Advertisment

கஜ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை : ஆர்.பி. உதயகுமார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Udhaykumar, ஆர்.பி. உதயகுமார்

Minister Udhaykumar, ஆர்.பி. உதயகுமார்

கஜ புயல் தாக்கிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை தமிழக அரசு இன்று முதல் வழங்கு என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

கஜ புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மத்திய அரசு நிவாரண தொகை அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடியும், தற்காலிகமாக ரூ.1500 கோடியும் ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கஜ புயல் பாதிப்பு பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகையை அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார் பேட்டி

இந்நிலையில், கஜ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நாகையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கஜ புயல் நிவாரணத்துக்காக 392 கோடி ரூபாய் பணம் தமிழ்நாடு அரசின் கையிருப்பில் இருப்பதாகவும், இன்று முதல், நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இதன் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றார். இதன்படி, குடிசைகளை இழந்தவர்களுக்கு முதலிலும், ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இரண்டாவதாகவும், பகுதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கான நிவாரணத் தொகையும், மாநில அரசின் கையிருப்பில் உள்ள 392 கோடி ரூபாயில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

அதன் படி, கால்நடைகளை இழந்தவர்கள் மற்றும் இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று முதல் நிவாரண தொகையை அமைச்சர் உதயகுமார் வழங்கி வருவார்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment