Advertisment

யாருக்கு வெற்றி? ஐகோர்ட் தீர்ப்பு பற்றி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பு பேட்டி

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒபிஎஸ் நீக்கம் செல்லும்

author-image
WebDesk
New Update
EPS OPS

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், இது தொடர்பாக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

அதிமுகவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒற்றை தலைமை யார் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி ஒ.பன்னீர்செல்வம் மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் இந்த தேர்வு செல்லாது என்றும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளவர் என்றும், அதனால் இந்த கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் ஒ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்றும் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.

aiadmk general council case, high court judgement, tamilnadu, what next, eps next move, அதிமுக, ஓபிஎஸ், பொதுக்கு ழுவு வழக்கு தீர்ப்பு, இபிஎஸ் அடுத்த மூவ் என்ன

இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த 2 பேர் கொண்ட நீதிபதிகள் குழு, கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்துள்ளார் .

இந்த தீர்ப்பை இபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனிடையே தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள இபிஎஸ் தரப்பின் ஜெயக்குமார் ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்பதால், ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது உறுதி என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சிறப்புமிக்க வரவேற்க்கத்தக்க, அதிமுகவின் ஒன்னறை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இதில் ஜூலை 11-ந் தேதி அன்று கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லும். அதோடு தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது ஆகிய இரண்டையும் வரவேற்கும் விதமாக அனைத்து மாவட்டத்திலும் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Tamil News, Tamil News Today Latest Updates

இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கிகாரத்தை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒற்ற்றை தலைமை என்ற அங்கிகாரத்தையும் வழங்கியுள்ளது என்பது ஒரு வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒபிஎஸ் நீக்கம் செல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஒபிஎஸ் தரப்பில் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ் கூறுகையில், அதிமுகவின் நிர்வாகிகள் பட்டியலை கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதன்படி பார்த்தால் ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர். தேர்தல் ஆணையம் சொல்வதுதான் இறுதி தீர்ப்பு.

தேர்தல் ஆணையம் சொல்வது தான் ஒரு கட்சியை நடத்துவதற்கான வழிமுறை. அந்த ஆணையத்தில் கொடுக்கும் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிடாது. நமக்குள் இருக்கும் பிரச்சினைப்பற்றி பேசுவதற்காகத்தான் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்க தயாராக இல்லை. ஒபிஎஸ் ஆதரவு அளித்ததனால் தான் நான்கறை ஆண்டுகாலம் நீங்கள் முதல்வராக இருந்தீர்கள்.

AIADMK Spokesperson kovai selvaraj, kovai selvaraj, ஒற்றைத் தலைமை வேண்டாம், ஜெயக்குமார் மீது நடவடிக்கை தேவை, ஓ.பி.எஸ் வீட்டில் கோவை செல்வராஜ் பேட்டி, kovai selvaraj says no need single leadership for aiadmk, kovai selvaraj insists action against D Jayakumar

அவருடைய ஆதரவில் தான் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யபட்டீர்கள். தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறீர்கள். 28 ஆண்டு காலம் அம்மா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் இனி யாரும் அமர கூடாது என்றுதான் ஒருங்கினைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் பதவி கொண்டுவரப்பட்டது. 6 ஆண்டு காலம் சென்ற இந்த நிலையை தற்போது கட்சியின் ஒற்றை தலைமை என்று கூறி பிரிவினையை ஏற்படுத்தி விட்டார்கள். அம்மா அமர்ந்த இடத்தில் நீங்கள் அமர பார்க்கிறீகள். இது அம்மாவுக்கு செய்யும் துரோகம் இல்லை.

கட்சியில் 50வது ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் வர உள்ளது அதற்கும் இப்படி பிரச்சினையை கிளப்பி விட்டீர்கள் இந்த இடைக்கால தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருங்கினைப்பாளர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார்கள். அதிமுகயை ஒபிஎஸ் தான் வழி வழத்துவார் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment