Advertisment

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்

Tamil Nadu Budget 2019-20 Live Updates: 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu Budget 2019, தமிழக பட்ஜெட் 2019

Tamilnadu Budget 2019, தமிழக பட்ஜெட் 2019

Tamil Nadu Budget 2019 Live Updates: 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

இந்த பட்ஜெட்டின் ஹைலைட்ஸ் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் 2 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி, 8 ஆம் தேதி முதலமைச்சர் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில், 2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Tamil Nadu State Budget 2019 Live Updates : தமிழக பட்ஜெட் 2019

துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அவர் 9வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிதார்.

வழக்கமான பட்ஜெட் போல் இல்லாமல், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றதைப் போல் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், வரிச் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை முடித்தபிறகு, இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது.

3: 30 PM : தமிழக பட்ஜெட் : பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

தமிழக பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க சில திட்டங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை ஏமாற்றம் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

3: 00 PM : தமிழக பட்ஜெட் : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் மரியாதை

பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஓ.பி.எஸ்

2: 30 PM : தமிழக பட்ஜெட் : முத்தரசன் கருத்து

தமிழக நிதிநிலை அறிக்கை ஒரு பூஜ்யம், தமிழக அரசு கேட்ட எந்த நிதியையும் மத்திய அரசு தரவில்லை, அதை மாநில அரசும் கண்டிக்கவில்லை : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

2: 15 PM : தமிழக பட்ஜெட் : திருமாவளவன் கருத்து

அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமான பட்ஜெட், பட்ஜெட் குறித்து விவாதிக்க கூடுதலாக அவகாசம் கொடுக்க வேண்டும் :  விசிக தலைவர் திருமாவளவன்

2: 00 PM : தமிழக பட்ஜெட் : அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

மாநில வளர்ச்சி 10% உயர்ந்துள்ளது, வருவாய் பற்றாக்குறை ரூ.5 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. ஸ்டாலின் சொன்னது போல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, எல்லோருக்கும் பயன்தரும் நாட்டு சுரைக்காய் : அமைச்சர் ஜெயக்குமார்.

1: 43 PM : தமிழக பட்ஜெட் : மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை

“பள்ளிக் கல்வித்துறைக்கு 28,757.62 கோடி ரூபாயும், உயர் கல்வித்துறைக்காக 4,584.21 கோடி ரூபாயும், மக்கள் நல்வாழ்வு துறைக்காக 12,563.83 கோடி ரூபாயும், வறுமை ஒழிப்புக்காக 1,031.53 கோடியும் ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.

அதே சமயம் விவசாயிகளுக்கான வங்கி கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும், டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும் எதிர்பார்ப்பு இருந்தது. அது பற்றி பட்ஜெட்டில் கூறப்படாதது ஏமாற்றமளிக்கிறது. ஹைட்ரோ கார்பன் எடுப்பு திட்டம், மீத்தேன் எடுப்பு திட்டம் ஆகியவற்றுக்கு எதிரான கொள்கை முடிவுகள் எதுவும் இதில் கூறப்படவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லாததும், குறைந்த பட்சம் மின் கம்பி வடங்களை தரையில் புதைக்கும் அறிவிப்பு கூட இல்லாததும் வருத்தமளிக்கிறது.

சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிரித்தவர்களுக்கு ஒரு சிறப்பு திட்டம் கூட இல்லாதது "யாரை திருப்திபடுத்த " என்ற கேள்வியை எழுப்புகிறது. புராதான அந்தஸ்து பெற்ற துறைமுக மற்றும் மீன்பிடி நகரமான நாகப்பட்டினத்திற்கென ஒரு அறிவிப்பும் இல்லாததும் வருத்தமளிக்கிறது.

மற்றப்படி வழக்கமாள அம்சங்களை கொண்ட ஒரு பட்ஜட்டாகவே இது இருக்கிறது. மாசி மாத குளிரை எதிர் பார்த்தோம். பங்குனி மாத புழுக்கமாக இருப்பதாக உணர்கிறோம்.” என்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

1: 30 PM : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12.49 PM : தமிழக பட்ஜெட் : மு.க. ஸ்டாலின் கருத்து

இந்த பட்ஜெட் என்பது ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது. வளர்ச்சிக்கு செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்துவதை தான் இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கான எந்த அறிவிப்பும் எந்த நிலையீடும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டை பொருத்தவரையில், ஒரு கோடி இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்திருக்கக் கூடிய சூழலில், அது பற்றிய அறிவிப்பு இல்லாதது பெருத்த ஏமாற்றம். : மு.க. ஸ்டாலின்

12.47 PM : தமிழக பட்ஜெட் : இன்று மாலை அதிமுக மற்றும் திமுக கூட்டம்

பட்ஜெட் உரை நிறைவடைந்த நிலையில், இன்று மாலை அதிமுக மற்றும் திமுகவும் கட்சிக் கூட்டம் நடைப்பெற இருக்கிறது. மாலை 5 மணிக்கு திமுக கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

12.39 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் உரை நிறைவு

தமிழக பட்ஜெட் தாக்கல் உரையை முடித்தார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

12.37 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில்

மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என ஓ.பிஎஸ் தகவல்

12.35 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் : சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஒதுக்கீடு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்காக ரூ.476.26 கோடி நிதி ஒதுக்கீடு

12.32 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் : விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம்

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை, 8.72 லட்சம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்னர்; 2019-2020 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர ₹.198.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12.33 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் : சத்துணவு திட்டத்திற்காக ஒதுக்கீடு

மறைந்த முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்காக ₹1,772 கோடி ஒதுக்கீடு

12.24 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் : எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.911 கோடி ஒதுக்கீடு.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3810 கோடி ஒதுக்கீடு.

சமூக நலத்துறைக்கு ரூ.5,305 கோடி ஒதுக்கீடு.

12.13 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் : வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி

வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை. போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையம்,வேலை வழங்கும் நிறுவனங்களையும்,வேலை தேடுவோரையும் இணைக்கும் மாநில தொழில் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகள் உயர்நிலை சிறப்பு தகுதி தேர்வின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

12.00 PM : தமிழக பட்ஜெட் தாக்கல் : உலகவங்கி கடன் உதவியுடன் சுகாதார சீரமைப்புத் திட்டம்

உலகவங்கி கடன் உதவியுடன் 2,685 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் உருவாக்கப்படும்.

11:59 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : சென்னை நதிக்கரையோரம் வாழும் ஏழைகளுக்கு வீடு

சென்னையில் நதிக்கரையோரம் வாழும் 38 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 4647.50 கோடி செலவில் வீடு கட்டித் தரப்படும் என அறிவிப்பு

11:52 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

11:48 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : திருமண நிதியுதவி ஒதுக்கீடு

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ. 140.62 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:45 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : திருமண நிதியுதவி ஒதுக்கீடு

பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக ரூ. 726.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:45 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணம்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி நிதி

11:41 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு

தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு பட்ஜெட்டில் தகவல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது

11:41 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதி

சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது

11:40 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : விளையாட்டு மேம்பாட்டுத்துறை

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.168.27 கோடி ஒதுக்கீடு!

11:38 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மடிக்கணினி

2019-20 ஆம் ஆண்டில் மடிக்கணினி வழங்குவதற்காக ₹1362 கோடி ஒதுக்கீடு

11:34 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மெட்ரோ சேவை

சென்னை மாதவரம் - சோழிங்கநல்லூரி இடையேயான மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிப்பு.

11:33 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : தங்கும் விடுதி மேம்பாடு

ஆதி திராவிட மற்றும் பழங்குடி மாணவர்கள் தங்கும் விடுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு

11:30 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நாற்காலி மற்றும் வாகனம்

2019-2020 ல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 சிறப்பு நாற்காலிகளும், 3,000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.

11:29 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : குடிமராமத்து திட்டம்

பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள குடிமராமத்து திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

11:27 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : வருமை ஒழிப்பிற்கு ஒதுக்கீடு

வறுமை ஒழிப்புக்கு ரூ 1031 கோடி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு

11:24 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் எண்ணிக்கை குறைவு

2011-12 ஆம் ஆண்டில் 63,178 ஆக இருந்த பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19 ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது.

11:24 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : வீட்டு வசதி

ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு வசதியை பெற புதிய கொள்கை உருவாக்கி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

11:23 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலை

கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த மாநில அரசின் சார்பில் 200 கோடி ஒதுக்கீடு.

11:18 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி

காவல்துறையில் காலியாக உள்ள 9,975 பணியிடங்கள் நிரப்ப தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு

11:16 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி

2012 - 2013 ஆம் ஆண்டில் 5.37% ஆக இருந்த மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 2018- 2019 ஆம் ஆண்டில் 8.16% உயர்ந்துள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11:13 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

கால்நடைத்துறைக்கு 1,252 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பால்வளத்துறைக்கு 258 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மீன்வளத்துறைக்கு 927 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு

11:09 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : அத்திக்கடவு அவிநாசி திட்டம்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என அறிவிப்பு. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கான வரவு செலவு மதிப்பீடு ரூ 1000 கோடி ஒதுக்கீடு.

11:05 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மீன்பிடித்துறை

தரங்கம்பாடி உட்பட 4 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களுக்கு அனுமதி. ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும் ; 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.

11:00 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் மறுபரிசீலனை

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது.

10:58 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : நெல் கொள்முதல் ஊக்கத்தொகை

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது

2019-20ல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்

10:56 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டம்

பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு

10:56 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : அப்துல் கலாம் கல்லூரி

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

10:50 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : கூட்டுக்குடிநீர் திட்டம்

அரவக்குறுச்சி மற்றும் இதர ஒன்றியங்களில் 282 கிராமங்களுக்கு ரூ. 1558.87 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம்.

10:50 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : பயிர் காப்பீடு

பயிர் காப்பீட்டிற்கு ரூ621 கோடி ஒதுக்கீடு. ரூ84 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு 2000 பம்புசெட்டுகள்

10:45 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகு

கொடுங்கையூ - பெருங்குடி குப்பை கிடங்கு பகுதிகளில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ. 5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை.

10:45 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : சூரிய மின் சக்தி உடைய வீடுகள்

வரும் நிதியாண்டில் சூரிய மின் சக்தி கொண்ட 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தர முடிவு. அதற்காக ரூ. 420 கோடி ஒதுக்கீடு.

10:40 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : ஜிஎஸ்டி

மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு. ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை என பட்ஜெட்டில் வாசிப்பு.

10:36 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : சென்னையில் பார்க்கிங் வசதி

ரூ. 2000 கோடியில் சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தகவல்

10:36 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : பயிர் கடன் வட்டி தள்ளுபடி

பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

10:33 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : வேளாண்மைத்துறை ஒதுக்கீடு

வேளாண்மைத்துறைக்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் ரூ. 10, 550 கோடி ஒதுக்கீடு

10:30 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : மரணம் காப்பீடு

ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை.  விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம். ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை

10:25 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : வெள்ளம் பாதிப்புகள் ஏற்பாடு

அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பாடு செய்ய ரூ. 284.70 கோடி ஒதுக்கீடு

10:15 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : கஜா பாதிப்புகள்

முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்தபடி, கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு வீட்டுக்கு 1.70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ. 1,700 கோடி ஒதுக்கீடு. திட்டச் செலவில் 720 கோடி ரூபாயை மத்திய அரசு தனது பங்காக ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன். மீதமுள்ள 980 கோடி ரூபாயை மாநில அரசின் பங்குத்தொகையாக தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் மூலம் கடன் பெற்று இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

10:15 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : விவசாயிகள் பயிர் கடன்

2018-19 ஆண்டில் 9.3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6118 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது ; இந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு.

10:10 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : அரசின் செலவினங்கள்

வரும் நிதி ஆண்டின் அரசு செலவினங்கள் ரூ. 2, 08, 671 கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

10:10 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : தமிழக கடன்

வரும் நிதி ஆண்டில், தமிழகத்தின் கடன் தொகை ரூ. 3.97 லட்சமாக இருக்கும் எனத் தகவல்.

10:05 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் : நிதி பற்றாக்குறை

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ. 44, 176 கோடி யாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல். வருவாய் பற்றாக்குறை ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல்

10:00 AM : தமிழக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது

2019 - 20 தமிழக பட்ஜெட் தாக்கல் தொடங்கியது. துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் நகலை வாசிக்கத் தொடங்கினார். முன்னுரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு மரியாதை.

9:51AM : மு.க. ஸ்டாலின் வருகை

திமுக தலைவர் முக ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை. திமுக-வினரும் மற்ற அமைச்சர்களும் வருகை

9:50AM : ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு வருகை

பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு வந்தார் ஓ. பன்னீர்செல்வம். பட்ஜெட் உரை நகல் கொண்ட பெட்டியுடன் வருகை. அதிமுக அமைச்சர்களும் வருகை

9:30AM : கடன் வியூகம் என்ன?

இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு ரூ 3.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசுச் செலவு ரேஷன் குடும்ப அட்டைக்கு ரூ.1000 போன்ற செலவுகளினால், தமிழக அரசின் கடன்சுமை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

9:00AM : எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள், மீனவர்கள், சிறு தொழில்கள், கட்டுமானத் தொழில் ஆகியவற்றுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கஜா புயலின் தாக்கத்திற்கு பிறகு டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

8:30 AM : திமுக மற்றும் அதிமுக இன்று மாலை கட்சி அலுவலகத்தில் கூட்டம்

தமிழகத்திற்காக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, திமுக மற்றும் அதிமுக-வினர் இன்று மாலை கட்சி கூட்டம் நடத்த அதிக வாய்ப்புள்ளது.

8:15 AM : பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி முடிவு

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு மூன்றரை லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசு செலவு போன்ற செலவுகளால், தமிழக அரசின் கடன் சுமை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8:00 AM : பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி முடிவு

இன்றைய பட்ஜெட் உரை முடிவடைந்த பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த இருக்கிறது. அந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

7: 45 AM : போலீஸ் பாதுகாப்பு

இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தொடங்க இருக்கிறது.

7: 30 AM : போலீஸ் பாதுகாப்பு

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Tamilnadu Budget 2019 O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment