Advertisment

போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம்... சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்... கருணாநிதி குறித்து கனிமொழி நெகிழ்ச்சி

MP Kanimozhi Shared her Father Karunanidhi Photo : திமுக எம்பி கனிமொழி தனது தந்தையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம்... சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்... கருணாநிதி குறித்து கனிமொழி நெகிழ்ச்சி

Kanimozhi Shared Twitter Post Going On Viral : திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, அதிமுக அரசின் நடவடிக்கையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட இன்றைய (ஜூன் 30) தினத்தை குறிக்கும் வகையில், திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜே.சி ஆச்சாரியாலு சென்னை நகரத்தில் சிறுமேம்பாலங்கள் அமைப்பதில் முந்தைய ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாக அளித்த புகார் அளித்துள்ளார். இவர் திமுக ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது.

இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த அப்போதைய தமிழக அரசு ஜூன் 30-ந் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் மற்றும் டி.ஆர் பாலு உட்பட ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதில் கருணாநிதியை அவரது இல்லத்தில் கைது செய்ய சென்ற போலீசார் அவரை கீழே தள்ளி வலுக்கட்டாயமாக கைது செய்யதாகவும், தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போதைய தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுகவினர் மட்டுமல்லாது பலரும் தங்களது தீர்ப்பை தெரிவித்திருந்தனர். தற்போது இந்த சம்பவம் நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நாளை குறிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்பியுமான கனிமொழி தனது தந்தையுடன் அமாந்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில், மறக்க முடியாத தினம். 30.06.2001. சென்னை சிறைச்சாலை வாசலில் இந்த போராளியிடம் கற்றுக்கொண்ட பாடம் 'அச்சம் கடந்தவர்களுக்கு சிறையும் சிம்மாசனமும் ஒன்றுதான்'. தனியாக அவரோடு அமர்ந்திருந்தாலும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் அவருக்காக தடியடிக்கு நடுவே போராடிக்கொண்டிருந்தார்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு திமுகவினரிடையே கவனம் பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Mp Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment