மக்களை கிண்டல் செய்து வீடியோ: நானும் அங்கிருந்து வந்தவன் தான்; மன்னிப்பு கோரிய இர்பான்

குழந்தையின் பாலினம் வெளியிட்டது, தொப்புள் கொடி அறுப்பது தொடர்பான வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இர்பான தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குழந்தையின் பாலினம் வெளியிட்டது, தொப்புள் கொடி அறுப்பது தொடர்பான வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இர்பான தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Youtube Irfan

கருவில் இருக்கும் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியது, குழந்தைகள் தொப்புள்கொடி அறுப்பது தொடர்பான வீடியோவை வெளியிட்டது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பிரபல யூடியூபர் இர்பான், தற்போது ரம்ஜான் தினத்தில், மக்களுக்கு பரிசு கொடுக்கும்போது அவர் நடந்துகொண்ட விதம் குறித்து கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த செயலுக்கான இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisment

யூடியூப்பில் சாப்பாடு தொடர்பான வீடியோ பதிவிட்டு, அதிகமாக சப்ஸ்கிரைபவர்களை பெற்றவர் தான் இர்பான். ஒரு பெரிய திரைப்படம் வெளியாகும் முன்னே அந்த திரைப்படத்தில் நடித்த நடிகருடன் இணைந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் நேர்காணல் நடத்துவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கான ஃபாலோயர்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக இருந்து வருகின்றனர்.

மேலும் தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதல் விடுதலை பட நடிகர் சூரி வரை பல முன்னணி நடிகர்கள் இவருடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான எம்புரான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலுடன் இவர் சாப்பிட்டுக்கொண்டே வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியத. இதேபோன்று பல செலிபிரிட்டிகளுடன் இவர் நேர்காணல் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சமூகவலைதளங்களில் மூலம் பிரபலமான இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செய்துகொண்ட இவர், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் பாலினம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அந்த சமயத்தில் அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

Advertisment
Advertisements

அதேபோல் தனக்கு குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தையின் தொப்புள் கொடியை இவர் அறுத்ததும், அது தொடர்பான வீடியோ பதிவையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி இது தவறானது என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும், மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே தற்போது இர்பான புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ரம்ஜான் தினத்தன்று, மக்களுக்கு, பரிசு பொருட்களை கொடுப்பதற்காக, தனது மனைவியுடன் காரில் புறப்பட்டு சென்ற இர்பான், காரில் இருந்தபடியே மக்களுக்கு உடை மற்றும் பணம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில், இர்பான கொடுக்கும் பொருட்களை வேகமாக அவரிடம் இருந்து வாங்கியுள்ளனர்.

இதன் காரணமாக கோபமான இர்பான் அவர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசியுள்ளார். இதை வீடியோவாக பதிவு செய்த அவர், மக்களிடம் கோபமாக பேசிவிட்டு, சிறிது தூரம் சென்றவுடன், அவர்களை கேலி கிண்டல் செய்து தனது மனைவியுடன் சிரித்து மகிழ்ந்துள்ளார். இதையும் வீடியோவாக பதிவு செய்த அவர், தனது தளத்தில் பதிவிட்டுள்ளார். இர்பானின் இந்த செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரது செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தனது செயலுக்கான மன்னிப்பு கோரியுள்ள இர்பான், முன்னேற்பாடுகள் ஏதுமின்றி உதவி செய்ததால், அந்த சூழலை கையாள தெரியவில்லை. இதனால் சில விஷயங்களை செய்துவிட்டேன். நான் செய்தது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள். கஷ்டப்படுபவர்கள் மீது அக்கறை இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நானும் அங்கிருந்து வந்தவன் தான் என்று கூறியுள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: