மு.க.அழகிரிக்கு மெசேஜ் பாஸ் செய்த ஸ்டாலின்: சந்திப்பை தவிர்க்க இதுதான் காரணம்!

MK Stalin Vs MK Alagiri : கொரோனா தடுப்பு பணிகளுக்காக மதுரை சென்ற முதல்வர் ஸ்டாலின் சகோதரர் அழகிரியை சந்திக்காமல் வந்துள்ளார்.

கடந்த 7-ந் தேதி தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அன்று முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முழு வீச்சில் களமிறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக 15 நாட்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்னும் 3 நாட்களில் முடிவுறும் நிலையில், அடுத்து ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து விரைவல் ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று குறிப்பிட்ட சில மாவட்டங்களுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணம் தொடங்கும்போதே இது அரசியல் சார்ந்த பயணமல்ல அரசுப்பயணம் இதனால் கட்சி ரீதியான யாரும் என்னை சந்திக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று முதல்வர் கட்சியினருக்கு தெரிவித்திருந்தார். அதன்படி முதல்வரின்பயணத்தில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிக்கள் மட்டுமே உடன் சென்றனர்.

இந்த பயணத்தில் முதலில் கொங்கு மண்டலத்தில் ஆய்வு செய்த முதல்வர், திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை சென்ற முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியார் அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அரசு அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள் பி மூர்த்தி, பிடிஆர் பழனிவேல், ஆட்சியர் அனிஷ் சேகர், திமுக கூட்டணி எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள திமுக முன்னாள் எம்பியும், முதல்வரின் சகோதரரான அழகிரியை அவரது இல்லத்தில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரையில் ஆய்வு பணிகளை முடித்த முதல்வர் ஸ்டாலின் நேராக திருச்சி சென்றுவிட்டார். முதல்ரின் இந்த முடிவு அழகிரியை சந்திப்பார் என்ற எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான அமைந்தது. சென்னையில் இருந்து மதுரைவரை சென்ற முதல்வர் தனது சகோதரர் அழகிரியை சந்திக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அரசு முறை பயணமாக செல்வதால் கட்சி பிரமுகர்கள் சந்திக்க அனுமதி இல்லை என்று கூறிய நிலையில், தற்போது தனது சகோதரர் அழகிரியை சந்தித்தால், இது அரசுமுறை பயனமாக இல்லாமல் குடும்ப சந்திப்பாக மாறிவிடும். மேலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த செய்தியை விட இந்த சந்திப்பு பெரிய செய்தியாக மாறிவிடும் என்று நினைத்த முதவல்வர் இந்த சந்திப்பை கைவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இது கட்சி ரீதியானதோ, குடும்ப ரீதியான பயணமோ கிடையாது என்பதால், கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் அழகிரியுடனான சந்திப்பை முதல்வர் ஸ்டாலின் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக மு.க.அழகிரிக்கு முதல்வர் ஸ்டாலின தகவல் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக முதல்வர்  ஸ்டாலின் மதுரைக்கு வருவது தெரிந்து ஸ்டாலின் என் வீட்டுக்கு வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்பேன், என்று மு.க.அழகிரி குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm stalin passed message to mk alagiri why cant meet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com