Advertisment

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகம்... இலவச ப்ரமோஷன் என அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

Tamilnadu Valimai Cement Update : தமிழக அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகம் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசின் வலிமை சிமெண்ட் அறிமுகம்... இலவச ப்ரமோஷன் என அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

Tamilnadu Valimai Cement Update : தமிழ்நாடு சிமெண்டஸ் நிறுவனத்தின் புதிய வரவாக வலிமை என்ற உயர் ரக சிமெண்ட்டை அறிமுகம் செய்துவைத்த முதல்வர் ஸ்டாலின், அதன் விற்பனையையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்வை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகினறனர்.

Advertisment

தமிழக்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவைதை கருத்தில் கொண்டு வலிமை என்ற பெயரில் புதிய உயர் ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கட்ந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். சிமெண்ட்டின் பெயர் வலிமை என்ற செய்தி தெரிந்த உடனே அஜித் ரசிகர்கள் இதனை வைரலாக்க தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தபடியே தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வலிமை சிமெண்ட் இன்று அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அதன் விற்பனையையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த புதிய ரக சிமெண்ட் அறிமுகத்தால், சிமெண்ட் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 தரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிமெண்ட் ஒன்று ரூ 350-க்கும், மற்றொன்று ரூ 365 –க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவி்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் திட்டங்களுக்கும் வலிமை சிமெண்ட் பயன்படுத்தப்படும் என்றும், வலிமை சிமெண்ட்பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த செய்தி தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சென்னையில் மழை வெள்ளத்தில் நனைந்ததை விட தற்போது தமிழக அரசின் இந்த புதிய சிமெண்டின் பெயரை கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைத்துள்ளதே அதிகம் என்று அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத்த இயக்கத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு நடிகர் ஒரு படத்தில் நடிக்க தொடங்கும்போது அந்த படம் குறித்து அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அதன்பிறகு ஒரு சில வாரங்கள் கழித்து அந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர், செகண்ட்லுக் போஸ்டர் என ஒரு சில அறிவிப்புகள் வெளியாகும். அதன்பிறகு குறிப்பிட்ட இடைவெளியில், அந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் வெளியிடும் அறிவிப்பு வெளியாகும். படம் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பு படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

இந்த செயல்முறை எல்லாம் மற்ற படங்களுக்கு சரியாக பொருத்தும். ஆனால் வலிமை படத்திற்கும் இந்த செயல்முறைகளுக்கும் வெகுதூரம் என்றுதான் சொல்ல வேண்டும். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் - எச் வினோத் - போனி கபூர் மீண்டும் இணைய உள்ள படம் வலிமை என்ற முதல் அப்டே் கொடுத்தோடு சரி. அதன்பிறகு வலிமை என்ன ஆனது என்பது அவர்கள் மூவருக்கு மட்டுமே வெளிச்சம்.

பட அறிவிப்பு வெளியான பிறகு வேறு எந்த அப்டேட்டும் வரவில்லையே என்று அஜித் ரசிகர்கள் புலம்பத்தொடங்கினர். இதன் எதிரொலியாக இயக்குநர் எச் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் மொய்க்க தொடங்கினர். ஆனாலும் அசையாத தயாரிப்பு தரப்பு இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனாலும் விடாத ரசிகர்கள் புதிய முயற்சிகளை கையிலெடுக்க தொடங்கினர்.

இதில் முதல் முயற்சியாக பொது இடங்களில் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர். அதன்பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதனங்களில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், வலிமை அப்டே் என்று அட்டையை கேமராவின் முன்பு காண்பிக்க தொடங்கினர். அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் ஒரு ரசிகர் வலிமை அப்டேட் கேட்டது பெரும் வைரலானது.

அதன்பிறகு சட்டசபை தேர்தில் பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதிசீனிவாசன் பிரசசாரத்திற்கு வந்தபோது அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் சொல்லுங்க என்று கேட்டார். அதற்கு அவர் தான் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று கூறியிருந்தார். இப்படி அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டது திரைத்துறையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன்பிறகு ஒரு வழியாக கடந்த மே 1-ந் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மோஷன் போஸ்டர் பாடல் என பரபரப்பாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. தற்போது அஜித் ரசிகர்கள் படம் எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில், வலிமை சிமெண்ட் அறிமுகம் வலிமை படத்திற்கு இலவச ப்ரமோஷனாக அமை்ந்துள்ளது என்று வலைதளங்களில் கொண்டாடி வருகிறனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment