Advertisment

தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறிய அமைச்சர் : அரசு விழாவில் எழுந்த சர்ச்சை

Minister Jayakumar : அரசு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் திணறிய நிகழ்வு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறிய அமைச்சர் : அரசு விழாவில் எழுந்த சர்ச்சை

Minister Jayakumar Thamizh Thai Vazhithu : தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விழா மேடையில் தமிழ்தாய் வாழ்த்து பாட தெரியாமல் திணறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழக அமைச்சரவையில், மீனவளத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெயக்குமார். தமிழக அமைச்சர்களில் நாளுக்கு நாள் செய்தியாளர்களை சந்திக்கும் இவர், இவடையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகைகையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 16 கோடி 80 லட்ச ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர்கள் பாண்டியராஜன் உள்ளிட்டோர் சில அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அரசு நிகழ்ச்சிகள் எப்போது தமிழ்தாய் வாழ்த்து பாடியபிறகே தொடங்கப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சி தொடங்கிய பிறகே தமிழ்தாய் வாழ்த்து பாடாதது அமைச்சர்களுக்குதெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மேடையிலேயே தமிழ்தாய் வாழ்த்து பாட தொடங்கினர். இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அமைச்சர் ஜெயக்குமார், இடையில் வரிகளை மறந்து பாட திணறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அவரது அருகில் இருந்த அமைச்சர் பாண்டியராஜன் சொல்லிக்கொடுத்த்தை தொடர்ந்து, அமைச்சர் யஜெயக்குமார்  நினைவுபடுத்தி, பின்னர் பாடி முடித்தார்.

இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பல மேடைகளில் சினிமா பாடல்களை சரியாக பாடி அசத்திய அமைச்சர் ஜெயக்குமார் தற்போது தமிழ்தாய் வாழ்த்து பாட திணறியது குறித்து இணையதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Minister Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment