Advertisment

நீட் தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் : உதவியது இ-பாக்ஸ் பயிற்சி வகுப்புகள்

Tamilnadu News Update : நீட் தேர்வில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மட்டும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 88 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
நீட் தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் : உதவியது இ-பாக்ஸ் பயிற்சி வகுப்புகள்

Neet Exam In Tamilnadu : மருத்துப்படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ந் தேதி நடத்தப்பட்டது.

Advertisment

நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து சுமார் ஒருலட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தெலுங்கான டெல்லி மற்றும் மராட்டியத்தை சேர்ந்த 3 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து தமிழக அளவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் 2 இடங்களையும், சேலம் மாவட்டத்தை சேர்த்த மாணவி 3வது இடத்தையும் பெற்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மட்டும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 88 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், பள்ளிக் கல்வித் துறை நடத்தும் இ-பாக்ஸ் பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொண்டதே இதற்குக் காரணம் என அப்பகுதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மதுரை முதன்மைக் கல்வி அதிகாரி ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், நுழைவுத் தேர்வுக்கான பள்ளிக் கல்வித் துறையின் இ-பாக்ஸ் பயிற்சியில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 508 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாங்கள் மூன்று மாதிரித் தேர்வுகளை நடத்தினோம், இது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மதுரையில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்புக்காக சேர்க்கை பெற்றுள்ளனர். இதன் மூலம் மருத்துவப் படிப்பில் சேர 55 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் நீட் தேர்வின் விவரம் வெளியான பிறகு இந்த எண்ணிக்கை 60 ஆக உயரும் என மாவட்ட கல்வித்துறை கூறியுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இ-பாக்ஸ் பயிற்சி மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும், தேர்வின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள பயனுள்ளதாகவும் மாணவர்கள் பலர் தெரிவித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரியில் உள்ள அரசுப் பள்ளி மாணவி சவுபாக்யலட்சுமி கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ், நீட் தேர்வில் 414 மதிப்பெண்கள் பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ளேன். பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆசிரியர்களால் வழங்கப்படும் பயிற்சி." கீழ் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல மாணவர்களும் 2021 இல் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் ஆத்து பொள்ளாச்சி எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தாயின் ஆதரவுடன் ஏழைப் பின்னணியில் இருந்து வந்த ராதாகிருஷ்ணன் என்ற மாணவர் நீட் தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று எஸ்டி ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பெயரளவு கட்டணத்தில் தனக்கு ஆதரவளித்ததாக அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தென் மாவட்டங்களான திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களும் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet Result 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment