Advertisment

TN Agri Budget 2021 : விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது - கமல்ஹாசன் ட்வீட்

Tamil Nadu Agriculture Budget 2021: தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 5 Shooting spot viral photos Tamil News

Bigg Boss Tamil 5 Shooting spot viral photos Tamil News

TN AgTamil Nadu Agriculture Budget 2021-22 : தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 13/08/2021 அன்று தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை பி.டி.ஆர். தாக்கல் செய்த நிலையில் இன்று  தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அது தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் நீங்கள் இந்த செய்தி தொகுப்பில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

Advertisment

TN Agri Budget 2021 : மாநில மரத்தை காக்க புதிய அறிவிப்புகள்; பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்

பெட்ரோல் விலை குறைப்பு

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.02 குறைந்து ரூ 99.47 ஆகவும், டீசல் விலையில் கடந்த 31 நாட்களாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மொத்த மின்உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பாடத்திட்டம் குறைப்பு

தமிழ்நாட்டில் 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்கள் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 19:19 (IST) 14 Aug 2021
    சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது

    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கினார்



  • 19:17 (IST) 14 Aug 2021
    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மீண்டும் சதம்

    இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் 200 பந்துகளில் தனது 22வது சதத்தை பதிவு செய்துள்ளார். மேலும் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் ஜோ ரூட சதமடித்தது குறிப்பிடத்தக்கது.



  • 18:40 (IST) 14 Aug 2021
    ஒலிம்பிக் வீரர்களுக்கு தேநீர் விருந்து

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஷ்டிரபதி பவனில் தேநீர் விருந்து அளித்தார்



  • 17:16 (IST) 14 Aug 2021
    விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது - கமல்ஹாசன் ட்வீட்

    விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்புக்கு உரியது. வேளான் பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பப்வை நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.



  • 17:07 (IST) 14 Aug 2021
    காவல்துறையில் 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் அறிவிப்பு

    தமிழக காவல்துறையில் 15 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபி அமரேஷ் புஜாரி, அமல்ராஜ், விமலா, நாவுக்கரசன், உள்ளிட்ட 15 அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.



  • 16:51 (IST) 14 Aug 2021
    மதுரை ஆதீனம் உடலுக்கு இறுதி சடங்கு

    மதுரை ஆதீனம் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதி சடங்கில் ஏராளமான ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.



  • 16:07 (IST) 14 Aug 2021
    தூத்துக்குடி, சேலம், அரியலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தூத்துக்குடி, சேலம், அரியலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கினார்



  • 15:41 (IST) 14 Aug 2021
    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது பொய் வழக்கு- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என்மீது பொய் வழக்கு போட்டு சோதனை நடத்தினார்கள், வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.



  • 15:40 (IST) 14 Aug 2021
    100 நாட்களாக நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை

    திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது, நேர்மையான அதிகாரிகளை நியமித்து, 100 நாட்களாக நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • 15:18 (IST) 14 Aug 2021
    காபூலை நெருங்கும் தலிபான்கள்; ரகசிய ஆவணங்களை அழித்து விடுங்கள்: தூதரக ஊழியர்களுக்கு அமெரிக்கா உத்தரவு

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரமும் தலிபான்கள் வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காபூல் நகரின் எல்லை வரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதனால் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களிடம் உள்ள ரகசிய ஆவணங்களை உடனடியாக அழித்து விடுவிட்டு, பொருட்களுடன் அமெரிக்கா திரும்புமாறும் உத்தரவிட்டுள்ளது.



  • 15:14 (IST) 14 Aug 2021
    பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் நடிகை மீரா மிதுன் கைது

    பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைதான மீரா மிதுனை சென்னை அழைத்து வருகிறது சைபர் கிரைம் போலீஸ்



  • 15:01 (IST) 14 Aug 2021
    அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பணி நியமனம்: மார்க்சிஸ்ட் வரவேற்பு!

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி ஆணையை முதலமச்சர் முக. ஸ்டாலின் வழங்கி இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 14:52 (IST) 14 Aug 2021
    பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் நடிகை மீரா மிதுன் கைது

    பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைதான மீரா மிதுனை சென்னை அழைத்து வருகிறது சைபர் கிரைம் போலீஸ்



  • 14:48 (IST) 14 Aug 2021
    சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா: நாளை போக்குவரத்து மாற்றம்!

    சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு 15-ஆம் தேதி காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படவுள்ளது.



  • 14:33 (IST) 14 Aug 2021
    “புகழேந்தி தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யுங்கள்” - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் நீதிமன்றத்தில் மனு!

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.



  • 14:08 (IST) 14 Aug 2021
    டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி!

    ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.



  • 13:54 (IST) 14 Aug 2021
    வேளாண் பட்ஜெட்: கிருஷ்ணகிரியில் அமைகிறது ரூ.10 கோடியில் புதிதாக தோட்டக்கலைக் கல்லூரி!

    தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    நாகப்பட்டினம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் தொழில் கற்கும் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் 100 ஏக்கரில் அமைக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:17 (IST) 14 Aug 2021
    கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

    தமிழகத்தின் முதல் வேளாண் தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.



  • 12:53 (IST) 14 Aug 2021
    100 நாட்களில் ஏராளமான சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது

    திமுக அரசு ஆட்சி அமைத்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தற்போது, சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்வோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்த 100 நாட்களில் ஏராளமான சாதனைகளை இந்த அரசு செய்துள்ளது. இழந்த பெருமைகளை மீட்க நம்மால் முடியும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது.



  • 12:29 (IST) 14 Aug 2021
    வாடகை வேளாண் இயந்திரங்கள் முன்பதிவு

    வட்டார அளவில் விவசாயத்திற்கு தேவையான வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய செயலி, இணையதளம் ஆகியவற்றை உருவாக்கி அதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்க 185 டிராக்டர்கள், 185 ரோட்டரேட்டர்கள், 4 மருந்து ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்



  • 12:29 (IST) 14 Aug 2021
    வாடகை வேளாண் இயந்திரங்கள் முன்பதிவு

    வட்டார அளவில் விவசாயத்திற்கு தேவையான வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய செயலி, இணையதளம் ஆகியவற்றை உருவாக்கி அதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வேளாண் இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்க 185 டிராக்டர்கள், 185 ரோட்டரேட்டர்கள், 4 மருந்து ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்



  • 12:10 (IST) 14 Aug 2021
    சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்

    சோலார் பவர் மூலம் இயங்கும் பம்பு செட்டுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டில் 10Hp கொண்ட 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும். இதற்கு ரூ. 114 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.



  • 12:08 (IST) 14 Aug 2021
    நீலகிரியில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை

    நீலகிரி மாவட்டம் எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கப்பட்டு அம்மாவட்டத்தில் விளைவிக்கப்படும் அனைத்து காய்கறிகளும் சந்தைப்படுத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 12:05 (IST) 14 Aug 2021
    நெல் ஆதார விலை அதிகரிப்பு

    நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலை சன்ன ரகத்திற்கு ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தி கொள்முதல் செய்யப்படும்.



  • 12:05 (IST) 14 Aug 2021
    கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்

    கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.150 வீதம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தபடும். இதன்மூலம் கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.2900 வீதம் விலையாக பெறுவர்.



  • 12:03 (IST) 14 Aug 2021
    நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும்

    சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகரங்களில் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும். முதற்கட்டமாக 30 காய்கறி அங்காடிகளை அமைக்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், உழவர் சந்தை விலையிலேயே அங்கும் காய்கறிகள் விற்கப்படும்.



  • 12:00 (IST) 14 Aug 2021
    நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம்

    மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் ரூ. 3 கோடி செலவில் அமைக்கப்படும் என்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ள்ளார்.



  • 11:47 (IST) 14 Aug 2021
    ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்

    அகில இந்திய அளவில் மஞ்சள் உற்பத்தில் சிறந்து விளங்கும் ஈரோட்டில், பவானி சாகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.



  • 11:46 (IST) 14 Aug 2021
    வேளாண் அருங்காட்சியகம்

    வேளாண்மையின் பெருமையை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.



  • 11:40 (IST) 14 Aug 2021
    தோட்டக்கலை கல்லூரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை கல்லூரி ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டு கட்டுமான பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:40 (IST) 14 Aug 2021
    கீரை சாகுபடி

    அனைத்து மாவட்டங்களிலும் 1000 ஹெக்டேர் பரப்பில் கீரை சாகுபாடி உற்பத்தி செய்ய ரூ. 95 கோடி நிதி ஒதுக்கீடு



  • 11:39 (IST) 14 Aug 2021
    பயிர் காப்பீடு திட்டம்

    பயிர் காப்பீடு திட்டத்தில் 2வது தவணையாக ரூ. 1,248.98 கோடி விரைவில் வெளியிடப்படும்



  • 11:30 (IST) 14 Aug 2021
    அண்ணா பண்ணை மேம்பாடு - ரூ.21.80 கோடி நிதி

    அண்ணா பண்ணை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.21.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 ஏக்கர் பரப்பளவில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே செயல்படும் அண்ணா பண்ணை, அண்ணா பன்முக வேளாண் செயல்விளக்க விதைப் பண்ணையாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:27 (IST) 14 Aug 2021
    20 ஆயிரம் ஹெக்டேரில் சொட்டுநீர் பாசன முறை

    நீர் பற்றாக்குறையை போக்க நடப்பாண்டில் சொட்டுநீர் பாசன முறை 20 ஆயிரம் ஹெக்டேரில் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 11:22 (IST) 14 Aug 2021
    உழவர் சந்தையை மேம்படுத்த ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு

    50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • 11:20 (IST) 14 Aug 2021
    எண்ணெய் வித்துக்கள் திட்டம் - ரூ.25.13 கோடி நிதி

    எண்ணெய் வித்துக்கள் திட்டத்திற்கு ரூ.25.13கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:17 (IST) 14 Aug 2021
    தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும்

    டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும் எனவும் பட்டுக்கோட்டையில் தென்னை வளர்ச்சி வாரிய துணை மண்டல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



  • 11:10 (IST) 14 Aug 2021
    சிறுதானிய இயக்கம் - ரூ.12.44 கோடி நிதி

    சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.12.44கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி பழங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களை பதப்படுத்த மையம் அமைக்கப்படும் என்றும் குறுதானிய அரிசியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து மாநகரங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:07 (IST) 14 Aug 2021
    சிறுதானிய இயக்கம்

    மழை குறைவான பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி பயிற்சி, சந்தைப்படுத்த வசதிகள் செய்யப்படும். கடலூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சிறுதானிய இயக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:05 (IST) 14 Aug 2021
    விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள்

    அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைக்க விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:04 (IST) 14 Aug 2021
    உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு

    உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.



  • 11:03 (IST) 14 Aug 2021
    பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை

    பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் எனவும் வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.



  • 11:01 (IST) 14 Aug 2021
    பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி

    கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:57 (IST) 14 Aug 2021
    நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

    ஒரு குவிண்டால் சன்னரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70லிருந்து ரூ.100ஆக உயர்த்தப்படும் என்றும் சாதாரண ரகத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.50லிருந்து ரூ.75ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060, சாதாரண ரகம் ரூ.2,015க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு



  • 10:56 (IST) 14 Aug 2021
    நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

    ஒரு குவிண்டால் சன்னரகத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.70லிருந்து ரூ.100ஆக உயர்த்தப்படும் என்றும் சாதாரண ரகத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.50லிருந்து ரூ.75ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு குவிண்டால் நெல் சன்னரகம் ரூ.2,060, சாதாரண ரகம் ரூ.2,015க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு



  • 10:52 (IST) 14 Aug 2021
    வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி

    வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு



  • 10:51 (IST) 14 Aug 2021
    மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்- ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு

    முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்புக்கு 100 ஹெக்டேர் வீதம் நிலங்கள் கண்டறியப்பட்டு பண்ணை குட்டைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு



  • 10:50 (IST) 14 Aug 2021
    மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்- ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு

    முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்புக்கு 100 ஹெக்டேர் வீதம் நிலங்கள் கண்டறியப்பட்டு பண்ணை குட்டைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு



  • 10:49 (IST) 14 Aug 2021
    இயற்கை வேளாண்மை - ரூ.33.03 கோடி நிதி

    இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:48 (IST) 14 Aug 2021
    மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்

    மரபு சார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஒன்றான பள்ளுவகை இலக்கியத்தில் ஏராளமான நெல் பெயர்கள் காணப்படுகின்றன.

    திருவள்ளூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் மரபு சார் விதை நெல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:46 (IST) 14 Aug 2021
    மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்

    மரபு சார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஒன்றான பள்ளுவகை இலக்கியத்தில் ஏராளமான நெல் பெயர்கள் காணப்படுகின்றன.

    திருவள்ளூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் மரபு சார் விதை நெல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:43 (IST) 14 Aug 2021
    கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

    2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:41 (IST) 14 Aug 2021
    பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,327கோடி ஒதுக்கீடு

    2021-22 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:39 (IST) 14 Aug 2021
    இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு

    வேளாண்மைத்துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு உருவாக்கப்படும் என வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 10:34 (IST) 14 Aug 2021
    கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்

    நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் அமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 10:31 (IST) 14 Aug 2021
    பனை உற்பத்தியை பெருக்க திட்டம்

    பனை மரத்தின் பரப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனங்கன்றுகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:30 (IST) 14 Aug 2021
    உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு

    உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.



  • 10:22 (IST) 14 Aug 2021
    இருபோக சாகுபடி நிலங்கள் 20 லட்சம் ஹெக்டேராக உயர்வு

    இருபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:19 (IST) 14 Aug 2021
    சாகுபடி பரப்பை 75% ஆக உயர்த்த நடவடிக்கை

    தமிழகத்தில் தரிசு நிலங்களில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டர் பரப்பில் பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பான 60விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:14 (IST) 14 Aug 2021
    சாகுபடி குறைந்து வருகிறது

    விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகள் ஆவதால் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது என வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.



  • 10:05 (IST) 14 Aug 2021
    வேளாண் பட்ஜெட் தாக்கல்

    தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் இ- பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார்.



  • 09:59 (IST) 14 Aug 2021
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - 58 பேர் நியமனம்

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.



  • 09:55 (IST) 14 Aug 2021
    சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீதான முதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 300 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.



  • 09:52 (IST) 14 Aug 2021
    மதுரை ஆதீனம் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல்

    மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அருணகிரிநாதரின் மறைவு, ஆன்மீகவாதிகளுக்கு பேரிழப்பு என ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.



  • 08:48 (IST) 14 Aug 2021
    வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

    தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.



Tamilnadu Budget 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment