தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன் படி உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த மாதம் விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்பட்டது. அரசு மூலம் சிறப்ப முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பபங்கள் பெறப் பட்டன. 3 கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. முதல் கட்ட முகாமில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றும் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த 2-ம் கட்ட முகாம் மூலம் 14,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி தொடங்கிய 3-ம் கட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 20) நிறைவடைகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காத அல்லது விண்ணப்பம் பெறாத பயனர்கள் இன்று விண்ணப்பம் பெற்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“