Advertisment

டெல்லி தி.மு.க அலுவலக திறப்பு விழாவில் சோனியா: உதயநிதி என்ட்ரிக்கு மாஸ் ரெஸ்பான்ஸ்!

டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்; சோனியா, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா, டி.ராஜா ஆகியோர் குத்து விளக்கேற்றினர்

author-image
WebDesk
New Update
டெல்லி தி.மு.க அலுவலக திறப்பு விழாவில் சோனியா: உதயநிதி என்ட்ரிக்கு மாஸ் ரெஸ்பான்ஸ்!

Tamilnadu CM Stalin inaugurates Delhi DMK office: டெல்லியில், திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02.04.2022) திறந்து வைத்தார்.

Advertisment

டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில், திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 30ஆம் தேதி டெல்லி வந்தார். இந்த திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை திமுக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின், திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். 

தொடர்ந்து, திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா, டி.ராஜா ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் 45 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றினார்.

இதையும் படியுங்கள்: திடீரென மயக்கம் போட்டு விழுந்த சீமான்: தொண்டர்கள் பதற்றம்

அதன்பின், இந்த திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மார்பளவு அண்ணா சிலையை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் திறந்து வைத்தார்.

அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக பொருளாளரும் எம்.பி.யுமான, டி.ஆர். பாலு திறந்து வைத்தார்.

இந்த விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், வைகோ, ப.சிதம்பரம், திருமாவளவன், திருநாவுக்கரசர், கபில் சிபில், டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். 

விழாவில் கலந்துக் கொண்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து மரியாதை செய்ததோடு, நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உதயநிதியை டி.ஆர்.பாலு வரவேற்க, ஆ.ராஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கட்சி அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் அவருக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment