Advertisment

கடலூரில் திருநங்கை மரணம் : கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை

Tamilnadu News Update : கடலூரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

author-image
WebDesk
New Update
கடலூரில் திருநங்கை மரணம் : கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை

Tamilnadu News Update : தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி முட்லூர் கிராமத்தில் திருநங்கை இறந்து கிடப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பரங்கிப்பேட்டை போலீசார் திருங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், 31 வயதான பனிமலர் என்றும், இவர் சிதம்பரம் அருகே மணலூரில் வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், பனிமலர் உடலை வைத்துள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்தவமயைில் குவிந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், பனிமலர் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை ரூபா, இரவு 10 மணியளவில் பணிமலரிடமிருந்து உதவி கேட்டு எனக்கு அழைப்பு வந்தது.. "நான் எங்கே இருக்கிறேன் என்று அவள் கேட்டாள், நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொன்னேன். அப்போது அவள் தான் முட்லூர் பகுதியில் இருப்பதாகவும், தன்னை கத்தியால் தாக்கியதாகவும், மூக்கு மற்றும் வாய் உடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனால் நாங்கள் உடனடியாக ஒரு காரை எடுத்துக்கொண்டு அவள் சொன்ன பகுதிக்கு சென்றோம். அங்கு அவள் இறந்து கிடப்பதை கண்டு இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்,'' என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய மற்றொரு திருநங்கை தனது எதிர்ப்பையும் மீறி, ஆண்கள் தன்னை கட்டாயப்படுத்தி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றதாக கூறினார்.

கடலூரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநங்கைகள் வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடாந்து இந்த சம்பவம் தொடாபா ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரங்கிப்பேட்டை போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், “எங்கள் ஆரம்ப கட்ட விசாரணையில், பனிமலருக்கும் மற்ற நபருக்கும் ஏதோ பணப் பிரச்சினையில் தகராறு ஏற்பட்டது. அந்த நபர் அவளை தாக்கி, சுவரில் தள்ளிவிட்டார். அவள் பயங்கர காயங்களுக்கு ஆளாகியிருக்கிறாள். அதிக இரத்த போக்கு காரணமாக இறந்து போனாள். நாங்கள் இன்னும் வழக்கை விசாரித்து வருகிறோம், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார், ”என்று கூறயுள்ளனர்.

இது தொடர்பாக திருநங்கை ஆர்வலர் கிரேஸ் பானு தனது ட்விட்டரில், திருநங்கைகளின் வன்முறை மற்றும் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும், நிற்கவும் சமூகம் தீர்மானிக்கும் நாள் வரை அவர்கள் இந்த தீய சுழற்சியில் சிக்கித் தவிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment