Advertisment

Tamil News Today : முக கவசம் அணியாவிட்டால் அபராதம்... ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள்

Tamilandu Latest news: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : முக கவசம் அணியாவிட்டால் அபராதம்... ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள்

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

நான்கு நாட்களுக்கு மழை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு

மகாராஷ்ட்ராவில் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது -நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றும் தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2ஆவது அலை எதிர்கொள்ளப்படும் என கூறியுள்ளார்-

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைப்பு

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி வந்த வழக்கமான மண்ணெண்ணெய் அளவில் தற்போது 20% மட்டுமே ஒதுக்கி வருவதால் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:42 (IST) 14 Apr 2021
    ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள் பதிவு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 18:22 (IST) 14 Apr 2021
    தமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 25 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியிருப்பது சுகாதாரத்துறையினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



  • 16:53 (IST) 14 Apr 2021
    பண்ருட்டி தொகுதி ஈ.வி.எம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு குறைப்பாடு - வேல்முருகன்

    திமுக கூட்டணி வேட்பாளரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முருகன்: பண்ருட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு குறைபாடு; தலைமைத் தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 15:27 (IST) 14 Apr 2021
    இன்று தமிழகத்தில் 7000-ஐ கடக்குமா கொரோனா தொற்று!?

    இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7000-ஐ கடக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப தொற்றுகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதால், மக்கள் கவனத்துடன் செயல்பட கேட்டுக் கொண்டுள்ளார்.



  • 15:25 (IST) 14 Apr 2021
    இன்று தமிழகத்தில் 7000-ஐ கடக்குமா கொரோனா தொற்று!?

    இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7000-ஐ கடக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப தொற்றுகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதால், மக்கள் கவனத்துடன் செயல்பட கேட்டுக் கொண்டுள்ளார்.



  • 15:14 (IST) 14 Apr 2021
    கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக 4 மினி வாகனங்கள்!

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. 4300 மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துரைக்க, 4 மினி வாகனங்களின் மூலம் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டது. 4 மினி வாகனங்களையும் சுகாதாரத் துறை செயலாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.



  • 15:08 (IST) 14 Apr 2021
    நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள்; அகமதாபாத் பரிதாபம்!

    அகமதாபாத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்கள் அனுமதிக்காக நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். இதனால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.



  • 15:02 (IST) 14 Apr 2021
    முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

    இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பின் காரணமாக தனது 86 வயதில் உயிரிழந்தார்.



  • 14:38 (IST) 14 Apr 2021
    கழிவறையில் வழுக்கி விழுந்த சம்பவம்; சுயேச்சை வேட்பாளர் பரிதாப உயிரிழப்பு!

    சேலம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட 61 வயதான மோகன் என்பவர், கழிவறையில் வழுக்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • 14:16 (IST) 14 Apr 2021
    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்; பிரதமர் மோடி வெளியீடு!

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து, கிஷோர் மக்வானா என்பவர் எழுதிய நான்கு புத்தகங்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



  • 14:07 (IST) 14 Apr 2021
    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு!

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 14:01 (IST) 14 Apr 2021
    சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

    சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • 13:49 (IST) 14 Apr 2021
    டி.ஆர். பாலுவுக்கு கொரோனா தொற்று

    டி.ஆர். பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கடந்த ஒருவாரத்தில் சந்தித்த அனைத்து நபர்களும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவருடைய மகன் ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்.

    எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு ொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.

    கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    — T R B Rajaa (@TRBRajaa) April 14, 2021


  • 13:46 (IST) 14 Apr 2021
    நலம் அடைந்து வீடு திரும்பினார் துரைமுருகன்

    சென்னையில் கொரோனா வைரஸிற்கு சிகிச்சை பெற்று வந்த துரைமுருகன் இன்று குணம் அடைந்து வீடு திரும்பினார். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.



  • 13:33 (IST) 14 Apr 2021
    வொர்க் ஃப்ரம் ஹோம் - தாமாக முன்வந்து செய்யலாம்

    யாருக்கெல்லாம் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகள் உள்ளதோ அவர்கள் எல்லாம் தாமாக முன் வந்து அந்த பணிகளை மேற்கொள்ளலாம். அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று காத்திருக்க வேண்டியதில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.



  • 13:31 (IST) 14 Apr 2021
    யோகிக்கு கொரோனா

    உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 12:41 (IST) 14 Apr 2021
    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை

    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கியுள்ளது. தொற்றை எதிர்கொள்ள போர்கால அடிப்படையில் தயாராகி வருகின்றோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.



  • 12:21 (IST) 14 Apr 2021
    வானிலை அறிக்கை (4/4)

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.



  • 12:20 (IST) 14 Apr 2021
    வானிலை அறிக்கை (3/4)

    16ம் தேதி அன்று தென் தமிழகம், வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.



  • 12:20 (IST) 14 Apr 2021
    வானிலை அறிக்கை (2/4)

    தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.



  • 12:19 (IST) 14 Apr 2021
    வானிலை அறிக்கை (1/4)

    தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்) கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 12:04 (IST) 14 Apr 2021
    சென்னையில் கனமழை

    சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு, எழும்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கோடை வெளியில் வாட்டி வந்த நிலையில் இம்மழை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.



  • 12:00 (IST) 14 Apr 2021
    கனமழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தி.மலை, சேலம், தர்மபுரி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • 11:57 (IST) 14 Apr 2021
    ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் - முக ஸ்டாலின்

    அம்பேத்காரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஸ்டாலின் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் என்று ட்விட்டரில் தன்னுடைய கருத்தினை பதிவிட்டுள்ளார்.

    அரசியலமைப்புச் சட்டம் தந்த மாமேதை, அண்ணல் ambedkarjayanti நாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.



    ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றமே மனித குலத்தின் ஏற்றம் என மனதில் நிறுத்தி, ஆதிக்கமற்ற - சமத்துவ சமூகம் அமைத்திடுவோம்!



    அண்ணல் வழி நின்று திமுக கடமையாற்றும். pic.twitter.com/DzssP7h0EB

    — M.K.Stalin (@mkstalin) April 14, 2021


  • 11:39 (IST) 14 Apr 2021
    அகிலேஷ் யாதவுக்கு கொரோனா

    உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



  • 11:32 (IST) 14 Apr 2021
    மதுரையில் 6 காவலர்களுக்கு கொரோனா

    மதுரை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 11:29 (IST) 14 Apr 2021
    சிபிஎஸ்இ தேர்வு - பிரதமர் ஆலோசனை

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்த நிலையில், இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சருடன் பிரதமர் மோடி நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.



  • 11:06 (IST) 14 Apr 2021
    இதுவரை 11.11 கோடி கொரோனா தடுப்பூசிகள்

    நாடு முழுவதும் இதுவரை 11.11 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 10:15 (IST) 14 Apr 2021
    பாஜக வென்றால் கோளாறு என்பார்கள் - பொன்.ராதா

    மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்குத்தான் கோளாறு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவே காங்கிரஸ் வென்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள் பாஜக வென்றால் கோளாறு என்பார்கள் என சாடினார்.



  • 09:56 (IST) 14 Apr 2021
    பாஜக வென்றால் கோளாறு என்பார்கள் - பொன்.ராதா

    மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்குத்தான் கோளாறு உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுவே காங்கிரஸ் வென்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள் பாஜக வென்றால் கோளாறு என்பார்கள் என சாடினார்.



  • 09:48 (IST) 14 Apr 2021
    இந்தியாவில் மேலும் 1,84,372 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஒரே நாளில் 1,027 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது.



Tamil News Live Update Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment