கோவையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், ஆர்டிஓ சோதனை சாவடியில் கணக்கில் வராத 3,62,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியை கடந்து நாள்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கனரக சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. க.க சாவடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்டிஓ சோதனை சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு சரக்கு வாகனமும் மாநில எல்லையை கடக்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை க.க சாவடி ஆர்டிஒ சோதனை சாவடியில்,லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து 3,21,000" ரூபாய் கணக்கில் வராத பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரோஸ்லின் என்ற அலுவலக உதவியாளரிடம் இருந்து 38,000ரூபாய் கணக்கில் வராத பணம் பறுமுதல் செய்யப்பட்டது.
சோதனைச் சாவடியில் இருந்த கடிதப் பெட்டியில், 3,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராமல், லஞ்சமாக பெற்ற இந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“