Advertisment

6 ஆயிரம் கோடி நகை கடன் தள்ளுபடி: யாருக்கு கிடையாது?

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நகை கடை தள்ளுபடி அறிவிப்பால் யார் பலன் அடைவார்கள் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Gold Savings Account

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வாக்குறிதி எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

Advertisment

இது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற 5 சவரன், அதாவது 40 கிராம் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அசல் மற்றும் வட்டித் தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்கும் என்றும், தோராயமாக சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் நகையை அடமானம் வைத்து கடன் பெற்ற 16 லட்சம் பேர் பலனடைவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாருக்கு நகை கடன் தள்ளுபடி, யாருக்கு கிடையாது

  • ஒரு குடும்ப அட்டைக்கு 5 சவரன் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
  • ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தனித்தனியாக பெற்ற கடன் மொத்தமாக 5 சவரனுக்கு கீழ் இருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும்.
  • தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு கடன் பெற்றிருந்தால் தள்ளுபடி செய்யப்படும்.
  • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்கள் பெற்ற 5 சவரன் நகைக்கடன்கள் நிபந்தனைக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யப்படும்
  • ஆதார் எண் அடிப்படையில் ஒரே நபர் அல்லடது குடும்பத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றிருந்தால் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
  • 2021ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடியில் பயன்பெற்றவர்களது நகைக்கடன் தள்ளுபடி இல்லை.

    எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி இல்லை.
  • அனைத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி இல்லை.
  • கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு கடன் தள்ளுபடி பொருந்தாது.

நகைக்கடன் பெறுவதில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Gold Loan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment