன் குடிபோதையில் இருந்ததாகவும் டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.



  • 16:47 (IST) 22 Nov 2021
    5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

    ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் உள்பட ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை, ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கரூரில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.



  • 16:40 (IST) 22 Nov 2021
    இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: முதல்வர் பாராட்டு!

    சென்னையைச் சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் இன்று வழங்கினார். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அபிநந்தனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 15:40 (IST) 22 Nov 2021
    மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் இடைநீக்கம்

    பெருந்துறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் திருமலைமூர்த்தி போக்சோவில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



  • 15:19 (IST) 22 Nov 2021
    நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று

    அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



  • 14:45 (IST) 22 Nov 2021
    பாஜக வெற்றி பெற முடியாது - கே.எஸ். அழகிரி

    விவசாய சட்டங்களை திரும்ப பெற்றாலும், 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலுக்கு பின் வேளான் சட்டங்களை திரும்ப பெற்றது சந்தர்ப்பவாதம் என்று கூறியுள்ளார்.



  • 14:16 (IST) 22 Nov 2021
    நூல் விலையை கண்டித்து நவம்பர் 26-ந் தேதி போராட்டம் அறிவிப்பு

    திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலை ஏற்றத்தை கண்டித்து வரும் நவம்பர் 26-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ள.து



  • 14:05 (IST) 22 Nov 2021
    ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி்ககொள்ள வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப் படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்களின் நலன் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • 13:29 (IST) 22 Nov 2021
    கோவையில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

    கோவையில் ரூ. 89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர், சட்டமன்ற தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் பெருவாரியான வெற்றி கிடைத்தது. ஆனால் கோவையில் எதிர்பார்த்த வெற்றி திமுகவுக்கு கிடைக்கவில்லை. அனைத்து மாவட்ட மக்களும் என் மக்கள் தான் என்ற வகையில் பணியாற்றுகிறேன். வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவதுதான் என் நோக்கம் என்று கூறியுள்ளார்.



  • 12:56 (IST) 22 Nov 2021
    மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல தடை

    சென்னை, மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டுள்ளது



  • 12:54 (IST) 22 Nov 2021
    சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 12:37 (IST) 22 Nov 2021
    எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் 2 பள்ளி மாணவர்கள் கைது

    ஆடு திருடர்களை பிடிக்க சென்ற எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் 2 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • 12:07 (IST) 22 Nov 2021
    போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த அறிவுறுத்தல் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    மாணவ, மாணவிகள் எந்தவித தயக்கமும் இன்றி பாலியல் புகார்களை அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். ஒரு ஆசிரியர் செய்யும் தவறால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மாணவர்களின் பக்கம் அரசு துணைநிற்கும் என்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



  • 11:59 (IST) 22 Nov 2021
    அபிநந்தன் வர்தமானுக்கு "வீர் சக்ரா" விருது

    2019 - பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வீர, தீரத்துடன் செயல்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு "வீர் சக்ரா" விருது வழங்கப்பட்டது. விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்



  • 11:43 (IST) 22 Nov 2021
    கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் வேன் மோதி உயிரிழப்பு

    கரூர் மாவட்டம் வெங்கக்கல்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் வேன் மோதி உயிரிழந்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தப்போது, வேன் ஓட்டுநர் நிறுத்தாமல் மோதிவிட்டு சென்றதால் கனகராஜ் உயிரிழந்துள்ளார்



  • 11:21 (IST) 22 Nov 2021
    பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலம் உருவாக்கம்

    பொதுப்பணித்துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



  • 11:01 (IST) 22 Nov 2021
    டிசம்பர் 3 வரை பாஜக தொடர் போராட்டம் - அண்ணாமலை

    தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி இன்று முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை பாஜக தொடர் போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • 09:48 (IST) 22 Nov 2021
    சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பொறுப்பேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி!

    சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக பொறுப்பேற்று கொண்ட முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு, ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



  • 09:14 (IST) 22 Nov 2021
    சென்னையில் கனமழை

    சென்னை கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், புளியந்தோப்பு, சென்ட்ரல், பெரம்பூர், திரு.வி.க நகர், வியாசர்பாடி, முல்லைநகர், எம்.கே.பி நகர், மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது.



  • 09:14 (IST) 22 Nov 2021
    சென்னையில் கனமழை

    சென்னை கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, அடையார், கோட்டூர்புரம், புளியந்தோப்பு, சென்ட்ரல், பெரம்பூர், திரு.வி.க நகர், வியாசர்பாடி, முல்லைநகர், எம்.கே.பி நகர், மூலக்கடை, கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது.



  • 08:56 (IST) 22 Nov 2021
    இன்று கோவை செல்கிறார் முதல்வர்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக இன்று கோவை செல்கிறார். கோவை, வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்



  • 08:31 (IST) 22 Nov 2021
    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... உயிரியல் ஆசிரியர் கைது

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உயிரியல் ஆசிரியர் திருமலைமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 07:49 (IST) 22 Nov 2021
    இன்று ஆய்வை தொடங்குகிறது மத்திய அரசின் குழு

    தமிழ்நாடு வந்துள்ள மத்திய அரசின் குழு இன்று ஆய்வைத் தொடங்குகிறது. 2 குழுக்களாக பிரிந்து சென்னையிலும், கன்னியாகுமரியிலும் பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.



Tamilnadu Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment