'சென்னை சங்கமம் 2025 - நம்ம ஊரு திருவிழாவின்' இறுதி நாளான இன்று (17/01/2025) சென்னை, அண்ணா நகர், கோபுரப் பூங்காவில் நடை பெற்ற "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" கலை நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, விழுப்புரம் “கை கொடுக்கும் கை" குழுவினரின் மல்லர் கம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட கலைஞர்களுக்கும், பம்பை இசை குழுவினருக்கும் சிறப்பு செய்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/17/chennai-sangamam2.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/01/17/chennai-sangama4.jpg)
நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் கனிமொழி கருணாநிதி எம்.பி ஆகியோர் கலைஞர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, திமுக துணைப் பொதுச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க. பொன்முடி, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/17/chennai-sangamam3.jpg)
மேலும், சென்னை வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், தமிழரசி ரவிக்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“