கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற போதை மாத்திரை கும்பலை சேர்ந்த 4 பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் போதை பொருட்களை தடுக்கும் வகையில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள கழிவுநீர் பண்ணை பகுதியில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அப்பகுதிக்கு விரைந்த சென்ற காவல்துறையினர் அங்கு இருந்த நான்கு பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள் அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நவாஸ், தாரிக், கார்த்திகேயன், அய்யனார் – என்பதும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதை அடுத்து பெரிய கடை வீதி போலீசார் அந்த நான்கு பேரையும் கைது செய்து அவரிடம் இருந்த 150 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே நாளில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக நான்கு பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“