Advertisment

ஐ.பி.எஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்: மதுரை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
34 ஐ.ஏ.எஸ், 27 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு; 45 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் கமிஷ்னர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இது தொடர்பான உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

சென்னை சிவில் சப்ளை காவல்துறை இயக்குனர் ஜெனராலாக இருந்த ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி சென்னை சிவில் பாதுகாப்பு மற்றும் ஹோம்கார்டு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கூடுதல் டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன்சென்னை ஏடிஜிபி நிர்வாக பிரிவில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியம்மாள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், செந்தில்குமார் சென்னை டிஜிபி அலுவலக டிஜிபியாகவும், பிரபாகரன் சென்னை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐஜியாகவும், முத்துச்சாமி வேலூர் மாவட்ட டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடலோர பாதுகாப்பு டிஐஜியாக கயல்விழி, சென்னை தொழில்நுட்ப சேவைத்துறை டிஐஜியாக சின்னச்சாமி, சென்னை நீதிமன்ற பாதுகாப்பு துணை கமிஷ்னராக ராஜராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்.  

நீலகிரி மாவட்ட எஸ்பியாக பிரபாகரன், தர்மபுரி மாவட்ட எஸ்பியாக ஸ்டீபன் ஜேசுபாதம், சேலம் எஸ்பியாக சிவக்குமார், தஞ்சாவூர் எஸ்பியாக முத்தரசி, சென்னை சிஐடி குற்றப்பிரிவு எஸ்பியாக ரவளிபிரியா, போக்குவரத்து துணை கமிஷ்னராக ஜெயலட்சுமி,

சென்னை சட்டம் ஒழுங்கு டிஐஜியாக உமா, நாமக்கல் எஸ்பியாக கலைச்செல்வன், சென்னை சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக அருள் அரசு, தென்காசி எஸ்பியாக செந்தில் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Ips Officers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment