போட்டோகிராபராக மாறிய கருணாநிதி… அபூர்வ படத்தை வெளியிட்டு நெகிழ்ந்த கனிமொழி!

Tamil News Update : உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Kanimozhi MP Twit Wishes For Photography Day : உலக புகைப்பட தினமான இன்று திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந் தேதி உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்பட கலைஞர்களின் திறமையையும போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த தினத்தில் பலரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களையும் தங்களுக்கு நெருங்கமானவர்களின் அரிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தனது தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் அரிய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கனிமொழி பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை எடுத்த சிவபெருமாள் என்ன புகைப்பட கலைஞர் இந்த பதிவுக்கு பதில் தெரிவித்துள்ள நிலைில், இதனை பார்த்து மனம் நெகிழ்ந்து கனிமொழி அவரை சந்திக்க விரும்புவதாக அவருக்கு பதில் அளித்தார்.

கனிமொழி வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கையில் கேமராவுடன் தனது துணைவியார் ராஜாத்தி அம்மாள் உடன் இருக்கிறர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu kanimozhi mp shared karunanidhi rare photo

Next Story
ஆளுனரை சந்தித்த இபிஎஸ்- ஓபிஎஸ்: கொடநாடு கொலை வழக்கில் திமுக பழி வாங்குவதாக புகார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com