Advertisment

Tamil News: நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Omicron Latest News 1st February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News: நடிகர் சரத்குமாருக்கு கொரோனா!

Tamil Nadu News Updates: கொரோனா பரவல் குறைந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

Advertisment

பள்ளிகள் இன்று திறப்பு

ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. அதே சமயம், ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறவுள்ளதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயாமில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல்

2022-23ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். வரிச்சலுகை உள்ளிட்ட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா அப்டேட்

உலகளவில் இதுவரை 37.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 29.86 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 56.90 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

1 லட்சம் கோடியை தாண்டிய ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி

ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் தொடர்ந்து 7-வது மாதமாக ஜனவரியிலும் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 394 கோடி வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டின் ஜனவரி மாத வசூலை விட 15 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:41 (IST) 01 Feb 2022
    பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேள்வி

    பட்ஜெட் குறித்து கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின், ரூ.1 லட்சம் கோடியும் மாநிலங்களுக்கு நிபந்தனைகளின்றி பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும் வட்டியில்லா கடனுக்கு நிபந்தனைகளை விதித்தால், மாநில அரசுகளுக்கு எந்தவகையில் உதவும்? என்று கேட்டுள்ளார்.



  • 22:39 (IST) 01 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம்

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையல், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.



  • 22:38 (IST) 01 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி வார்டு - 440, நகராட்சி வார்டு - 803, பேரூராட்சி வார்டு - 1,320 வேட்புமனுக்கள் 12,838 பதவியிடங்களுக்கு இதுவரை 2,563 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 22:37 (IST) 01 Feb 2022
    இனிப்பும், கசப்பும் கலந்த கலவையே மத்திய பட்ஜெட்

    மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையே மத்திய பட்ஜெட் தனிநபர் வருமானம், விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றமே என்று கூறியுள்ளார்.



  • 20:56 (IST) 01 Feb 2022
    மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையல், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளர். அந்த வகையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.



  • 20:53 (IST) 01 Feb 2022
    வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட் உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக பட்ஜெட் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • 20:00 (IST) 01 Feb 2022
    தமிழகத்தில் மேலும் 16,096 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் மேலும் 16,096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 19,280ஆக இருந்த நிலையில் 16,096 ஆக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 35 பேர் பலி மொத்த பலி எண்ணிக்கை 37,599 ஆக அதிகரித்துள்ளது.



  • 19:59 (IST) 01 Feb 2022
    வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்டாகவே உள்ளது - முதல்வர் ஸ்டாலின்

    மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. வார்த்தை ஜாலங்கள் நிறைந்த பட்ஜெட்டாகவே உள்ளது மக்கள் நலனை மறந்த பட்ஜெட் என்பதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்



  • 18:56 (IST) 01 Feb 2022
    மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு மணிகண்டன், ஜான் லூயிஸ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 18:53 (IST) 01 Feb 2022
    ஜி.கே.வாசனுக்கு கொரோனா பாதிப்பு

    தமிழனத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது



  • 18:16 (IST) 01 Feb 2022
    கருணாநிதியை விமர்சித்ததாக வைகோ மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட் உத்தரவு

    மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை விமர்சித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    2016 சட்டமன்ற தேர்தலின்போது கருணாநிதியை அவதூறாக விமர்சித்ததாக எழும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். வைகோ மீதான இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.



  • 18:11 (IST) 01 Feb 2022
    முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

    முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



  • 17:54 (IST) 01 Feb 2022
    உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டி

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்.

    அறந்தாங்கி நகராட்சியில் 3 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு; எஞ்சி இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



  • 17:38 (IST) 01 Feb 2022
    நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட் - இ.பி.எஸ் வரவேற்பு

    நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட் என்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் ந‌திநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு நன்றி. சிறப்பான முறையில் பட்ஜெட் வழங்கிய நிதியமைச்சருக்கு வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • 17:11 (IST) 01 Feb 2022
    தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.53.72 லட்சம் பணம் பறிமுதல் - மாநில தேர்தல் ஆணையம்

    தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.53.72 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ரூ.40.4 லட்சம் பணம், 15 லேப்டாப்கள், 40 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெர்வித்துள்ளது.



  • 17:00 (IST) 01 Feb 2022
    மாரிதாஸ் வழக்கில் பாஜகவினர் 34 பேருக்கு எதிரான வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்

    யூடியூபர் மாரிதாசை கைது செய்ய விடாமல் காவல்துறையினர் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜகவினர் 34 பேருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு.



  • 16:40 (IST) 01 Feb 2022
    திமுக கூட்டணியில் மதுரை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 வார்டுகள் ஒதுக்கீடு

    மதுரை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் ஏற்கனவே 9 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 8 வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



  • 15:50 (IST) 01 Feb 2022
    'பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

    1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது!

    பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்?

    பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை

    சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 15:29 (IST) 01 Feb 2022
    மாணவி உயிரிழந்த விவகாரம்; பாஜக அரசியல் செய்யவில்லை - விஜயசாந்தி!

    "தஞ்சை பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யவில்லை. ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தான் போராடுகிறோம்" என்று தெரிவித்துள்ள பாஜக அமைத்த விசாரணை குழுவின் உறுப்பினர் விஜயசாந்தி, "திமுக அரசு ஏன் இந்த விவகாரத்தில் மெளனமாக உள்ளது?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.



  • 15:17 (IST) 01 Feb 2022
    எல்.ஐ.சி. பங்கு விற்பனை, தனியார் மயம், தனி நபர் வருமான வரம்பில் மாற்றம் இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள் கவலையளிக்கின்றன - டிடிவி தினகரன் அறிக்கை!

    "மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு,நீர்ப்பாசனம்,சிறு-குறு தொழிலுக்கு உதவி,விவசாயத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி உள்ளிட்டவை மகிழ்ச்சியளித்தாலும் LIC பங்கு விற்பனை,நீர்பாசனத்திட்டங்களில் தனியார்மயம்,தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லாதது ஆகியவை கவலையளிக்கின்றன" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 15:08 (IST) 01 Feb 2022
    பிரேசில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி!

    பிரேசில் நாட்டின் சயோ பலோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், சயோ பலோவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.



  • 14:52 (IST) 01 Feb 2022
    824 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - திருச்சி மாநகராட்சி தகவல்!

    கடந்த 2021 ஆகஸ்ட் முதல் 824 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று திருச்சி மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. திருச்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கால்நடைத்துறை செயலர், திருச்சி மாநகராட்சி ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



  • 14:38 (IST) 01 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக!

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக 3ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



  • 14:29 (IST) 01 Feb 2022
    உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு!

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



  • 12:42 (IST) 01 Feb 2022
    தமிழகத்தில் 77 சதவீதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.. ராதாகிருஷணன்!

    தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2.5 லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.



  • 12:42 (IST) 01 Feb 2022
    மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு!

    மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்க ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.



  • 11:13 (IST) 01 Feb 2022
    கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு இன்று தொடங்கியது!

    தமிழகத்தில், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு ஆன்லைனில் இன்று தொடங்கியது. வரும் 25ம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும்!



  • 11:13 (IST) 01 Feb 2022
    ரயில்களில் பயணிக்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை!

    சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க இன்று முதல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை. அதேநேரம், ரயில் பயணிகள், மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:57 (IST) 01 Feb 2022
    அதிமுக 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகவின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நாமக்கல், திருப்பூர், கோவை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



  • 10:25 (IST) 01 Feb 2022
    இன்றைய தங்கம் விலை நிலவரம்

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ32 அதிகரித்து ரூ36,128-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் தங்கம் ரூ4,516-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 09:19 (IST) 01 Feb 2022
    ஆன்லைன் செமஸ்டர் தேர்வு இன்று தொடங்குகிறது!

    தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.



  • 09:17 (IST) 01 Feb 2022
    இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,192 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



  • 08:32 (IST) 01 Feb 2022
    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி, ஆன்லைன் வாயிலாக பணியை தொடர இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.



Tamilnadu Corona Virus Budget 2022 23
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment