'எனக்கு ஒரு மெயில் வந்திருக்கு; சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!' - கமல்ஹாசனை கலாய்த்த தமிழிசை!

கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கு எல்லாம் அழைப்பு அனுப்புகிறார் கமல்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் தன்னையும் இணைத்து, உறுப்பினர் எண் கூட அனுப்பி இருக்கிறார்கள் என்று கமல்ஹாசனை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கிண்டல் செய்துள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய தமிழிசை, “நடிகர் கமல்ஹாசன் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கிறார். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் பாஜக தலைவரான என்னையே உறுப்பினராக இணைத்து எனக்கு மெயில் வந்துள்ளது.

‘நான் நாம் ஆனோம்’, இன்றிலிருந்து நீங்கள் எங்கள் கட்சியில் உறுப்பினர் என எனக்கு இ- மெயில் வந்தது. கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கு எல்லாம் அழைப்பு அனுப்புகிறார் கமல். மக்கள் நீதி மய்யம் கட்சி இணையதளம் மூலம் என்னை இணைத்துள்ளதாக மின்னஞ்சல் வந்தது நகைப்புக்குரியதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மக்கள் நீதிமய்யம், செல்போன் எண்ணுடன் கட்சியில் பதிவு செய்தால் மட்டுமே இ-மெயில் வரும், கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை, இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பப்படும் என தமிழிசைக்கு மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close