Advertisment

Tamil News Today : முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கும், ராஜஸ்தானில் 4 பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், இங்கிலாந்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னையில் கடந்த 40 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் ரூபாய் 101.40-க்கும், டீசல் ரூபாய் 91.43-க்கும் விற்பனையாகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற அபூர்வ நிகழ்வாகும். கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:14 (IST) 14 Dec 2021
    எம்.பில், பி.எச்டி மாணவியருக்கு பேறுகால விடுப்பு கட்டாயம் - யுஜிசி உத்தரவு

    "M.Phil., Ph.D., மாணவியருக்கு பேறுகால விடுப்பு கட்டாயம்; 240 நாட்கள் வரை விடுப்பு வழங்கலாம்" - கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவு



  • 21:41 (IST) 14 Dec 2021
    சிந்தாதிரிப்பேட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 3 பேர் 26 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை

    1995ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதான காஜா நிஜாமுதீன், ஜாகிர் உசேன், ராஜா உசேன் ஆகியோர் 26 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை



  • 19:54 (IST) 14 Dec 2021
    டி.என்.பி.எஸ்.சி 'குரூப் 1' முதன்மைத் தேர்வு தேதி அறிவிப்பு

    டி.என்.பி.எஸ்.சி 'குரூப் 1' முதன்மைத் தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 வரிசையில் வரும் 66 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 3,800 தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6 தேதிகளில் நடைபெறுகிறது.



  • 19:46 (IST) 14 Dec 2021
    மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

    மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



  • 18:04 (IST) 14 Dec 2021
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்தார்.



  • 17:26 (IST) 14 Dec 2021
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்தித்தார். வரும் மார்ச மாதம் ஹைதராபாத் அருகே நடைபெறவுள்ள லட்சும நரசிம்மா சாமி கோவில் திறப்பு விழாவில் பஙகேற்க அழைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • 16:46 (IST) 14 Dec 2021
    ராகிங் - மாணவர்கள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆணை

    ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று மாணவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலை கழகம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:46 (IST) 14 Dec 2021
    ராகிங் - மாணவர்கள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஆணை

    ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என்று மாணவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலை கழகம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:43 (IST) 14 Dec 2021
    ராமநாதபுரம் மாணவர் மரணம குறித்து ஏடிஜிபி விளக்கம்

    ராமநாதபுரம் மாணவர் மணிகண்டன் காவல்துறையினர் தாக்கியோ, அடித்தோ உயிரிழக்கவில்லை என்றும் விஷமருந்தி அவர் உயிரிழந்துள்ளதாகவும் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.



  • 16:41 (IST) 14 Dec 2021
    'ரிஸ்க்' நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை

    'ரிஸ்க்' நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு முன்பதிவு செய்வது அவசியம் என்று கூறியுள்ள மத்திய அரசு சென்னை மும்பை டெல்லி உள்ளிட்ட விான நிலையங்களில் வரும் 20-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.



  • 16:05 (IST) 14 Dec 2021
    லக்கிம்பூரில், விவசாயிகள் தாக்குதல் : விசாரணை கோணத்தை மாற்ற வலியுறுத்தல்

    கடந்த அக்டோபர் 3-ந் தேதி உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 விவசாயிகள் மரணமடைந்த நிலையில், இந்த சம்பவத்தை வன்முறை மற்றும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என்ற கோணத்தில் எஸ்ஐடி விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கை கவனக்குறைவால் நடத்த விபத்து என்று மாற்றி விசாரிக்குமாறு நீதித்துறை தலைமை மாஜித்ரேட் வலியுறுத்தியுள்ளார்.



  • 15:55 (IST) 14 Dec 2021
    நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன்

    பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்துகொண்டதுடன் தனது சாதியை பற்றி தவறாக பேசியதாக மகா காந்தி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் ஜனவரி 4-ந் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பப்பட்டு்ளளது.



  • 15:51 (IST) 14 Dec 2021
    சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலம் நீடிப்பு மசோதா நிறைவேற்றம்

    சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • 15:50 (IST) 14 Dec 2021
    வெள்ள நிவாரணத்தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க கோரிக்கை

    தமிகத்திற்காக மழை வெள்ள நிவாரணத்தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மக்களவையில் நடைபெற்ற துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியுள்ளார். மேலும் 4 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • 15:27 (IST) 14 Dec 2021
    யூ டியூபர் மாரிதாஸ் வழக்கு ரத்து

    பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையில் அவதூறு பிரச்சாரம் செய்த வழக்கில், யூ டியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 15:17 (IST) 14 Dec 2021
    பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 17 ஆயிரம் பேர் பயணச்சீட்டுகளை பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.



  • 15:11 (IST) 14 Dec 2021
    14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 14:35 (IST) 14 Dec 2021
    மாற்றுத்திறனாளிகள் கைது - கண்டனம்

    தமிழகத்தில் உதவித்தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை இப்படி மனிதநேயம் இல்லாமல் நடத்துவது சரியல்ல என்றும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.



  • 14:33 (IST) 14 Dec 2021
    பிரதமர் மன்னிப்பு கோர வேண்டிய நேரம்

    லக்கிம்பூர் கேரி வன்முறை திட்டமிட்ட சதி என்ற விசாரணைக்குழுவின் தகவலை குறிப்பிட்டு, பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.



  • 14:06 (IST) 14 Dec 2021
    ஒமிக்ரான் - தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு

    கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றும் தமிழகத்தில் இருந்து 33 மாதிரிகள் மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் ஒமிக்ரான் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 14:04 (IST) 14 Dec 2021
    உர உதவி மையம் அமைப்பு

    தமிழகத்தில் விவசாயிகளுக்காக மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், உரம் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 9363440360 என்ற எண் மூலம் தெரிவிக்கலாம் என்று வேளாண்மை உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார்.



  • 14:01 (IST) 14 Dec 2021
    பூஸ்டர் டோஸ் - மத்திய அரசு தகவல்

    இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரை எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.



  • 13:23 (IST) 14 Dec 2021
    டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி, பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

    டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது



  • 12:36 (IST) 14 Dec 2021
    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி - முதலமைச்சர் ஸ்டாலின்

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்காக திமுக அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. 7,56,142 பேருக்கு கடனுதவி, நலத்திட்ட உதவி கிடைக்கப்பெற உள்ளது என திருத்தணி நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்



  • 12:17 (IST) 14 Dec 2021
    யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.





  • 12:12 (IST) 14 Dec 2021
    பதவிகாலம் முடிந்தும் அரசுச் சின்னம் பயன்பாடு - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

    பதவிகாலம் முடிந்த எம்.பி., அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசின் கடைநிலை ஊழியர்களும் சின்னங்களை பயன்படுத்துகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    அனைவரும் சின்னத்தை பயன்படுத்தினால் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ முடியும்? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • 12:09 (IST) 14 Dec 2021
    அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

    மத்திய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 11:54 (IST) 14 Dec 2021
    கோவை மாணவி தற்கொலை - ஆசிரியருக்கு குண்டாஸ்

    கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்த‌து



  • 11:44 (IST) 14 Dec 2021
    மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சி - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்



  • 11:12 (IST) 14 Dec 2021
    குரூப் 4 முறைகேடு - சிபிஐ விசாரிக்க உத்தரவு

    2019-ம் ஆண்டு குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.



  • 10:46 (IST) 14 Dec 2021
    அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:01 (IST) 14 Dec 2021
    இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 252 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 7,995 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



  • 09:29 (IST) 14 Dec 2021
    இந்தோனேசியாவில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

    இந்தோனேசியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ. வடக்கே 7.6 ரிக்டர் அளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது



  • 08:59 (IST) 14 Dec 2021
    கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி

    கடந்த 2 மாதங்களாக தொடர்மழை, வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை இருந்த நிலையில், நீர்வரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் குற்றால அருவி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.



  • 08:06 (IST) 14 Dec 2021
    நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி

    நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.



  • 08:05 (IST) 14 Dec 2021
    நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி

    நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.



Tamilnadu Omicron
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment