Advertisment

திருவண்ணாமலை கிரிவலத்தில் ஸ்டாலின் மகள் : வெளியானது சர்ச்சை புகைப்படம்

தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருவண்ணாமலை கிரிவலத்தில் ஸ்டாலின் மகள் : வெளியானது சர்ச்சை புகைப்படம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த வாரம் முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்ல தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பகலில் வெளியில் சென்றாலும் முககவசம் அணிய வெண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கொரோனா தொற்று மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 26-ந் தேதி முதல் கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) சித்ரா பவுர்ணமி தினத்தற்னு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் கிரிவலம செல்லவும் தடை விதிக்கப்படுவதாக  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் அறிவித்திருந்த்தால், திருவண்ணாமலை கிரிவல பாதையில் நேற்று முன்தினம் கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பிட்டனர்.

ஆனால் கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சென்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகனும், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான எ.வ.கம்பன் மற்றும் அவருடன் 2 பெண்கள் கிரிவலம் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் கம்பன் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பெண்களில் ஒருவர் முககவசம் அணியவில்லை என்றும் முககவசம் அணிந்த பெண்தான் ஸ்டாலினின் மகள் செந்தாமரை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  சித்ரா பவுர்ணமி நாளில் வேண்ய அனைத்தும் நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவில் சிறப்பு வழிபாடு செய்து வரும் நிலையில், ஸ்டாலின் மகள் செந்தாமரை திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுள்ளார்.

மேலும் சித்ரா பவுர்ணமி நாளில், அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற சித்ர குப்தனுக்கான  சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில், பக்தர்களுக்கு கோவில்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் மகள் கிரிவலம் சென்றது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment