Advertisment

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Minister Rajendra Balaji Case In Mudirai High Court : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Property In Excess Of Income Case Against Minister Rajendra Balaji : தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 6 கோடி மதிப்புள்ள 35 ஏர்க்கர் நிலத்தை 74 லட்சம் ரூபாய்க்கும், திருத்தங்கல் பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள 75 சென்ட் நிலத்தை சுமார் 4 லட்சத்திற்கு வாங்கியுள்ளதாகவும், மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இது தொடர்பாக நடந்த விசாரணையில், அமைச்சர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் கீழ், விசாரணையை தொடர வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த வழக்கை முடிக்க பொதுத்துறை உத்தரவிட்டதாக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக பதவியேற்பதற்கு முன் உள்ள சொத்துக்கள மீது மட்டும் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டது.

இதனால் ராஜேந்திர பாலாஜி கடந்த 1996 ஆம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தது முதல் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழக்கப்பட்டது.

இதில் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா என்ற இரு நீதிபதிகள், வழ்க்கின் தீர்ப்பை வாசித்தனது. இதில், சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தும் உத்தரவிட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Minister Rajendra Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment