Advertisment

TN Assembly Highlights: மீண்டும் நிறைவேறிய நீட் விலக்க மசோதா; இன்றே கவர்னருக்கு அனுப்ப முடிவு

Tamil Nadu Assembly News, Tamil Nadu Assembly LIVE Updates, 08 February 2022-தமிழக சட்டசபையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
TN Assembly Highlights: மீண்டும் நிறைவேறிய நீட் விலக்க மசோதா; இன்றே கவர்னருக்கு அனுப்ப முடிவு

Tamil Nadu Assembly Updates in Tamil: நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதனையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் கிராமப்புறங்களைச் சேர்ந்த தமிழக மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிவதில் சிரமப்படுவதாக கூறி நீட் தேர்வை செய்ய சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் அந்த மசோதா, சமூக நீதிக்கு எதிரான மசோதா எனக் கூறி தமிழக அரசுக்கு மீண்டும்

அனுப்பியது. மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டசபை இன்று கூடியது.

இதுவரை தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டம் கடந்த 10 ஆண்டுகளில் 4 முறை கூடியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்துவது தொடர்பாக எழுந்த அரசியல் சூழ்நிலையில், தமிழக அரசின் உரிமையை நிலை நிறுத்தும் வகையில் சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2013இல் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2017இல் கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது  பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “



  • 13:49 (IST) 08 Feb 2022
    நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு இன்று அனுப்பப்படும் - சபாநாயகர்!

    நீட் விலக்கு சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றபட்டுள்ள நிலையில், மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது என சட்டப்பேரவை சபாநாயகர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.



  • 13:29 (IST) 08 Feb 2022
    முதல்வருக்கு திருமாவளவன் பாராட்டு

    நீட்விலக்கு மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ள தமிழக அரசுக்கும் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சியினருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.



  • 13:11 (IST) 08 Feb 2022
    நீட் தேர்வு பாகுபாட்டை உருவாக்குகிறது: தமிழக முதல்வர்

    அரசியல் சட்டம், பாகுபாடு கூடாது என்கிறது; ஆனால், நீட் தேர்வு பாகுபாட்டை உருவாக்குகிறது என்றார் முதல்வர் ஸ்டாலின்.



  • 13:09 (IST) 08 Feb 2022
    நீட் தேர்வுக்கு விலக்கு: தீர்மானம் மீண்டும் நிறைவேற்றம்

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானம், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது.



  • 13:01 (IST) 08 Feb 2022
    நீட் எனும் பலிபீடம் தேவையா? : மு.க.ஸ்டாலின் கேள்வி

    தகுதி என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களை ஓரங்கட்ட கொண்டு வரப்பட்டதே நீட் தேர்வு. நீட் தேர்வு என்பது ஒரு பலி பீடம், அரியலூர் அனிதா உள்பட பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் சில மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் எனும் பலிபீடம் தேவையா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.



  • 12:54 (IST) 08 Feb 2022
    எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்க: அமைச்சர் துரைமுருகன்

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பேச விடுங்க என்று கூச்சல் எழுப்பிய உறுப்பினர்களிடம் கோரினார் அமைச்சர் துரைமுருகன்.



  • 12:48 (IST) 08 Feb 2022
    மறக்க முடியாத நாள் இது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    16 வயதில் பொதுவாழ்வில் நுழைந்த எனக்கு மறக்க முடியாத நாள் இது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததும் இந்த சட்டமன்றம் தான். ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வைத்ததும் இந்த சட்டமன்றம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



  • 12:43 (IST) 08 Feb 2022
    நீட் விவகாரத்தில் ஆதரவு: எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

    நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்றார் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.



  • 12:40 (IST) 08 Feb 2022
    நீட் தேர்வுக்கு எதிரான முடிவையும் எடுக்க முடியும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஜனநாயகம் காக்க, கல்வி உரிமையை வென்றெடுக்க, கூட்டாட்சி தத்துவம் காக்க நாம் இன்று கூடி உள்ளோம். பல சாதனைகளை செய்த இந்த சட்டமன்றத்தால் நீட் தேர்வுக்கு எதிரான முடிவையும் எடுக்க முடியும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



  • 12:26 (IST) 08 Feb 2022
    அதிமுக மீது தொடர்ந்து அவதூறு : எடப்பாடி பழனிசாமி

    நீட் விவகாரத்தில் வரலாற்றை மறைத்துவிட்டு யாரும் பேசக் கூடாது. நீட் விவகாரத்தில் அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டது என்றார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.



  • 12:23 (IST) 08 Feb 2022
    ஒத்துழைப்பு தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

    அதிமுக அரசின் சட்ட முன் வடிவை குடியரசு தலைவர் நிராகரித்து ஓராண்டாகியும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.



  • 12:20 (IST) 08 Feb 2022
    பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்: முன்னாள் அமைச்சர்

    அதிமுக யாருக்கோ அடிபணிந்து விட்டது என்ற கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



  • 12:15 (IST) 08 Feb 2022
    நீட் விலக்கு மசோதா: முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

    அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்? என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.



  • 12:10 (IST) 08 Feb 2022
    7.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தியது அதிமுக: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

    அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தியது அதிமுக. பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக நாம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை 2-வது முறையாக நிறைவேற்றி உள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



  • 12:05 (IST) 08 Feb 2022
    நுழைவுத் தேர்வே கூடாது: விசிக எம்எல்ஏ பாலாஜி

    நீட் தேர்வு வேண்டாம் என்பதல்ல, நுழைவுத் தேர்வே கூடாது என்பதுதான் தமிழக மக்களின் நிலைபாடு என்று ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்து பேரவையில் விசிக எம்எல்ஏ பாலாஜி பேசினார்.



  • 12:04 (IST) 08 Feb 2022
    தமிழக முதல்வரை நெருங்கவே முடியாது: எம்எல்ஏ செல்வப்பெருந்தகை

    சமூக நீதிக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் எத்தனையோ முதல்வரை பார்த்திருக்கலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஹை வோல்டேஜ் முதலமைச்சர். அவரை நீங்கள் நெருங்கவே முடியாது என்று எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.



  • 12:04 (IST) 08 Feb 2022
    தமிழக முதல்வரை நெருங்கவே முடியாது: எம்எல்ஏ செல்வப்பெருந்தகை

    சமூக நீதிக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் எத்தனையோ முதல்வரை பார்த்திருக்கலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஹை வோல்டேஜ் முதலமைச்சர். அவரை நீங்கள் நெருங்கவே முடியாது என்று எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.



  • 11:50 (IST) 08 Feb 2022
    வெளிநடப்பு செய்தது ஏன்: பாஜக எம்எல்ஏ விளக்கம்

    அரசியல் செய்வதற்காக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.



  • 11:40 (IST) 08 Feb 2022
    ஆளுநர் சரியாகவே முடிவெடுத்திருக்கிறார்: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

    சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியபோது, நீதிமன்றத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும் ஆளுநர் சரியாகவே முடிவெடுத்திருக்கிறார் என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.



  • 11:33 (IST) 08 Feb 2022
    நீட் தேர்வு என்ற வெந்நீரை மத்திய அரசு ஊற்றுகிறது: எம்எல்ஏ ராமச்சந்திரன்

    சமூக நீதி என்ற ஆணிவேரில் நீட் தேர்வு என்ற வெந்நீரை மத்திய அரசு ஊற்றுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் தெரிவித்தார்.



  • 11:28 (IST) 08 Feb 2022
    அன்று தீட்டு... இன்று நீட்: எம்எல்ஏ ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

    தீட்டு என்று சொல்லி, அன்று ஒதுக்கி வைத்தார்கள்.. இன்று நீட் என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள்! என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார்.



  • 11:22 (IST) 08 Feb 2022
    இந்தியாவில் ஆளுநர்கள் தேவையில்லை: எம்எல்ஏ

    இந்தியாவில் ஆளுநர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த வேண்டும் என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்தார்.



  • 11:19 (IST) 08 Feb 2022
    குறை கூறுவது சரியல்ல: அமைச்சர்

    கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உயரிய கண்ணோட்டத்தொடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல; உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல! என்று நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.



  • 11:08 (IST) 08 Feb 2022
    ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாகவே கருத்தப்படும்-அமைச்சர் துரைமுருகன்

    “தற்போது நீங்கள் வெளியே போய் விட்டாலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாகவே கருத்தப்படும்!” என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு துரைமுருகன் பதிலளித்தார்.



  • 11:07 (IST) 08 Feb 2022
    அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும் - எம்எல்ஏ வேல்முருகன்

    ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். அரியலூர் அனிதா தொடங்கி 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். ஏழை மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்தார்.



  • 11:03 (IST) 08 Feb 2022
    பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு

    தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



  • 10:55 (IST) 08 Feb 2022
    இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ

    7.5% இட ஒதுக்கீட்டை 15% ஆக உயர்த்த வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி கோரிக்கை விடுத்தார்.



  • 10:51 (IST) 08 Feb 2022
    அறிமுக காலத்தில் இருந்தே எதிர்ப்பு: அமைச்சர்

    நீட் தேர்வை அறிமுக காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது என்றார் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.



  • 10:51 (IST) 08 Feb 2022
    அறிமுக காலத்தில் இருந்தே எதிர்ப்பு: அமைச்சர்

    நீட் தேர்வை அறிமுக காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது என்றார் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.



  • 10:47 (IST) 08 Feb 2022
    மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற உத்தரவை ஆளுநர் சுட்டிக்காட்டுவது சரியான நடைமுறையல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.



  • 10:47 (IST) 08 Feb 2022
    மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற உத்தரவை ஆளுநர் சுட்டிக்காட்டுவது சரியான நடைமுறையல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.



  • 10:36 (IST) 08 Feb 2022
    நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளது: அமைச்சர்

    12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால் பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.



  • 10:34 (IST) 08 Feb 2022
    "உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது!"

    "ஆளுநரின் கருத்து, உயர்மட்டக் குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது!" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.



  • 10:33 (IST) 08 Feb 2022
    "சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவல்ல!"

    நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தன்னிச்சையாக ஆளுநர் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவல்ல!" என்றார்.



  • 10:28 (IST) 08 Feb 2022
    விரைவில் என்பதல் பொருள் இதுதானா - சபாநாயகர் கேள்வி

    ''இயன்ற அளவில் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால், 142 நாட்கள் கழித்து மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதல் பொருள் இதுதானா?'' என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 10:25 (IST) 08 Feb 2022
    சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி - சபாநாயகர்

    அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ள சபாநாயகர் அப்பாவு நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



  • 10:24 (IST) 08 Feb 2022
    ஆளுநர் ஒருதலைபட்சமாக அணுகியுள்ளார்: சபாநாயகர்

    நீட் தேர்வு மாணவர்களுக்கு உரிய தகுதிக்கு அங்கீகாரம் இல்லை என்றும் உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆளுநர் ஒருதலைபட்சமாக அணுகியுள்ளார் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.



  • 10:23 (IST) 08 Feb 2022
    நீட் தேர்வு விலக்கு மசோதா: சுகாதாரத் துறை அமைச்சர் தாக்கல்

    நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.



Tamil Nadu Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment