சவுதியில் கப்பல் விபத்தில் இறந்த தமிழக மீனவர்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சவுதியில் கப்பல் விபத்தில் இறந்த மீனவர் உடலை இந்தியா கொண்டுவர உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சவுதியில் கப்பல் விபத்தில் இறந்த மீனவர் உடலை இந்தியா கொண்டுவர உத்தரவிடக்கோரிய மனுவுக்கு 22ம் தேதி பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் பாம்பனை சேர்ந்த மீனவர் ஜஸ்டின் என்பவரின் மகன் பிரைன் இக்னோசியஸ், சவுதி அரேபியாவில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் கப்பல் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரைன் இக்னோசியஸ் உடலை இந்தியா கொண்டு வரக்கோரி அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஜஸ்டின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜீவ் சக்தோர் தலைமையிலான அமர்வு, மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu fisherman died in saudi arabia chennai high court asks answer from state and central government

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com