Advertisment

வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் சிங்கம், சிறுத்தை மரணம்: கூண்டுக்குள் பலியானது எப்படி?

Tamilnadu Update : ஊழியர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், விலங்குகளுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்தது.

author-image
D. Elayaraja
New Update
வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் சிங்கம், சிறுத்தை மரணம்: கூண்டுக்குள் பலியானது எப்படி?

Leopardess, Lion die in Vandalur Zoo : சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், சிறுத்தை மற்றும் சிங்கம் கூண்டுக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, என்று அழைக்கப்படும் இந்த பூங்கா நகரின் தெற்கு புறநகரில் அமைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் 170-க்கு மேற்பட்ட வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒரு சிறுத்தை மற்றும் சிங்கம் என 2 விலங்குள் கூண்டுக்குள் இறந்து கிடந்துள்ளது.

இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்த சிறுத்தை மற்றும் சிங்கம்,  உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய விலங்குகளிடமிருந்து மாதிரிகளை எடுத்த பிறகு இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் பூங்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் 18 வயதுடைய ஜெயா என்ற சிறுத்தை மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக இறந்ததாகவும், 5  வயதான விஷ்ணு என்ற சிங்கம் உணவுக்குழாய் பிரச்சனையால் இறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக மனிதர்களிடம் இருந்து கொரோனா தொற்று விலங்குகளுக்கு பரவியதா என்பதைக் கண்டறிய விலங்குகளிடமிருந்து மாதிரிகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாதிரிகள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து விலங்குகள் இறப்புகள் நடந்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஊழியர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், விலங்குகளுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகம் எழுந்ததால், விலங்குகளுக்கு ஸ்வாப் பரிசோதனை செய்ய முடிவு செய்தோம், ”என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் பெரிய பூனைகள் மாதிரிகளை சேகரிக்க நாசி துணியை செருகுவதற்கு வசதியாக, 'ஸ்க்யூஸ் கேஜ்' எனப்படும் சிறப்பு கூண்டுக்கு மாற்றப்பட்டன. பிரேதப் பரிசோதனையில் பெண் சிறுத்தை மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாகவும், சிங்கம் உணவுக்குழாய் பிரச்சனையால் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் “மனிதர்களைப் போலவே விலங்குகளும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா வைரஸால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் சிங்கம் கவிதா (23) புற்றுநோயால் இறந்தது என்றும் முன்னெச்சரிக்கையாக உயிரியல் பூங்காவில் உள்ள சுமார் 16 விலங்குகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Vandalur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment