scorecardresearch

அண்ணாமலை திடீர் இலங்கை பயணம்: தமிழர் தலைவர்களை சந்திக்கிறார்

3 நாள் பயணத்தின்போது இலங்கைத் தமிழர்களை சந்தித்து அவர்களின் நிலையை கேட்டறியவுள்ளார்

அண்ணாமலை திடீர் இலங்கை பயணம்: தமிழர் தலைவர்களை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழல்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சென்றுள்ளார். 3 நாள் பயணத்தின்போது இலங்கைத் தமிழர்களை சந்தித்து அவர்களின் நிலையை கேட்டறியவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பயணத்தில் இலங்கைத் தமிழ் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

சகோதரர் மகிந்த ராஜபக்சே-வை பிரதமர் பதவியிலிருந்து நீக்க இலங்கை அதிபர் ஒப்புதல்

முன்னதாக, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவுவதற்காக தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu bjp president annamalai went to srilanka suddenly

Best of Express