Advertisment

ஆன்லைனில் பில்டிங் அப்ரூவல்: சென்னையில் ஊழலை ஒழிக்க புது முயற்சி

Tamilnadu News Update : சென்னை மாநகராட்சி மற்றும் நகரங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பெருநகர வளர்ச்சி குழுமம் நகர்புற ஊரக இயக்கம் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
ஆன்லைனில் பில்டிங் அப்ரூவல்: சென்னையில் ஊழலை ஒழிக்க புது முயற்சி

Building plan approval to become easy now, Constructing Plans to get nod online with in 60 days

Tamilnadu News Update : சென்னை மாநகராட்சி மற்றும் பெரு நகரங்களில் பில்டிங் கட்டுவதற்காக அனுமதி பெற இனி ஆன்லைன் முறையில் 60 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை மாநகராட்சி மற்றும் நகரங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பெருநகர வளர்ச்சி குழுமம் நகர்புற ஊரக இயக்கம் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அனுமதியை பெறுவதற்கு பல்வேறு துறைகளில் அனுமதி சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த செயல்முறையால் அலைச்சலுக்கு உள்ளாவதாகவும் புகார் வந்து கொண்டிருக்கிறது.

புதிய கட்டிடங்கள் கட்டும் கட்டுமான நிறுவனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு, காவல்துறை, இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய விமானப்படை, சிஎம்ஆர்எல் (CMRL) பொதுப்பணித் துறை, இந்திய ரயில்வே, தேசிய நினைவுச்சின்ன ஆணையம், இந்திய தொல்லியல் ஆய்வு, சிஆர்இசட் (CRZ) அனுமதி, சுற்றுச்சூழல் துறை போன்ற பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டி இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் 60 நாட்களுக்குள் கட்டிடத் திட்ட அனுமதிகள் செயல்படுத்தப்படும் என்றும், இதற்கு வசதியாக, 'கோ லைவ்' இணையதளத்தை துவக்க, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் நகர மற்றும் ஊரமைப்பு இயக்குநரகம் (டிடிசிபி) உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான செயல்முறைகள் ஆன்லைனில் இருந்தாலும், பல்வேறு துறைகளின் தடையில்லா சான்றிதழ்கள் (என்ஓசி) தேவை, அதிகாரிகளின் தள ஆய்வுகள் மற்றும் ஒப்புதல் செயல்முறையின் பின்தொடர்தல் ஆகியவை ஆஃப்லைன் முறையில் உள்ளது. இது ஒரு கடினமான பணி மற்றும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாக உள்ளது.

இது தொடர்பாக எச்யூடிடி (HUDD) செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ் மக்வானா, அறிவித்துள்ள உத்தரவில், 2022 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் 'கோ லைவ்'க்கான சோதனைகளைத் தொடங்க அனைத்து உள்ளூர் திட்ட அதிகாரிகளுக்கு டிடிசிபி (DTCP) உத்தரவிட வேண்டும் என்றும் சிஎம்டிஏ (CMDA) மற்றும் டிடிசிபி (DTCP) அவற்றை உடனடியாக செயல்படுத்தி, இந்த செயல்முறை குறித்து மாதாந்திர முன்னேற்ற அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். .

இந்த செயல்முறை பிப்ரவரி 2022 இல், தலைமைச் செயலாளர் ஆன்லைன் போர்ட்டலை அமைக்கவும், என்ஓசி (NOC) களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவும் துறைகளுக்கு உத்தரவிட்டபோது செயல்முறை தொடங்கியது. அதே பிப்ரவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தார்.

அதன் பிறகு சிஎம்டிஏ (CMDA)  இணையதளத்திற்கான சோதனை செயல்முறையைத் தொடங்கி ஆவணங்களைப் பதிவேற்றத் தொடங்கியது. ஆனால் இந்த செயல்முறையில் சில பிழைகளை சரிசெய்ய வேண்டியுள்ளதாகவும், சில வாரங்களில், இணையதளம் முழுமையாக செயல்பட்டு கிடைக்கும் என்றும் சிஎம்டிஏ உறுப்பினர்-செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா கூறியிருந்தார்.

இந்த முயற்சியை வரவேற்ற டிவிஎஸ் எம்ரால்ட் (TVS Emerald) இன் பொது மேலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், இந்த ஒற்றைச் சாளர அமைப்பு, மூலம் ஏஜென்சிகள் அனைத்தையும் ஒரே போர்ட்டலின் கீழ் கொண்டுவந்து, காலக்கெடுவுக்கான செயல்முறையாக மாற்றுவது இந்தத் துறையை பெரிதும் மேம்படுத்தும்" மற்றும் மக்களின் தொந்தரவுகளை குறைக்கும். இல்லை என்றால் இந்த செல்முறைக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment