Advertisment

ஜனவரி முதல் சட்டப்பேரவை கேள்வி-நேரம் நேரலையில் ஒளிப்பரப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேர நிகழ்வுகளை நேரடியாக ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Legislative assembly passes resolution against CAA, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம், குடியுரிமை திருத்தச் சட்டம், தமிழ்நாடு சட்டபேரவை, திமுக, முதலமைச்சர் முக ஸ்டாலின், பாஜக வெளிநடப்பு, அதிமுக வெளிநடப்பு, TN assembly passes resolution against CAA, CAA, AIADMK BJP MLAs walkout, CM MK Stalin bring resolution against CAA, BJP MLAs, AIADMK MLAs

Tamilnadu assembly live telecast from January: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேர நிகழ்வுகளை நேரடியாக ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜனவரி 5-ம் தேதி தொடங்கிறது. இதில் கேள்வி நேரங்கள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். கொரோனா காரணமாக 2020 செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், தற்போது மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது.

கடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​வரும் ஜனவரி கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஓராண்டில் 100 நாட்கள் நடக்கும் சட்டசபை நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு என்பது சட்டப் பேரவைக்கு புத்துயிர் அளிப்பதாகும். 1990களில் இருந்து சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தாலும், தென்னிந்தியாவில் இந்த நடைமுறை நடைமுறைப்படுத்தப்படாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

சட்டசபை அரங்கில் தொலைக்காட்சி சேனல்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கேள்வி நேரத்தின் நடவடிக்கைகள் ஜனவரி 5 முதல் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், கூட்டத்தொடரின் கடைசி நாளும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா நிகழ்ச்சிகள் பார்லிமென்டில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுவதால், தமிழ்நாடு திரைப்பட பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் பார்லிமென்ட் மாளிகைக்கு வந்திருந்தனர். கேரளா, டெல்லி, கோவா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற அரங்குகளையும் இந்தக் குழுவினர் பார்வையிட்டனர்.

சட்டமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், இந்த ஒளிபரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பை அதிகரிக்கும். இதுவே தாம் விரும்புவதாகவும், இதன் மூலம் அதிக ஆய்வுகள் மற்றும் தயாரிப்புகளுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வருவார்கள் என்றும், முறையான ஆய்வுகளுக்குப் பின்னரே பதிலளிப்பார்கள் என்றும் முதலமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment