Advertisment

Tamil News Today : ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலி; 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலி; 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.28) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூா், கோயம்புத்தூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அச்சுறுத்தம் ஒமைக்ரான் கொரோனா

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பல நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

கொரோனா அப்டேட்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.13 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.60 கோடியைத் தாண்டியது.

பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 24-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:41 (IST) 28 Nov 2021
    ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலி; 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு

    ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயனிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதம் கட்டாயம் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.



  • 21:27 (IST) 28 Nov 2021
    ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு



  • 21:25 (IST) 28 Nov 2021
    விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு



  • 21:09 (IST) 28 Nov 2021
    பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மரணம்

    பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 28) காலமானார். 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



  • 20:21 (IST) 28 Nov 2021
    கனமழை: 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை; 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:21 (IST) 28 Nov 2021
    கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

    தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:20 (IST) 28 Nov 2021
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நவ. 29-ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை கரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நவ. 29-ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 20:19 (IST) 28 Nov 2021
    கடலூர் மாவட்டத்தில் நவ. 29-ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை கரணமாக கடலூர் மாவட்டத்தில் நவ. 29-ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 20:18 (IST) 28 Nov 2021
    கடலூர் மாவட்டத்தில் நவ. 29-ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    கனமழை கரணமாக கடலூர் மாவட்டத்தில் நவ. 29-ல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 20:16 (IST) 28 Nov 2021
    கனமழை: 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

    தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:15 (IST) 28 Nov 2021
    கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நவ. 29-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு



  • 20:13 (IST) 28 Nov 2021
    கனமழை: 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை; 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 18:52 (IST) 28 Nov 2021
    இதுவரை 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவம்பர் 29) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 17:53 (IST) 28 Nov 2021
    சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவ. 29-ல் விடுமுறை

    கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 29) விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 17:23 (IST) 28 Nov 2021
    கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.29-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • 16:57 (IST) 28 Nov 2021
    திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    திருவாரூர் மாவட்டத்தில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.



  • 16:34 (IST) 28 Nov 2021
    நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை விளக்கம்

    நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தேசிய தேர்வு முகமையின் பணி என்று நீட் தேர்வு கலந்தாய்வு, இட ஒதுக்கீடு குறித்து தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.



  • 15:59 (IST) 28 Nov 2021
    தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சை, கரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 15:38 (IST) 28 Nov 2021
    நெல்லை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.



  • 15:20 (IST) 28 Nov 2021
    நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் - டி.ஆர்.பாலு

    மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீட் தேர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும், விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும், விலை வாசி உயர்வுக்கு முக்கிய காரணம் எரிபொருள் விலை உயர்வு, எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.



  • 15:18 (IST) 28 Nov 2021
    தூத்துக்குடி பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.



  • 13:54 (IST) 28 Nov 2021
    இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள்: பிரதமர் மோடி பாராட்டு

    தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க பனை மரங்களை நடுகிறார்கள். நாம் இயற்கையை பாதுகாக்கையில், இயற்கை நம்மை பாதுகாக்கும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.



  • 12:52 (IST) 28 Nov 2021
    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 12:43 (IST) 28 Nov 2021
    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 12:29 (IST) 28 Nov 2021
    கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை, கவனம் தேவை – பிரதமர் அறிவுறுத்தல்

    கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்



  • 12:28 (IST) 28 Nov 2021
    நவம்பர் 30 ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்

    தெற்கு அந்தமானில் நாளை உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக நவம்பர் 30 ஆம் தேதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 11:29 (IST) 28 Nov 2021
    அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றம்: ஓபிஎஸ் கண்டனம்

    சேலம் மாவட்டத்தில் 'அம்மா மினி கிளினிக்' என்ற பெயரை மாற்றி 'முதலமைச்சர் மினி கிளினிக்' என்று பெயர் பலகையை திமுகவினர் மாற்றிவைத்துள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து 'அம்மா மினி கிளினிக்' என்ற பெயர் பலகையை மீண்டும் பொறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.



  • 11:12 (IST) 28 Nov 2021
    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    கனமழையால் பூந்தமல்லி, திருவேற்காட்டில் பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் உள்ள குழந்தைக்கு சோழன் என பெயர் சூட்டினார்.



  • 11:01 (IST) 28 Nov 2021
    கடந்த 24 மணி நேரத்தில் 8,774 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 621 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 9,481 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



  • 10:23 (IST) 28 Nov 2021
    நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

    தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 09:47 (IST) 28 Nov 2021
    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது

    வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 1.37 கோடி மோசடி செய்த விவாகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 09:36 (IST) 28 Nov 2021
    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது

    வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 1.37 கோடி மோசடி செய்த விவாகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 09:32 (IST) 28 Nov 2021
    திரைப்படங்களை விமர்சிக்க வேண்டாம்: அண்ணாமலை

    திரைப்படத்துறை விமர்சனங்களை தவிர்க்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கூறும் கருத்து நம் கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது என தெரிவித்துள்ளார்.



  • 08:57 (IST) 28 Nov 2021
    இன்று 12-வது மெகா தடுப்பூசி முகாம்...!

    12-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதுவரை 77.02 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடந்த 11-வது மெகா தடுப்பூசி முகாமில் தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.



  • 08:55 (IST) 28 Nov 2021
    இன்று அனைத்து கட்சி கூட்டம்

    பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்



  • 08:21 (IST) 28 Nov 2021
    29,500 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

    மதுராந்தகம் ஏரியில் இருந்து 29,500 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • 08:03 (IST) 28 Nov 2021
    21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment