Petrol and Diesel Price: சென்னையில் 105-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu News Update: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மீண்டும் விசாரணை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் மாதத்துக்குள் விசாரணையை முடிக்க அந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பரிசோதனை தேவையில்லை: தமிழகத்தில் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதால் கொரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக ஆகிவிட்டது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
India News Update: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கொரோனா காலத்தில் விதித்த கூடுதல் கட்டுப்பாடுகளை ரத்து செய்யுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
உக்ரைனுக்கு அதிக விமானங்கள்
போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்துவர அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
Corona Update: உலகளவில் இதுவரை 41.78 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 34.11 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.66 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் முனிச் பாதுகாப்பு மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த எந்தவித திட்டமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த சற்று நேரத்தில் ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மகாகாந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய்சேதுபதி தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரிக்கை கவுன்சில் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு பத்திரிக்கை கவுன்சில் அமைப்பதற்காக பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது
தஞ்சை மாணவி மரண வழக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினில் இல்லத்தில் போராடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திரிபாதி என்பரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் புற்றுநோய் துறை தலைவராக உள்ள டாக்டர் சுப்பையா சந்தித்தி பேசியுள்ளார். இதனால் அவர் அரசு ஊழியரின் நடத்தை விதிகளை மீறியதாக கூறி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்தது குப்பைகளை கொட்டியது தொடர்பாக சிக்கலில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமைலை, சாதாரண மனிதனும் அரசியல் செய்ய முடியும் என்று மாற்றி விட்டார் பிரதமர் என்று கூறியுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரச்சாரம் முடிந்து விதிமிறலில் ஈடுபட்டால் நடவடிக்கை மேற்கொள்ளபப்டும் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் – களத்தூர் பகுதியில் 2016ம் ஆண்டு சொத்து தகராறில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த வழக்கில் கொலை செய்த மகன் செல்வக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து தகராறு வழக்கில், ஜெயபாலன் என்பவர், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்டவருக்கு ரூ1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையம் உள்ள இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் மனு அளித்துள்ளார்.
நெல்லையில் காணொலி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி அமைக்கும்போது இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்தது. திமுக பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. 10 ஆண்டுகளாக தமிழகத்தை பாழாக்கிய அதிமுக இப்போது திமுகவை குறைகூறுகிறது என்று கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கில், 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தமிழக அரசு தாமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இதுவரை 670 புகார்கள் பெறப்பட்டுள்தாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளத. படத்தின் நீளம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஆகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
7 வருடங்களுக்கு மேலாக பாஜக ஆட்சியில் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் நேருதான் என இன்னமும் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது பாஜக என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி புற்றுநோய் துறை தலைவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து, 2வது தளத்தில் உள்ள ரத்த வங்கிக்கும் பரவியது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர்’ விரைந்து வந்து கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இப்போது தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிப்ரவரி 28-ல், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ’உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுல்காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பிரஸ் கவுன்சில் அமைப்பை ஏற்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக’ சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவுக்கு கொஞ்சமும் புரிதலில்லை. இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது என மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது. டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்கிறார்.
நிலுவையில் உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்ப்போம். ஆரோக்கியமான விவாதம் ஜனநாயகத்திற்கு அத்தியாவசியம் மட்டுமின்றி, அரசியலமைப்பின் பிரிக்க முடியாத அங்கம். இந்த வார இறுதியில் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் கடிதம் எழுதியுள்ளார்.
தஞ்சை, அய்யம்பேட்டை பேரூராட்சி 9வது வார்டு திமுக பெண் வேட்பாளர் அனுசியா, வாக்கு சேகரிப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தென் தமிழக கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்’ பிப்.21 வரை, 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது. மதிகெட்டான் – பெரியார் புலிகள் வலசையில்’ திட்ட அமைவிடம் இருப்பதால் அனுமதிக்க முடியாது. மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகள் நடமாட்டம் பாதிக்கும். நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு தான் முக்கியம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
20ம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க பெரிய அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது பி.சி.சி.ஐ.
தேசிய பங்கு சந்தையின் முன்னாள் சி.இ.ஒ. சித்ரா ராமக்கிருஷ்ணாவின் சென்னை சேலையூர் மற்றும் அண்ணா சாலையில் அமைந்துள்ள வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சாமியார் ஒருவரிடம் ஆலோச்சித்து பங்குச் சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாக அவர் மீது புகார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர எத்தனை முறை வேண்டுமானாலும் விமானங்களை இயக்கிக் கொள்ளலாம் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது
18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கோவா அசத்தியுள்ளது. இதுவரை 11.6 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டதாக மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு
கணவர் ராமசாமி அளித்த கொலை மிரட்டல் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாட்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தலைமறைவாக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை
சென்னையில் ரூ.1.45 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
நகர்ப்புற தேர்தலையொட்டி, சென்னையில் கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 90 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
தென்னப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இன்று 38-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு ரசிகர்களும், கிரிக்கெட் உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், அன்னூரில் மெழுகுவர்த்தி, சிலுவையுடன் கூடிய ஜெப மாலைகளை வழங்கி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் அருகே ஒரு வயது பச்சிளம் குழந்தை விற்கப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து, தாய் உள்பட 9 பேரை கைது செய்து சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.1000 பற்றி பேச முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2-ஆவது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் இன்று நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிக்கிறது.
காவிரி டெல்டாவில் ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
விரைவில் பெண்களுக்கான உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிறையில் உள்ள படப்பை குணாவை ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
எனது சுயசரிதையான 'உங்களில் ஒருவன்' புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்தின்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் உயிரிழந்தனர்.
திருமண கொண்டாட்டத்தில் கிணற்றின் பலகை மீது அமர்ந்திருந்தபோது அதிக பாரம் காரணமாக பலகை உடைந்து விழுந்ததில் 13 பேரும் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தனர்.
2 கட்சிகள் ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், மசினகுடியில் யானையை தீ வைத்து கொன்ற வழக்கில், ஓராண்டாக தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் ரிக்கி ரயான் நீதிமன்றத்தில சரணடைந்தார்.
எரிசக்தி தேவையை மறுப்பது என்பது லட்சக்கணக்கானோருக்கு வாழ்க்கையை மறுப்பதற்குச் சமம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பாஜகவினர் தலித்துகளிடையே ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.