Advertisment

Tamil News Today : ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க இன்று முதல் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று; ஆகஸ்ட் 23 முதல் பதிவிறக்கம் செய்யலாம்- அரசு அறிவிப்பு

Tamilnadu Live News Update : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

கொரோனா இறப்பு: இழப்பீடுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிடுக

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதலை வெளியிடுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல இறப்பு சான்றிதழை வழங்குவதற்கு எளிமையான நடைமுறையை வகுத்து அதுதொடர்பான வழிகாட்டுதலையும் அதிகாரிகள் வெளியிட வேண்டும்.

மேலும் படிக்க : நீட், ஜெய் ஹிந்த்… பாஜகவில் குழப்பம்; தலைவர்கள் இடையே முரண்பாடு!

முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம்

முதல்வரின் தனிப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டார்.

ரூ. 3லட்சம் கோடி மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்கள்

நாடு முழுவதும் மின்பகிர்மானத் திட்டங்களுக்கு ரூ.3 லட்சத்து 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்களை நீக்க டிவிட்டருக்கு உத்தரவு

சமூக ஊடக பக்கங்களிலிருந்து ஆபாசப் படங்களையும், விஷயங்களையும் ஒரு வாரத்துக்குள் நீக்குமாறு அந்நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குநருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் இயல்பை விட 21% கூடுதல் மழை

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூன் மாதம் இயல்பை விட 21 விழுக்காடு மழை அதிகமாக பெய்துள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:30 (IST) 01 Jul 2021
    ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து - பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு

    ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது; இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.



  • 22:26 (IST) 01 Jul 2021
    சென்னை மாநகராட்சியில் ஜூன் 2ம் தேதி தடுப்பூசி முகாம்கள் இயங்காது

    தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் பெருநகர சென்னை மாநகராட்சியின் தடுப்பூசி முகாம்கள் நாளை ஜூன் 2ம் தேதி இயங்காது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி கையிருப்பு வந்தவுடன் தடுப்பூச் முகாம்கள் மீண்டும் வழக்கம் போல இயங்கத் தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



  • 20:30 (IST) 01 Jul 2021
    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4,481 பேருக்கு கொரோனா; 102 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 102 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 18:51 (IST) 01 Jul 2021
    ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழுவினர் அண்ணாத்த படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும், விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.



  • 18:37 (IST) 01 Jul 2021
    சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது என ஒன்றிய அரசு ஆராய வேண்டும் - அமைச்சர் மா.சு பேட்டி

    சென்னை ஐஐடி நிறுவனத்தில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுவதாகக் கூறி அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பேரசிரியர் ஒருவர் ராஜினாம செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது; சென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது என்று ஒன்றிய அரசு ஆராய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:32 (IST) 01 Jul 2021
    பாளை. மத்திய சிறையில் உயிரிழந்த கைதியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

    பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 17:59 (IST) 01 Jul 2021
    மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை - நீர்வளத்துறை அமைச்சர் தகவல்

    மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதா தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.



  • 17:34 (IST) 01 Jul 2021
    ஸைடஸ் காடிலா நிறுவனம் தடுப்பூசி அனுமதி கோரி விண்ணப்பம்

    குஜராத்தை சேர்ந்த ஸைடஸ் காடிலா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி 12-18 வயதினருக்கு செலுத்துவதற்காக அனுமதி கோரியுள்ளது.



  • 17:30 (IST) 01 Jul 2021
    பிரதமர் மோடி பெருமிதம்

    தற்சார்பு பாரதத்தின் சாதனை "டிஜிட்டல் இந்தியா" என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.



  • 17:29 (IST) 01 Jul 2021
    சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை : அமைச்சர் புது உத்தரவு

    மதுரை தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்கப்பட்டதை தொடர்ந்து, தனியார் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 17:23 (IST) 01 Jul 2021
    சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை : அமைச்சர் புது உத்தரவு

    மதுரை தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்கப்பட்டதை தொடர்ந்து, தனியார் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் அனுமதி பெற்று செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 16:43 (IST) 01 Jul 2021
    புதுச்சேரியில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைக்க ஒப்புதல்

    புதுச்சேரியில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தகவல் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 16:41 (IST) 01 Jul 2021
    குழந்தை கடத்தல் குற்றவாளிகளுக்கு கொரோனா பரிசோதனை

    மதுரை தனியார் காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகளை விற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 குற்றவாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.



  • 16:39 (IST) 01 Jul 2021
    சென்னை வந்தடைந்த 4 லட்சம் தடுப்பூசிகள்

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி நிறைவடைந்ததை தொடர்ந்து புனேவில் இருந்து இன்று 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • 16:06 (IST) 01 Jul 2021
    கூட்டுறவு சங்க கடன் விவரங்களை இணையதளத்தில் வெளியிடும் விவகாரம்

    கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட கடன் மற்றும் பயனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 16:05 (IST) 01 Jul 2021
    கூட்டுறவு சங்க கடன் விவரங்களை இணையதளத்தில் வெளியிடும் விவகாரம்

    கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட கடன் மற்றும் பயனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.



  • 15:45 (IST) 01 Jul 2021
    சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு என புகார்

    சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு என புகார் தெரிவித்து, ஐஐடியில் இருந்து வெளியேறுவதாக உதவி பேராசிரியர் விபின் புதியதாத் அறிவித்துள்ளார். ஐஐடி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தில் விபின் புதியதாத் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.



  • 15:37 (IST) 01 Jul 2021
    குழந்தைகள் விற்பனை விவகாரம்; இடைத்தரகர்கள் செல்வி, ராஜா கைது

    மதுரையில் உள்ள தனியார் காப்பகத்தில் குழந்தைகளை விற்ற விவகாரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட செல்வி மற்றும் ராஜா ஆகியோரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 15:27 (IST) 01 Jul 2021
    உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

    ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



  • 15:22 (IST) 01 Jul 2021
    பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

    சிவசங்கர் பாபா பள்ளியில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள், விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது



  • 15:06 (IST) 01 Jul 2021
    சசிகலாவால் அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்

    சசிகலா எத்தனை கோடி பேரிடம் பேசினாலும் அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான உதயகுமார் கூறியுள்ளார்.



  • 14:48 (IST) 01 Jul 2021
    நீட் தேர்வில் விலக்கு அளிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜகவிற்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.



  • 14:01 (IST) 01 Jul 2021
    ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

    12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்மொடி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் அறிவிப்பு.



  • 13:58 (IST) 01 Jul 2021
    மதனின் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

    பெண்களுக்கு எதிராக கொடுமைகள் ஏதும் அவர் செய்யவில்லை என்று மதன் தரப்பு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதாடியுள்ள நிலையில் மதனின் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு.



  • 13:27 (IST) 01 Jul 2021
    நீட் தேர்வில் விலக்கு அளிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜகவிற்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.



  • 13:07 (IST) 01 Jul 2021
    காவிரியில் நீர் வரத்து

    ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 3000 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டது. மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.



  • 12:53 (IST) 01 Jul 2021
    ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு தடை கோரிய மனு

    ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு தடை கோரி வழங்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரை கிளை. முதல்வர், அமைச்சர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமனறம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.



  • 12:29 (IST) 01 Jul 2021
    வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து தப்பலாம் - ரந்தீப் குலேரியா

    கொரோனா டெல்டா ப்ளஸ் வகையின் ஆபத்து குறித்து போதுமான தகவல்கள் இல்லை. மக்கள் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.



  • 12:25 (IST) 01 Jul 2021
    கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை : உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆலோசனை

    உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, 13 பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.



  • 12:17 (IST) 01 Jul 2021
    வானிலை அறிக்கை

    காஞ்சி, திருவண்ணாமலை, சேலம், மதுரை, தேனி உட்பட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:57 (IST) 01 Jul 2021
    ஊரடங்கில் மேலும் புதிய தளர்வுகள் - முதல்வர் நாளை ஆலோசனை

    தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.



  • 11:34 (IST) 01 Jul 2021
    ஸ்புட்னிக் லைட் 3ம் கட்ட சோதனைக்கு அனுமதி மறுப்பு

    இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட சோதனைகளை நடத்த டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.



  • 10:42 (IST) 01 Jul 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 விலை உயர்வு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து ரூ.35,554-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,443-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 10:30 (IST) 01 Jul 2021
    துணை குடியரசு தலைவருக்கு எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து

    துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 10:17 (IST) 01 Jul 2021
    அரசு ஊழியர்களுக்கான காப்பீடு -கட்டணம் உயர்வு

    தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமலாகிறது. மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொகை 180 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



  • 09:50 (IST) 01 Jul 2021
    கொரோனாவால் ஒரே நாளில் 1,005 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் ஒரே நாளில் 48,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 1,005 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 61, 588 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.



  • 08:36 (IST) 01 Jul 2021
    சிலிண்டர் விலை உயர்வு

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்ந்துள்ளது. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50ஆக விலையேற்றப்பட்டுள்ளது.



Tamilnadu Live News Udpate Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment