Advertisment

இந்த 10 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்: தமிழக அரசு கூறும் காரணம்

Tamilnadu Govt urges centre to declare 500 km roads as national highways: தமிழகத்தில் 500 கிமீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும்; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த 10 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்: தமிழக அரசு கூறும் காரணம்

தமிழகத்தில் 500 கிமீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 500 கிமீ சாலைகளை தேசிய நெஞ்சாலைகளாக மாற்ற, 2018 ஆம் ஆண்டில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 6,600 கோடியில் மதுரை மேற்கு ரிங் ரோடு, கோயம்புத்தூர் அரை வட்ட சாலை மற்றும் கோவை-சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றின் பணிகள் அடங்கும்.

மேலும், திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி (65 கிமீ), வள்ளியூர்-திருச்செந்தூர் (70 கிமீ), கொள்ளேகால்-ஹனூர்-எம்எம் ஹில்ஸ்-பாலர் சாலை-தமிழக எல்லை மேட்டூர் (30 கிமீ), பழனி-தாராபுரம் வரை (31 கிமீ), ஆற்காடு-திண்டிவனம் (91 கிமீ), மேட்டுப்பாளையம்-பவானி (98 கிமீ), அவிநாசி-மேட்டுப்பாளையம் (38 கிமீ) மற்றும் பவானி-கரூர் (77 கிமீ) ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

"இந்த சாலைகளின் தற்போதைய நிலைக்கு உடனடியாக பழுது பார்த்தல் அல்லது மேம்படுத்துதல் செய்து தினசரி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த சாலைகள் மிக முக்கியமானவை, இந்த சாலைகள் திருவண்ணாமலை, திருச்செந்தூர் மற்றும் பழனி போன்ற குறிப்பிடத்தக்க யாத்திரை மையங்கள் மற்றும் பல வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கிறது. தரம் உயர்த்தப்பட்டதும், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை மற்றும் ஆற்காடு-திண்டிவனம் சாலைகள் முக்கியமான யாத்திரை மையமான திருப்பதிக்குச் செல்லும் குறுகிய வழித்தடங்களாக அமையும்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார்.

30 கிமீ நீளமுள்ள மதுரை மேற்கு ரிங் ரோடு ஆனது, எய்ம்ஸ், மதுரை-கொச்சின் சாலை மற்றும் கோடை சாலையை இணைக்கும், மேலும், மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த மதுரை பேருந்து நிலையத்தையும், மத்திய காய்கறி மற்றும் மலர் சந்தையையும் NH44 (ஸ்ரீநகர்-கன்னியாகுமரி சாலை) உடன் இணைக்கும். இதற்கான திட்ட செலவு 1,200 கோடி.

கோயம்புத்தூருக்கான 3,480 கோடி மதிப்பிலான அரை வளைய சாலை மார்ச் 2018 இல் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. கரணம்பேட்டையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மதுக்கரையிலிருந்து கரணம்பேட்டை வரை என இரண்டு கட்டங்களாக இதை மேற்கொள்ளலாம்.இதற்காக  463.4 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 536 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அமைச்சர் வேலு கூறினார்.

கோவை-சத்தியமங்கலம் சாலையானது,  ஊட்டி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை மற்றும் சத்தியமங்கலம்-பவானி சாலையை இணைக்கிறது. கோயம்புத்தூரிலிருந்து சத்தியமங்கலம் வரையிலான திம்பம் மலை வழியாக கர்நாடகத்திற்கு செல்லும் இரண்டு பாதைகள் பல வளைவுகளுடன் உள்ளன. NHAI ஆனது 90 கி.மீ தொலைவுக்கு கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் நான்கு வழிச்சாலை மற்றும் சத்தியமங்கலம்-மாநிலங்களுக்கு இடையேயான எல்லை வரை இருவழிச்சாலைக்கு திட்டமிட்டுள்ளது. "காட் பிரிவில் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றிற்காக மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பு சாலையை மேம்படுத்த அமைச்சகம் பரிசீலிக்கலாம்" என்று அமைச்சர் வேலு கூறினார். இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உட்பட திட்ட செலவு 1,920 கோடி.

NH-68 சேலம்-உளுந்தூர்பேட்டை பிரிவில் உள்ள எட்டு புறவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலையாக உடனடியாக விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் மாநில அரசு மத்திய நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் எடுத்துக் கூறியுள்ளது.

நான்கு வழிச்சாலைக்குள் இருவழி புறவழிச்சாலை இருப்பது அடிக்கடி சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. "அங்கு இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையிலும், நான்கு வழிச்சாலையில் இருந்து இரு வழிப்பாதையிலும் இந்த பைபாஸ்களின் சந்திப்புப் புள்ளிகளில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன" என்று அமைச்சர் வேலு கூறினார். ஏப்ரல் 2016 மற்றும் ஜூலை 2021 க்கு இடையில், 715 விபத்துகள் நடந்தன, இதன் விளைவாக 169 இறப்புகள் மற்றும் 309 பெரிய காயங்கள் ஏற்பட்டன. சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டம் முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk Highway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment