Advertisment

மாவட்டங்கள் இடையே செல்ல சான்றிதழ்கள் அவசியம்: இ பாஸ் தேவையில்லை என அறிவிப்பு

To travel between districts proper certificates must Tamil News: தமிழகத்தில் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய சான்றிதழ்கள் அவசியம் என்றும், இ பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamilnadu Covid news in tamil: To travel between districts proper certificates must, Not E-PASS

Tamilnadu Covid news in tamil: இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் 27,0000 -யை தாண்டியுள்ளது. அதோடு தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 250 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisment

தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் உயர்ந்த வண்ணம் உள்ளதை, கருத்தில் கொண்ட முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, இன்று காலை 4 மணி முதல் வரும் 24ம் தேதி காலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், தொற்று பரவலை முறியடிக்கவும் தமிழக அரசு சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்வோர்க்கு இ பாஸ் தேவையில்லை. ஆனால் திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு, மருத்துவ அவசரம் போன்ற காரணங்களுக்காக பயணம் செய்வோர் கட்டாயம் முறையான சான்றிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக இபாஸ் எடுக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு https://eregister.tnega.org/#/user/pass என்ற இணைய தள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Tamilnadu Tamilnadu Covid Lockdown Tamilnadu Covid 19 Guidelines Covid 19 Second Surge Covid Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment