மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது : தமிழிசை

முக ஸ்டாலின் அதிமுக-வை எதிர்ப்பதைக் காட்டிலும் பாஜக-வையே அதிகமாக எதிர்க்கிறார்.

மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை பாஜக இயக்கிவருவதாக திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கூறி வருகிறார். அவரது அந்த கருத்தானது அடிப்படை ஆதாரமற்றது. அவர் அதிமுக-வை எதிர்ப்பதைக் காட்டிலும் பாஜக-வையே அதிகமாக எதிர்க்கிறார்.

இதுவரை அவர் எதிர்க்கட்சி தலைவராக சரியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு மட்டுமே செய்யும் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் அவ்வாறு செயல்படாமல் சரியான எதிர்க்கட்சி தலைவராக நடந்து கொள்ள வேண்டும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என விரும்புகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை அதிமுக-தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என்று கூறினார்.

×Close
×Close