‘மக்கள் தங்கள் உரிமைக்காக போராட எந்த தடையும் இல்லை’: சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

TN Assembly Session  : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதா? அல்லது பங்கேற்பதா? என்பது குறித்துஆலோசனை செய்யப்பட்டது.

TN Assembly Session  : தமிழக சட்டமன்றத்தில்   இன்று (4.6.18) நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில்  மீண்டும் பங்கேற்க திமுக முடிவு செய்துள்ளது.

TN Assembly Session  சென்னை தலைமை செயலகத்தில் இன்று  தமிழக சட்டசபை கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இன்று கூடும் சட்டசபை கூட்டத்திற்காக திமுக பங்கேற்கும் என்று திமுக  செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TN Assembly Sessions LIVE UPDATES உங்களுக்காக:

12:50 PM: தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பலரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என பாராட்டி பேசுகிறார்கள். இது குறித்து இன்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம். ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும்?’ என நகைச்சுவை கலந்து கேள்வி எழுப்பினார்.

12:40 PM : சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுகையில், ‘காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கும் போது கருணாநிதியையும் நினைவுகூற வேண்டும். காவிரி வழக்கில் பல போராட்டங்கள் நடத்தி தீர்வுக்காண முயற்சித்தவர்களில் கருணாநிதியும் முக்கியமானவர்’ என்றார்.

11.30 AM : நேரமில்லா நேரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஆலைக்குக் கொடுத்த அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.

10:40 AM : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு முடிவு எடுத்தாலே போதும்; தீர்மானம் தேவையில்லை. நீட், ஜல்லிக்கட்டு விவகாரத்துக்குத்தான் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்னையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை இல்லை’ என்றார்.

10:30 AM : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்களே தவிர, மக்கள் அல்ல! உருட்டுக்கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா? போராட்டத்தில் ஊடுருவிய விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது’ என்றார்.

10:20 AM : எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தாமிர உருக்காலை தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.

10.00 am :

9.30 AM: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக்கு வருகை.

தமிழகத்தில் மே-29ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 13 பேரை பலிகொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.

பின்னர் பேரவையில் உரையாற்றிய ஸ்டாலின், ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை வெளியிடும் வரை சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்தார்.பின்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில், மாதிரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூன்-2 ஆம் தேதி, ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதா? அல்லது பங்கேற்பதா? என்பது குறித்துஆலோசனை செய்யப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்சட்டபேரவை கூட்டத்தொடரில் வரும் திங்கள் (4.6.18) முதல் மீண்டும் பங்கேற்க திமுக முடிவு செய்தது. மேலும் ஜூன் 5, 8, 12-ல் திமுக நடத்த இருந்த மாதிரி பேரவை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்று, தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழ்நிலைகளை குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளது.

×Close
×Close