Advertisment

News Highlights: தமிழகத்தில் ஒரே நாளில் 29272 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக மேலும், 142 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
News Highlights:  தமிழகத்தில் ஒரே நாளில் 29272 பேருக்கு கொரோனா உறுதி

Tamil News Today Live : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

கூடுதலாக 142 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் :

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்குவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளார். தமிழகத்தில், கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக மேலும், 142 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு :

எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று இரண்டாவது முறையாக நடைபெற்றது. ஊரடங்கு விதிமுறைகளை மீறி, அதிமுக தலைமையகத்தில் ஒன்று கூடியதாக, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட 250 அதிமுக வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வாய்ப்பு இல்லை :

உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள க.பொன்முடி, தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என செய்தியாளரக்ளிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் :

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,978 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று, 20,904 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,09,237 என உயர்ந்துள்ளது. இதுவரையில், 12,40,968 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

மாரடைப்பு காரணமாக நடிகர் நெல்லை சிவா மரணம்

கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலுவின் கெணத்த காணோம் காமெடி மூலம் புகழ்பெற்ற நடிகர் நெல்லை சிவா மாரணடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் நெல்லை சிவா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)



  • 22:41 (IST) 11 May 2021
    கொரோனா பணியில் இறந்த வருவாய் துறை அலுவலர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

    கொரோனா முன்களப்பணியில் இறந்த வருவாய் துறை அலுவலர்கள் 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க உத்தரவு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 21:00 (IST) 11 May 2021
    மாரடைப்பு காரணமாக நடிகர் நெல்லை சிவா மரணம்

    கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலுவின் கெணத்த காணோம் காமெடி மூலம் புகழ்பெற்ற நடிகர் நெல்லை சிவா மாரணடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் நெல்லை சிவா



  • 20:22 (IST) 11 May 2021
    தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 29272 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 14,38,509ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 298 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிககை 16,178 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 7,466 பேருக்கு கொரோனா பாதிப்பு - 92 பேர் பலி



  • 19:03 (IST) 11 May 2021
    7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை .முதல்வர் ஆலோசனை

    சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.



  • 19:02 (IST) 11 May 2021
    தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்காக தொலைபேசி வழி உதவி சேவை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்காக தொலைபேசி வழி உதவி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 99629 93497, 99943 39191 ஆகிய எண்ணையும் covidsupport@investtn.in என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 17:42 (IST) 11 May 2021
    ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்

    ரேஷன் கடைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும், ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.



  • 16:50 (IST) 11 May 2021
    கொரோனா பரவலில் தமிழகம் 3ஆம் இடம்

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில், கொரோனா பரவலில் தமிழகம் 3ஆம் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 16:48 (IST) 11 May 2021
    மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

    மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.



  • 16:01 (IST) 11 May 2021
    பள்ளிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    தமிழகத்தில் பள்ளிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆய்வு செய்த பின், இந்த பள்ளியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை தான் போடப்பட்டுள்ளது கட்டடத்தை சீரமைக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • 15:13 (IST) 11 May 2021
    கொரோனாவை தடுக்க கட்சி பாகுபாடின்றி எம்எல்ஏக்கள் பணியாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

    கட்சி பாகுபாடின்றி எம்எல்ஏக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் நோய்தொற்றை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் எனவும் எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை நெருக்கடி இருந்தால் உடனே அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கொரோனாவில் இருந்து தமிழகத்தை காக்க கட்சிகளை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுவோம் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்



  • 14:49 (IST) 11 May 2021
    அரசு விழாக்களில் என் புத்தகங்களை பரிசாக அளிக்க வேண்டாம் - இறையன்பு வேண்டுகோள்

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் வாங்கப்படும் புத்தகங்களில், தனது புத்தகங்களை தவிர்க்குமாறு தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 14:44 (IST) 11 May 2021
    பிரதமர் மோடியை கடுமையாக விமர்ச்சித்த ராகுல் காந்தி...!

    "நதிகளில் எண்ணெற்ற உடல்கள் அடித்துச் செல்லப்படுகின்றது. மருத்துவமனைகளில் மைல் கணக்கில் வரிசை நீண்டுள்ளது.வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளை பிரதமர் மோடி தனது இளஞ்சிவப்பு நிறக் கண்ணாடியை எடுத்துவிட்டு பார்க்க வேண்டும். அப்போதுதான் புதிய நாடாளுமன்ற விஸ்டா கட்டடத்தை தவிர மற்ற காட்சிகளும் கண்களுக்கு புலப்படும்!” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



  • 14:40 (IST) 11 May 2021
    திமுக எம்எல்ஏக்கள் உளமாற, அதிமுக எம்எல்ஏக்கள் கடவுள் அறிய என கூறி பதவியேற்பு

    16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். அப்போது திமுக எம்எல்ஏக்கள் உளமாற என்று கூறியும், அதிமுக எம்எல்ஏக்கள் கடவுள் அறிய என்று கூறியும் பதவியேற்றுக் கொண்டனர்



  • 13:56 (IST) 11 May 2021
    ”மாட்டுச் சாணம் பூசுவதால் எந்த பலனும் இல்லை” - டாக்டர் ஜே.ஏ.ஜெயலால்

    கொரோனவைத் தடுக்க மாட்டுச் சாணம் பூசுவதால் எந்த பலனும் இல்லை என இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் தெரிவித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த சிலர் மாட்டுச் சாணத்தை பூசியதையடுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.



  • 13:32 (IST) 11 May 2021
    விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

    மாநகராட்சியின் விதியை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அனுமதியில்லா கட்டுமானங்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • 12:42 (IST) 11 May 2021
    புதுச்சேரியில் புதிதாக 2,049 பேருக்கு கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் புதிதாக 2,049 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75,024 ஆகவும், பலி எண்ணிக்கை 1,018 ஆகவும் அதிகரித்துள்ளது.



  • 12:17 (IST) 11 May 2021
    சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு தேர்வு

    தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் தேர்வானார்.



  • 11:52 (IST) 11 May 2021
    இந்தியன்-2 தாமதத்திற்கு லைகாவே காரணம்- ஷங்கர்

    இந்தியன் - 2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைக்காவே காரணம் என உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. கமலுக்கு மேக்-அப் அலர்ஜி, கிரேன் விபத்து, கொரோனா ஊரடங்காலும் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு தான் பொறுப்பல்ல என்றும் ஷங்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



  • 11:42 (IST) 11 May 2021
    இந்தியாவுக்கு ட்விட்டர் நிறுவனம் 15 மில்லியன் டாலர் நிதி

    இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலரை ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.



  • 11:33 (IST) 11 May 2021
    எம்எல்ஏக்களுக்கு கமல் வாழ்த்து

    சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்ட அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார். மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதல் கடமையாக கருதி செயலாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



  • 11:05 (IST) 11 May 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 3,29,942 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3.56 லட்சம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.



  • 10:58 (IST) 11 May 2021
    எம்எல்ஏவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பதவியேற்பு

    தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக்கொண்டார்.



  • 10:37 (IST) 11 May 2021
    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்; ஸ்டாலின் பதவியேற்பு!

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.



  • 10:33 (IST) 11 May 2021
    மதுரை ஆவினில் 13.78 கோடி முறைகேடு!

    மதுரை ஆவினில் 13.78 கோடி முறைகேடு நடந்துள்ளதை அடுத்து, 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



  • 10:28 (IST) 11 May 2021
    சபாநாயகர் பதவிக்கு அப்பாவு வேட்புமணு தாக்கல்!

    சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு திமுக வின் மூத்த எம்.எல்.ஏ. அப்பாவு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார்.



  • 10:25 (IST) 11 May 2021
    அரசு மருத்துவமனைகளில் மூன்று வேளை இலவச உணவு!

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



  • 10:23 (IST) 11 May 2021
    மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

    தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு, தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



  • 10:12 (IST) 11 May 2021
    எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

    16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.



  • 10:11 (IST) 11 May 2021
    சட்டப்பேரவை கூட்டம்; முதலமைச்சர் ஸ்டாலின் வருகை!

    இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதை அடுத்து, சட்டப்பேரவை நடைபெறும் கலைவாணர் அரங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.



  • 10:09 (IST) 11 May 2021
    இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா!

    இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment